Sunday, 9 October 2011

உலகின் மிககுறைந்த விலை டாபிளட் கம்ப்யூட்டர்

Source: YahooNews


புதுடில்லி: இந்திய கல்வித்துறையில் தகவல் தொழில்நுட்பத்துறையினை ஓருங்கிணைக்கும் விதமாக குறைந்த விலையில் டாபிளட் கம்ப்யூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. கனடா வாழ் இந்தியரான சுனீத்சிங்தூளியின் இங்கிலாந்து நிறுவனமான டேட்டாவின்ட் நிறுவனம் இந்த டாபிளட் கம்ப்யூட்டரை தயாரித்துள்ளது. இதன் தயாரிப்பு செலவு ரூ. 3000 என்றாலும், ரூ. 1,750-க்கு ( 35 டாலருக்கு) விற்க முடிவு செய்துள்ளது. இந்த கம்ப்யூட்டரில் 2 ஜி.பி மெமரி கார்டுகள், 256 எம்.பி.‌பைட்ஸ்களுடன், அதே அளவு ராம்களும் உள்ளன. கூகுள், ஆன்ட்ரியாட், வி.ஃபீ இணைப்பு வசதிகளும் உள்ளன. தற்போது பயன்படுத்தப்படும் லேப்டாப்களுக்கு போட்டியாக அனைத்து வசதிகளுடன் இந்த டாபிளட் கம்ப்யூட்டர்கள் இருக்கும் என இந்நிறுவனத்தின் நிர்வாகி கூறினார். வரும் டிசம்பர் மாதம் சந்தையில் அறிமுகமாக உள்ளது.. உலகின் மிக குறைந்த விலையிலான டாபிளட் கம்ப்யூட்டர் எனவும் இது அழைக்கப்படுகிறது.