Friday, 22 June 2012

பூம்புகார்

பிறப்பு: ராஜபாட்டை





பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை:

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.


ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.

17. நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
( இக்கட்டுரையை எழுதியவர் மலையமான்: நன்றி முகம் மாதஇதழ் ஏப்ரல் 2010)

இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)

பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 200102ல் ஆய்வு மேற்கொண்டார்.

அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.

பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது. ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது. 

ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இதுநிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்.


கடலுக்கடியில் பூம்புகார்..




கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.

வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?
உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.

தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?

அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.

இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.

தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.

ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?

# பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.

இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?

# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?

# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.





இது போல பல தமிழர் வரலாற்றை மறைக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகின்றது .

தமிழனக்கு தமிழன் தான் முதல் எதிரி

பிறப்பு: தமிழ் உதயம்

வனை பார்க்கும் போதே சந்தேகத்துக்குரியவனாக தான் தெரிந்தான். ஒரு கோணத்தில் பார்த்தால் பரிதாபத்துக்குரியவனாகவும் இருந்தான். கைலி கட்டி இருந்தான். சற்றே அழுக்கான டி.சர்ட் அணிந்து இருந்தான். முள் முள்ளாய் தாடி. கைலியை கையில் தூக்கி பிடித்து கொண்டு, அந்த கடைத் தெருவுக்குள் நுழைந்தான்.

சின்னதும், பெரிதுமாய் - வரிசையாய் நகைக்கடைகள். அவன் நகை விற்கத்தான் வந்து இருக்கிறான். அவனை பார்த்த ஒருவர், "சார் நகை வாங்கணும்மா.. விற்கணும்மா.." என்று கேட்டார். இடைத்தரகர் போலும். "இல்ல சாரே" என்று வேகமாக நடந்தான்.

ஒரு கடையில் முதலாளியை தவிர எவரும் இல்லை. அந்த கடைக்குள் நுழைந்தான். முதலாளி ஒரு வார இதழை படித்து இருந்தார். நிமிர்ந்து "என்னப்பா"

"சார் ஒரு ஜுவல் விற்கணும்"

"உட்காருங்க" என்ற கடை முதலாளி, இவனை மேலும், கீழும் பார்த்தார். "உங்க நகையா இல்ல தெரிஞ்சவங்க நகையா"

"எனது நகை தான் சார். மனைவிக்கு உடம்பு சரியில்ல"

"நீங்க சிலோனா"

"ஆமா சார்" என்றான் தயங்கியவாறே.

"இருங்க. உறைகல் எடுத்து வரேன்" என்று கடைக்குள்ளேயே சின்னதாய் இருந்த அறைப்பக்கம் திரும்பி, "டேய் இங்க வா" என்று யாரையோ அழைத்தார். ஒரு சிறுவன் வந்தான். "பார்த்துக்கோ " என்றவர், அந்த சின்ன அறைக்குள் போனார். போன சில நிமிஷங்களில் திரும்ப வந்தார்.

"காப்பி குடிக்கிறிங்களா இல்ல கூல் டிரிங்க்ஸ்"

"எதுவும் வேணாம் சார்"

"டேய் ரெண்டு காப்பி வாங்கி வா" என்று பையனை அனுப்பினார். கடைக்காரர் நகையை எடை போட்டார். பிறகு உறைக்கல்லில் தேய்த்தார். உறைக்கல்லை அப்படியும், இப்படியும் பார்த்தார். பிறகு நகையையே பார்த்தார். இவனுக்கு அவர் வேண்டுமென்றே தாமதப்படுத்துவது போன்று தோன்றியது. "தங்கம் அவ்வளவு நல்லா இல்ல"

"அதுக்கு என்ன தொகையோ அதக் கொடுங்க"

"இருங்க. காபி வரட்டும்" பையன் காபியோடுவந்தான். "காபி குடிங்க"

அவன் காபி டம்ளரை எடுத்து வாயில் வைத்து போது - வாசலில் மோட்டார் சைக்கிள் சப்தம். எல்லோரும் திரும்பினர். போலிஸ் இன்ஸ்பெக்டர். பின்னாலேயே சைக்கிளில் இரண்டு ஏட்டுகள்.

இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தார். "வாங்க சார். இவன் தான் சிலோன்"... உள்ளே நுழைந்த வேகத்தில் இன்ஸ்பெக்டர், அவன் பிடரியில் குத்தினார். "சிலோனா. திருடி விற்க வந்து இருக்கீயா" என்று இன்னொரு அடி அடித்தார்.

"இல்ல சார். இது என் நகை. நா திருடன் இல்ல"

"எனக்கு தெரியாதா. நீ சொல்றியா. ஏட்டு விலங்கை போடு. போலீஸ் ஸ்டேஷ்ன்ல வந்து பேசு. சயனைட் வைச்சு இருக்கானான்னு பாரு. தின்னு தொலைக்கப் போறான்... என்ன செட்டியாரே" என்று ஸ்டூலில் அமர்ந்தார் இன்ஸ்பெக்டர்.

"சாருக்கு பெப்சி வாங்கிட்டு வாடா" என்று கடைக்காரர் இன்னொரு ஸ்டூலில் அமர்ந்தார். "பேப்பர் படிச்சிட்டு இருந்தேன். நகை விக்கணும்னு வந்தான். எனக்கு சந்தேகம். சிலோன் ஆளு மாதிரி இருக்கு. நகையும் மூணு பவுனு. சிலோனான்னு கேட்டதுக்கு யோசிச்சு மண்டை ஆட்டினான். உட்கார சொல்லிட்டு ரூமுக்குள் இருந்த போன்ல தகவல் சொன்னேன்"

இன்ஸ்பெக்டர் சிகரெட்டை பற்ற வைத்தார். பெப்சி வந்தது. குடித்தார்.

"யோவ் ஏட்டு. ரிக் ஷால ஏத்து அவனை. தீவிரவாதி மாதிரி இருக்கான்."

"சார். நா திருடன் இல்ல. மனைவிக்கு உடல் நலம் இல்லை. வைத்திய செலவுக்கா செயினை விற்க வந்தேன். என்னை விட்டுடுங்க" என்று கெஞ்சினான். "வாயை மூடுடா" என்று முகத்தில் ஒரு குத்து குத்தினார். பல் உடைந்தொ என்னவொ. ரத்தம் கொட்டியது. கடைக்கு முன் கூட்டம் கூடி விட்டது.

ரிக் ஷாவுடன் வந்தார் ஏட்டு. ரிக் ஷாவில் ஏற்றினர். "சைக்கிள் இருக்கட்டும். ரிக் ஷால ஏறுங்க. தப்பிச்சிடப்போறான்" என்றார் இன்ஸ்பெக்டர். ரிக் ஷா கிளம்பியது. "ஜாக்கிரதை. தப்பிச்சான்னா தொலைச்சோம்" வெளியே கூட்டம் வேடிக்கை பார்த்தது. "மடில குண்டு வைச்சு இருக்கானாம்" யாரோ சொன்னார்கள்.

ஸ்டேஷனில், "நீ புலி தானே" முகத்தில் ஒரு அறை விழுந்தது.

"இல்ல சார். நா இங்க முகாம்ல தான் இருக்கேன். மனைவி சுகவீனமா இருக்காங்க. முகாம்ல டாக்டர்ஸ் சாரியா பார்க்கல. அதான் ப்ரைவேட் ஹோஸ்பிடல்ல பார்க்கலாம்னு"

"பொய்யா சொல்றே. நீ புலி தானே" முகத்தில் இன்னொரு அறை.

"பனியன் லுங்கியை கழட்டு. அருணா கொடியையும் கழட்டுடா" அவன் ஜட்டியுடன் நின்றான்.

"லாக்கப்புல வைச்சு நாலு மிதி மிதிச்சா தான் சொல்வான் போல. உள்ள கொண்டு போய்யா" கான்ஸ்டபிள்கள் அவனை உள்ளே இழுத்து போயினர். இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். "யோவ் ரைட்டரை கூப்பிடு. இவன் சொல்றதை எழுத சொல்லு" என்றாவாறே இவன் வயிற்றில் ஒரு குத்து குத்தினார். "பேரு என்னடா"

"பத்மனாபன்"

"எந்த ஊருடா"

"மன்னார்"

"எந்த இயக்கம்டா"

"இல்ல சார்" வயிற்றில் இன்னொரு குத்து. "சார் நீங்க எம்.ஜி.ஆர் நகர் முகாம்ல என்னை விசாரிச்சு பாருங்க" என்று சற்றே தைரியம் வந்தவனாக சொன்னான். "அகதினா அடையாள அட்டை எங்கேடா"

"முகாம்ல இருக்கு"

"அத அங்க வைச்சிட்டு - வெளிய எதுக்கு வந்தே" என்றவாறு வயிற்றில் ஒரு குத்து குத்த - வயிற்றை பிடித்து கொண்டு உட்கார்ந்தான். "சார், செத்து தொலைச்சிடப் போறான்"

"செத்தா நல்லது தான். புலின்னு பட்டைய கட்டிடலாம்"

"எந்திரிடா" அவன் தட்டு தடுமாறி எழுந்தான். "உண்மைய சொல்லு. இங்க யார் யார் இருக்கா"

"இங்க மனைவி பிள்ளைங்களோட இருக்கேன். மனைவி பேர் கலாவதி. இரண்டு குழந்தைங்க... செல்வம், ராஜேஸ்வரி"

"யாருகிட்ட புளுகறே. எத்தனை இடத்தில் திருடினே. எவ்வளவு நகைய வித்தே. உன் கூட்டாளிங்க எல்லாம் யாரு"

"சார். நா அகதி. விசாரிங்க சார்"

"அடையாள அட்டைய எடுத்துவராம்ம பேச்சா பேசுற." என்று வயிற்றில் மீண்டும் குத்து. இப்போது சரிந்து விழுந்தவன் எழுந்திரிக்கவே இல்லை. "கிடக்கட்டும். நீ போய் முகாம்ல விசாரி. பத்மனாபன்னு எவனும் இருக்கானான்னு கேளு. பொண்டாட்டி பேரு கலாவதியாம். விசாரி. அடையாள அட்டை இருந்தா வாங்கிட்டு வா. நானும் அந்த ஏரியா ஸ்டேஷனுக்கு போன் பண்றேன். நீ முதல்ல ஸ்டேஷனுக்கே போ. யோவ் ஏட்டு நீயும் போ" இரண்டு பேர்களும் கிளம்பினார்கள்.

"டேய், உண்மைய சொல்லிடு. அடிவாங்கி செத்தாலும் சாவேன் - உண்மையை சொல்ல மாட்டேன்னு அடம்பிடிக்கிறே. வந்த இடத்துல கம்னு இருக்க வேண்டியது தானேடா. ம். உங்களால எங்களுக்கு தலைவலி"

"யோவ்.. இவன் மூஞ்சி தண்ணிய தெளி. இன்னும் நாலு போடு போட்டா தான் உண்மைய சொல்வான் போலிருக்கு"

"மூக்கில் இருந்து நிறைய ரத்தம் வருது சார்"

"இனி கால்ல தான் போடணும். உடம்புல ஒரு இடம் பாக்கி இல்லாம்ம அடிச்சாச்சு. உண்மைய சொல்வேனாங்கிறான். இவங்கள எப்படி டீல் பண்றதுன்னு தெரியல" என்ற இன்ஸ்பெக்டர், திரும்ப லாக்கப்புக்குள் நுழைந்து - உட்கார்ந்து இருந்த அவனது இரண்டு கால்களையும் பதம் பார்த்து விட்டார். அவன் அலறினானே ஒழிய - அவர் எதிர்பார்க்கும் எந்த விஷயத்தையும் சொல்லவில்லை.

அவன் தீவிரவாதியாக இருந்தால் தானே. அவன் அகதி. இன்ஸ்பெக்டர் வெளியே போனார். ரத்தம் வழிந்தது. துடைக்க அவனுக்கு மனசு இல்லை. மரத்து போனது எல்லாமே. இதற்கு முன்னும் இரண்டொரு முறை - அவனை அகதி முகாமில் இருந்து பிடித்து போய் லாக்கப்பில் வைத்து இருக்கின்றனர்.

ஒரு முறை - எங்கேயோ வெடித்த வெடிகுண்டு கேஸில் விசாரனைக்காக அவனை அழைத்து சென்றனர். இரண்டு நாள் வைத்திருந்து விட்டு விட்டு விட்டனர். பிறகு இன்னொரு முறை அகதி முகாம் அருகே ஒரு வீட்டில் கொள்ளை போனது.
போலீஸ் நாய் அகதி முகாம் வரை சென்றது. அதனால் தான் உட்பட பதினைந்து பேரை பிடித்து போய் மறு நாள் விட்டு விட்டனர். இப்போது மாதிரி, அடித்து உதைத்து சித்திரவதை செய்யவில்லை.

மணி இப்போது எத்தனை... கலாவதி தேடுவாள். கலாவதிக்கு டைபாய்டு. முகாமில் நல்ல சிகிச்சை இல்லை. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. ஆயிரக்கணக்கான அகதிகளை பராமரிப்பதே பெரிய விஷயம். இவர்களும் துரத்தி விட்டால் என்ன பண்ணுவது.

பத்து கிராம் செயின் கலாவதியிடம் மிச்சமாய் இருந்தது. இந்தியாவுக்கு வரும் போது, நிறைய நகைகளை கொண்டு வந்தார்கள். எல்லாவற்றையும் விற்றாயிற்று. பாக்கி இது மட்டும் தான். இதற்கு முன் எல்லாம் பக்கத்திலேயே உள்ள ஆசாரியிடம் விற்பதுண்டு. அவர், நமது கஷ்டத்தை புரிந்து கொண்டு அடிமாட்டு விலைக்கு கேட்பார். இப்போது அவரிடம் விற்க இஷ்டமில்லாமல் பஜாருக்கு வந்து விற்போம் என்று வந்தால் - இப்படியாயிற்று.

இப்போது தோன்றுகிறது. அவரிடமே விற்று இருக்கலாம் என்று. செயினை போலீஸ் வைத்திருக்கிறார்கள். விசாரித்து விட்டு வெளியே அனுப்பும் போது செயினை கொடுத்து விடுவார்கள் தானே.

இனி, அடுத்த கப்பல் கிளம்பும் போது - சிலோனுக்கே போய்விட வேண்டியது தான். செத்தாலும் நம் மண்ணிலேயே சாவோம். நாம் மட்டுமா சாக போகிறோம். ஒரு இனமே பூண்டோடு அழியும் போது. வாழ்ந்த போது - எல்லோருமாய் தானே வாழ்ந்தோம். ஆனால் மரணத்திற்கு அஞ்சி திசைக்கு ஒருவராய் ஓட வேண்டும். அங்கேயே சாவோம். வாழ்வதனாலும் அங்கேயே வாழ்வோம்.

உலகிற்கே ஒளிகாட்டும் ஆதவன், எங்களை மட்டும் இருளில் விட்டு விட்டு போவானா? என்றாவது எங்களுக்கு விடியல் வராதா? நாங்கள் என்ன பாவம் பண்ணினோம். இப்படி அலைந்து சிதைந்து சின்ன பின்னமாகி.

மாலையாகிவிட்டது.

அவனை எழுப்பினார்கள். "வெளிய கொண்டு வாய்யா" இன்ஸ்பெக்டர் சத்தம் போட்டார். அடி வாங்கி மயங்கி விழுந்தவன் அப்படியே உறங்கி போனான். உலகத்தையே மறந்திருந்தான். அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. "சாகிறதுக்குன்னே வந்திருக்கான். எழுந்திரிய்யா. அய்யா கூப்பிடுறாரு"

அவனால் எழ முடியவில்லை. விலங்கு பூட்டிய கை. உடம்பெங்கும் காயம். தரையில் கையை ஊன்ற முடியவில்லை. எப்படியோ தட்டு தடுமாறி எழுந்தான். "ஏப்பா, தூக்கிவிடவா..." என்று ஒரு கான்ஸ்டபிள் கிண்டலாய் கேட்டான். அவன் கண்கலங்கினான். இது எங்கள் இனத்தின் சாபக்கேடு, எதிரியும் அடிக்கிறான். சகோதரனும் அடிக்கிறான்... நண்பனும் அடிக்கிறான்.

வெளியே தடுமாறியவாறு நடந்து வந்தான். "விலங்கை கழட்டுய்யா" விலங்கை கழட்டினார்கள். "வெளிய வரும்போது அடையாள அட்டையோட வரணும்யா. நீ திருட்டுப்பய மாதிரி இருக்கே. பதிலும் சொல்ல தெரியல. அடி வாங்கினது தான் மிச்சம். நீ சொன்னது எல்லாம் சரியா தான் இருக்கு. உன் உடுப்பை மாட்டிட்டு கிளம்பு"

அவன் டிரஸ் அவன் மீது தூக்கி எறியப்பட்டது. லுங்கியை கட்டி கொண்டான். பனியன் அணிந்து கொண்டான். "இந்தா.. வேகமா கிளம்பு. பொழுது சாயறதுக்குள்ள முகாமுக்கு போய் சேரு. அப்புறம் வேற எவனும் பிடிச்சு இனி நாலு சாத்து சாத்தப்போறான்" என்று இன்ஸ்பெக்டர் சொல்ல, பெரிய ஜோக் கேட்டது போல கான்ஸ்டபிள்கள் சிரித்தனர்.

"சார். என் சங்கிலிய கொடுங்க" தயங்கினவாறே கேட்டான்.

"திரும்ப உள்ள விட்டு நாலு போடு போடணுமா. பேசாம போயிரு. சங்கிலி வேணுமாம்ல சங்கிலி. போய்யா போ" என்றார் கான்ஸ்டபிள்.

அவன் அதிர்ந்தான் செயினை தரமாட்டார்களா?

"ஒழுங்கா போய் சேரணும்மா வேணாம்மா... போ. போ" அவர்கள் விரட்டினர். அவன் மனம் சோர்ந்து நடந்தான். கைலி முழங்கால் ரத்தத்தில் நனைந்தது. கண்கள் கண்ணீரில் நனைந்தன.

என் முகவரி

பிறப்பு: தமிழ் உதயம்




தற்செயலாய் விஜயனை பார்க்க நேர்ந்தது. விஜயன் என்னை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இருவருக்குமே சங்கடம் தான். முதலில் சிரிப்பதா, வேண்டாமா என்ற சிந்தனை வரும். பிறகு பேசுவதா, வேண்டாமா என்ற கேள்வி எழும். எது எப்படியானாலும் நேருக்கு நேராய் பார்ப்பது தர்மசங்கட நிலையை தான் தோற்றுவிக்கும். விஜயன் தன்னை ஒரு விரோதியை போல பார்க்கக்கூடும்.

இதற்கு முன் நேர்ந்த எதிர்பாராத சந்திப்புகளில் அவ்விதம் தான் நிகழ்ந்திருக்கிறது. எனக்கு சிரித்த முகம். எப்போதும், நான் சிரித்து கொண்டே இருப்பதாய் சொல்வார்கள். "உங்களை திட்டணும்னு நினைச்சு வந்தா கூட திட்டத் தோணாது" என்பார்கள். ஆனால் விஜயனை பார்த்து விட்டால் என் முகம் செத்து போகும். சிரிக்க மறந்து போகும்.

நிர்மலாவை பார்க்க வேண்டி வரும்போது, இந்த மாதிரியான நிலை ஏதும் ஏற்படாது. இருவருமே என்னால் ஒரே பலன் அடைய பெற்றவர்கள் தான். நான் பார்த்து, அவள் பார்க்காமல் போனால் கூட, நான் அழைப்பேன். அவள் பார்த்து நான் பார்க்காமல் போனால் கூட அழைத்து விடுவாள். அவளுக்கான வாழ்க்கை, கவலை சாலையில் போய் கொண்டிருக்க நானும் கூட ஒரு காரணமாய் இருந்திருக்கிறேன்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க. விஜயன் என்னை விட்டு போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க. நாங்க லவ் பண்ணினோம். கல்யாணம் பண்ணி வைக்க சொன்னோம். நாலு பேருல ஒருத்தரா நீங்களும் இருந்து பண்ணி வச்சீங்க. இப்போ எங்க மண வாழ்க்கை முறிஞ்சு போச்சு. அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும். நீங்களா என் மண வாழ்க்கை முறிய காரணம். இல்லையே" என்றாள் ஒரு முறை.

"இல்ல. ஒரு கார்டியன் மாதிரி இருந்து விஜயனை பற்றி நல்லா விசாரிச்சு கல்யாண ஏற்பாடு பண்ணி இருக்கணும். என்னவோ பெரிய வீர,தீர சாகசம் செய்வதா நினைச்சு அவசரப்பட்டுட்டோமோ. உங்களுக்கு கூட எங்க பேரில் வருத்தம் அல்லது கோபம் இருக்கலாம். இவங்க தைரியம் கொடுக்கலேன்னா நாம கல்யாணம் பண்ணிக்காம்ம இருந்திருக்க கூடிய வாய்ப்பு இருந்திருக்கும்னு நினைக்கலாம் நீங்க"
 
"பேரண்டஸ் பார்த்து பண்ணி வைக்கிற எத்தனையோ திருமணம் கூட தோல்வில முடியுது. அதுக்காக பேரண்ட்ஸை பிள்ளைங்க நோகடிக்கவா போறாங்க. தலையெழுத்து. மாற்றவா முடியும். எல்லாத்துலையும் எல்லோரும் சக்ஸஸ்புல்லா இருந்தா லைப்ல த்ரில் இருக்காதுன்னு தான் கடவுள் சில பேரை சிரிக்கவும், பல பேரை அழவும் வைக்கிறான் போலும். நான் பக்குவப்பட்டுட்டேன். நான் குழந்தை இல்லை. என்னை எதுவும் பாதிக்கவும் செய்யாது. சந்தோஷப்படுத்தவும் செய்யாது"

என்னை எதுவும் பாதிப்பது கிடையாது என்று சொன்னது சரி... சந்தோஷப்படுத்தவும் செய்யாது என்று சொன்னது மனதை வருத்தமடைய செய்தது. இது என்ன மாதிரி மனநிலை? மனசு மரத்துவிட்டது. இந்த வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்கிற முடிவுக்கு வந்தவர்களால் தான் இந்த மாதிரியான மனநிலையை பெற முடியும். நிர்மலாவை இரண்டு விதமாய் பார்க்கிறேன்.

கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின் என்று. கல்யாணத்துக்கு முன் இருந்த துள்ளல், அழகு, மலர்ச்சி என்று எதுவுமே இப்போது இல்லை. சின்னதாய் மேக்கப் கூட போடுவதில்லை. அது பற்றி கூட கேட்டேன். "அப்போ மேக்கப் பிடிச்சது. இப்போ பிடிக்கலை" என்றாள். "அதான் ஏன்" என்று கேட்டேன். "தெரியலை" என்றாள்.

இந்த தெரியலை என்கிற பதில் தான் மனசை காயப்படுத்தியது. நிர்மலா போல விஜயன் இல்லை. இப்போது ஆள் தளதளவென்று இருந்தான். அவன் சந்தோஷமாய் இருப்பதாய் தோன்றியது. மகிழ்ச்சி தான். ஆனால் தன்னை சுற்றி உள்ளவர்களின் சந்தோஷத்தை கொன்று வாழுதல் என்ன நியாயம். மறு கல்யாணம் பண்ணி கொண்டான். எப்படி முடிந்தது. அப்போ முதல் மனைவி... அந்த முதல் சந்தோஷங்கள்... இதுக்கெல்லாம் அர்த்தமே இல்லையா? எல்லாம் அவ்வளவு தானா? முடிஞ்சு போச்சா? மறந்து விட வேண்டியது தானா? " என்று கேட்டேன் நிர்மலாவிடம்.

விஜயனின் செய்கையால் அவள் வலியின் வலியை உணர்ந்தாளோ என்னவோ... எனக்கு வலித்தது. "உங்களை மாதிரி என்னை மாதிரி இருப்பவர்களால் தான் இதை யோசிக்க முடியும். அவர் வேற டைப். யாரும் எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன. எனக்கான தேவைகள் முக்கியம்" என்கிற மனநிலையில் வாழுபவர்களால் தான் எப்படியும் வாழ முடியும்" என்றாள்.

விஜயன், நிர்மலா திருமணம் நான்கே பேரின் முன்னிலையில் தான் நடந்தது. விஜயனின் இரண்டாம் திருமணம் பெரிய மண்டபத்தில் நடந்தது. முதல் திருமணம் என்றே பேசப்பட்டது. "வயசுக்கோளாறு. நல்ல பையன். அந்த சண்டாளி தான் என் புள்ளைய கெடுத்துட்டாள்" என்று பெண் வீட்டாரிடம் வெட்கமின்றி பொய் உரைத்தார்கள். விஜயனின் முதல் திருமணத்துக்கு வந்தவர்களில், எவரையும் இரண்டாவது திருமணத்துக்கு அடைக்கவில்லை. விஜயனின் இரண்டாவது திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவனை சந்திக்க நேர்ந்தது. அவன் மனைவியுடன் கடைத் தெருவில். "மேரேஜுக்கு யாரையும் கூப்பிடல. சும்மா சிம்பிளா நடத்தினோம்" என்று நழுவினான். அவன் மனைவியை ஒரு மரியாதைக்கு கூட அறிமுகம் செய்து வைக்கவில்லை.

"சுரேஷ்... தயவு செய்து இனி இங்க வராதீங்க. விஜயனுக்கு நம்ம ப்ரண்ட்ஸ் யாரும் வீட்டுக்கு வர்றது பிடிக்கல. இந்த காரணத்துக்காகவும் எங்களுக்குள் சண்டை வரணுமா " என்றவள் தொடர்ந்தாள் " அவருக்கு சந்தேகப் புத்தி. காதலித்து மணந்தவள் மேல சந்தேகம் வருமா? ஆச்சரியமா இருக்கு. தயவு செய்து புரிஞ்சுக்கங்க. இனி நீங்க இங்க வர வேணாம். வேற ஏதாவது ஒரு காரணம் சொல்ல சொன்னார். எனக்கு பொய் சொல்ல வரல. உண்மையை சொல்லிட்டேன்"

"இனி வரமாட்டோம் நிர்மலா. எங்களால் யாரும் துயரப்பட வேண்டாம்" என்று வந்தேன். நண்பர்களாய் பழகியவர்களை தன் மனைவியுடன் சேர்த்து சந்தேகப்படுகிறான். அது தான் தனது இரண்டாவது அறிமுகப்படுத்தவில்லை போலும்.

"மனசுக்கு ஒருத்தர் பிடித்திருந்தா எந்த தவறுகளுமே தவறா தெரியாது. பிடிக்கலன்னா எந்த நல்லதுமே நல்லதா தெரியாது" என்றாள் அவனை விட்டு விலகி வந்த பிற்பாடு.

"எது என்னை கவர்ந்தது அவர்கிட்ட தெரியல. இன்னிக்கு எது வெறுக்க செய்யுது. அதுவும் தெரியல. எப்படி வாழ்ந்தோம். அதுவும் தெரியலை" என்றாள்.

"வாழுவதாக சொன்னோம். ஆனா வாழ்ந்தோமான்னு தெரியலை" என்றாள்.

உண்மை தான். படிப்பதாக பசங்கள் சொல்வார்கள். படிப்பார்களா என்று தெரியாது. அழுவதாய் குழந்தை சொல்லும். அழுமா என்று தெரியாது. சிரிப்பதாய் சொல்வோம். சிரிக்கும் படியான சூழல் இருக்கிறதா என்றால் கிடையாது.

நிர்மலாவுக்கு இன்னுமொரு திருமணம் அமைத்து கொடுக்கும் பொறுப்பு இருப்பதாய் நான் நினைத்தேன். நிர்மலாவிடம் இது பற்றி பேசிய போது என் கருத்தை தவிர்க்கவும் இல்லை. ஆமோதிக்கவும் இல்லை. இது எந்த மாதிரியான மனநிலை.

நிர்மலாவின் பெற்றோர், நிர்மலாவை நிராகரித்திருந்தனர். ஹாஸ்டலில் தங்கி இருக்கிறாள். பல மாதங்களாய், நிர்மலாவுக்கு திருமணம் செய்து வைப்பதிலேயே என் சிந்தனை இருந்தது. அதற்கான முயற்சியில் முழு மூச்சாய் இறங்கினேன். பத்திரிகை விளம்பரங்களை பார்த்தேன். என் சகோதரிகளின் திருமணத்துக்கூட இத்தனை பிரயத்தனப்பட வில்லை என்று தோன்றியது.

எந்த ஜாதியில் வரன் தேடுவது. ஜாதி மத பேதமில்லை என்று வரும் விளம்பரத்தை முக்கியமாக பார்த்தேன். எனது ஒவ்வொரு முயற்சியையும் நிர்மலாவிடம் சொல்லியே செய்தேன்.

சிலர்"நீங்க அந்த பொண்ணுக்கு என்ன உறவு" என்று கேட்டபோது "ப்ரண்ட்" என்றேன். என்னவோ போல பார்த்தார்கள். நம்பாமல் பார்த்தார்கள். நாம் இன்னும் எவ்வளவோ கடக்க வேண்டி இருப்பதாக தோன்றியது. எங்கே நிர்மலாவுக்கு திருமணம் செய்து வைக்காமலே போய்விடுவோமோ என்று அச்சமாய் இருந்தது. என் மன உளைச்சலை நிர்மலாவிடம் சொன்னேன். சிரித்தாள்.

"இல்லீங்க. நீங்க எனக்காக கஷ்டப்பட வேண்டாம். மனிதர்களோட சராசரி வயசு அறுபதுன்னா நான் அதில் பாதியை கடந்துட்டேன். பாதி கிணறு தாண்டிய மாதிரி தான். இனி பாதி தான். கண்ணை முடி திறக்கறத்துக்குள்ள காலம் ஓடிடும். குழந்தை ஆசை வரும். தெரிஞ்சவங்க குழந்தை, ரோட்டுல போற குழந்தையை கொஞ்சிப்பேன். எல்லொருக்கும் எல்லா சந்தோஷமும் கிடைக்கிறதில்லை" என்றாள்.

திருமண பந்தம் இல்லாமல் வாழ முடியாதா? முடியும். அது சம்பந்தப்பட்டவர்களின் மனவோட்டத்தை பொறுத்தது. நிர்மலா நிராகரிக்கவில்லை. நல்ல மனிதனுக்காக காத்திருக்கிறாள். அவளது சுபாவம் உறவுகளுடனும் உற்றாருகளுடனும் சேர்ந்து இருப்பது. ஆனால் உறவுகளை இழந்து தனிமரமாய் நிற்பது தான் மனசுக்கு கஷ்டமாய் இருந்தது. இது பற்றி நிர்மலாவிடம் பேசிய போது நிர்மலா சொன்னாள்.

"எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தார் இருக்கார். அவருக்கு ஏஜ் ஆயிடுச்சு. முப்பத்தி ஐந்துக்கு மேல. குடும்ப பாரத்தை சுமந்தப்படியால் திருமணம் செய்யல. திருமணம் செய்யணுங்கிற எண்ணம் இல்லாம இருந்துட்டார். ரெம்ப நல்ல மனிதர். அவருக்கு என்னை பிடிக்கும். எனக்கும் அவரை பிடிக்கும். ஆனா காதல் கிடையாது. நீங்க எனக்கு ப்ரயத்தனப்படுவதால் நீங்களா அவர்கிட்ட பேசி பாருங்க. நான் சொன்னதா வேண்டாம்"

"சொல்லுங்க. யாரு? எனக்கு தெரியுமா அவரை" என்று கேட்டேன். "தெரியும். அவர் பெயர், முகவரி தரேன். பாருங்க. அவர் பெயர், முகவரி வரேன். பாருங்க. அவருக்கு ப்ரியம் இல்லேன்னா வற்புறுத்த வேண்டாம். அதே சமயம் அவரை விட வேறு நல்ல மனிதர் எனக்கு கிடைக்க மாட்டார்னு நினைக்கிறேன். ஒரு வேளை அவருக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு தெரிஞ்சதுன்னா இனி நீங்க எனக்கு கல்யாணம் பண்ணும் முயற்சியை கைவிடுங்க" என்று சொன்னாள். ஒரு காகிதத்தை எடுத்து பெயர், முகவரி எழுதி மடித்து என்னிடம் கொடுத்தாள்.

பிரித்தேன். அதில் என் பெயர்... முகவரி இருந்தது.

Monday, 4 June 2012

Freemasonry & Illuminati

பிறப்பு: முகப்புத்தகம்


நம்மை சுற்றி தெரியாத மர்மங்கள் ஆயிரம் .நீங்கள் ஆராயுங்கள் இவர்களை பற்றிய தகவல்களை இன்னும் தெரிந்து கொள்வீர்கள் அதிர்ச்சி ஊட்டும் தகவல்களை !!! xxxxx ILLUMINATI xxxxxx

ஒரு அமைப்பு சுமார் 250 வருடங்களாக தொடர்ந்து இயங்க முடியுமா அதுவும் மறைமுகமாக,இந்த உலகத்தில் நடக்கும் போர்கள்,இனப்படுகொலைகள்,பேரழிவுகள் அனைத்தும் மிகச்சிலரின் நெடுநாளைய திட்டங்கள் என்பதனை உங்களால் நம்ப முடிகிறதா, இந்த அமைப்புக்கு பின் இருப்பவர்கள் உலகின் மிகப்பெரிய multi millionaire,13 corporate Families,(Rockefeller's family,Morgans,)


இப்படி உலகின் மிகப்பெரிய பணக்காரர்களை கொண்டுள்ள அமைப்பு தான் Illuminati/இல்லுமினடி 1 may 1776 உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் கொள்கை new world order அதாவது உலகை ஒரே அரசாங்கத்தின் கீள் கொண்டுவருவது - one world Government, இவர்களின் தற்ப்போதைய வேலை உலகின் மக்கள் தொகையை தாங்கள் ஆட்சி செய்வதற்கு ஏற்ப குறைப்பது,உண்மையில் இது பழைய வேலை ஏன் என்றால் இது இவர்களுக்கு அளிக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிறது,இவர்களின் நோக்கம் உலகத்தில் பஞ்சம்,பட்டினி உருவாக்குவது,பேரழிவுகள்,போர்கள்,வியாதிகள் மூலம் மக்களை கொல்வது,இவர்கள் தனி மனிதனாகவோ,நிறுவனமாகவோ அல்லது அரசாங்கமாகவோ இருக்கலாம்,இவர்களின் கட்டுப் பாட்டில் உலக வங்கி,ராணுவ தலைமையகம் செயல்படுகின்றன,சமிபத்தில் ஈராக் மேல் தொடுக்கப்பட்டது போர் கூட நியூ வேர்ல்ட் வார் தான் 


ஏதோ டேன் பிரவுன் நாவல் படிப்பது போல் உள்ளதா,வெறும் 250 வயதே ஆனா இந்த அமைப்புக்கே இப்படி ஆச்சரியப்பட்டிர்கள் என்றால்,இந்தியாவில் இப்படிப் பட்ட ஒரு ரகசிய அமைப்பு கடந்த 2000 வருடங்களாக செயல்பட்டு வருகிறது என்றால் நம்புவீர்களா,நம்ம சென்னையில் கூட இந்த அமைப்பு இருக்கிறது வேறு ஒரு பெயரில் . இதனுடைய புகை படம் இன்னைது உள்ளேன் . இந்த புகை அமெரிக்க டாலரில் இடம் பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .எகிப்பது பெர்மிடில் ஒரு கண் பொருத்தப்பட்டு யுப்பது போல் இருக்கும் .இது தஜாளின் ஒற்றை கண்ணை குறிப்பிடுவது போல் இருக்கும் .இந்த அமைப்பில் பல முக்கிய தலைவர்களும் இடம் பெற்று உள்ளார்கள்

ப்ரீமேசனரி ( FREE MASONARY ) பல நூற்றாண்டுகளாக உலகில் பல்வேறு கோணங்களில் பரவலாக விவாதிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.இந்த பயங்கர இரகசிய சமுதாயத்தைப் பற்றிய பல்வேறு விடயங்கள் இதனைத் தொடர்ந்து வரும் கட்டுரைகளில் ஆராயப்படும்.

KNIGHT TEMPLARS முதல் பண்டைய எகிப்து வரை. ப்ரீமேசனரி பற்றி எழுதும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் ஒருமித்த கருத்துக்கு அமைய இந்த இரகசிய சமுதாயத்தின் ஆரம்பம் சிலுவை யுத்தம் வரை செல்கிறது.பதினெட்டாம் நூற்றாண்டில் அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டாலும் இந்த இரகசிய சமுதாயத்தின் வேர்கள் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் நடந்த சிலுவை யுத்தங்கள் வரை செல்கிறது.இது முதன்முதலில் இங்கிலாந்திலே அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிலுவை யுத்தம் என்ற பேரில் பலஸ்தீனை மீட்க கிருஸ்தவர்கள் புறப்பட்டாலும் அதற்கு முக்கியமான காரணம் பொருளாதார ஆதாயமேயாகும்.ஏனெனில் சிலுவை யுத்தம் ஆரம்பிக்கும் போது ஐரோப்பா வறுமையிலும் தும்பத்திலும் புரண்டு கொண்டிருக்க இஸ்லாமிய மத்திய கிழக்கு அறிவிலும் செல்வத்திலும் செழித்து காணப்பட்டது என்பதே ஐரோப்பியர்களை இஸ்லாமிய உலகம் மீது வெகுவாக ஈர்க்க காரணமாக இருந்தது.

ஐரோப்பிய மன்னர்களின் இந்த பொருளாசையை பூர்த்தி செய்து கொள்ள அந்த மன்னர்கள் கிருஸ்தவ மதத்தின் பெயரில் சிலுவைப் போரில் குதித்தனர். ஐரோப்பிய மன்னர்களின் பொருளாசையை நிறைவு செய்து கொள்ள நடந்த போர்களில் சம்பந்தம் இல்லாமல் சிலுவைகள் பயன்பட்டன.

சிலுவை யுத்தத்தின் ஆரம்பகர்த்தா போப் ஏர்பன் II ஆவார்.கிருஸ்தவர்கள் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த அமைதிவாதக் கோட்பாட்டை கைவிட்டு விட்டு 1095 இல் council of clermont இல் சிலுவை யுத்தத்தை பிரகடனம் செய்தார்.சிலுவை யுத்தத்தின் வெளிப்படையான நோக்காமாக முன்வைக்கப்பட்டது முஸ்லிம்களின் கைகளிலிருந்து புனித பூமியை கைப்பற்றுவதேயாகும்.ஆனால் அதை தாண்டி பாரிய உள்நோக்கம் ஒன்று இருந்தது.இப்படி பிரகடனம் செய்யப்பட யுத்தத்துக்கு இரண்டு தொழில் முறை போர் வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கில் சாதாரண மக்கள் சேர்த்துக் கொல்லப்பட்டனர்.

பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய போப் ஏர்பன் II இன் இந்த சிலுவை யுத்த பிரகடனத்துக்கு ஒரு காரணம் அவருக்கு போப் பதவி மேல் இருந்த ஆசையாகும் , இப்படி புனித பூமி கதையை மக்களிடம்ஸ் சொல்லி அவர் தனக்கு மக்களிடையே ஆதரவை திரட்டவே சிலுவை யுத்தத்தை பிரகடனம் செய்தார்.இதன்மூலம் தனக்கு போட்டியாக உள்ள மற்ற பதியார்களை மட்டம் தட்டப்பார்த்தார்.மேலும் ஐரோப்பிய அரசர்கள் இளவரசர்கள் உயர்குடியினர் என்போர் போப்பின் இந்த யுத்த பிரகடனத்தை சந்தோசமாக வரவேற்றனர்.இவர்கள் அனைவரினதும் நிலம் பிடிக்கும் நோக்கம் கிருஸ்தவ மதத்தின் பெயரில் யுத்தமாகா அரங்கேறியது.

University Of Illinois இன் பேராசிரியர் Donald Queller இன் கருத்துக்கு அமைய பிரெஞ்சு Knights களுக்கு அதிக நிலம் தேவைப்பட்டது,இத்தாலிய வியாபாரிகள் மத்திய கிழக்கு துறைமுகங்களில் தமது வர்த்தகத்தை விரிபுபடுத்த ஒரு தருணத்தை பார்த்துக் கொண்டிருந்தன,ஐரோப்பிய நாடுகளில் தாண்டவமாடிய வறுமையிலிருந்து தப்பித்துக் கொள்ள சாதாரண மக்கள் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தனர்.இப்படி எல்லா காரணங்களும் இந்த யுத்தத்தை முன்னெடுக்கவே சார்பாக இருந்தது.சிலுவையின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராசைக்கார யுத்தம் நடைபெற்ற வழியெங்கும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு மரணத்தை தழுவச் செய்தது.

சிலுவை வீரர்களின் மிக நீண்ட கடினமான மற்றும் படுகொலைகள் கொள்ளைகள் நிறைந்த ரத்தவாடை எங்கும் அடித்த பயணத்தின் முடிவு 1099 புனித நகரான ஜெருசலத்தில் நிறைவு பெற்றது.ஐந்து வார முற்றுகையின் பின் ஜெருசலம் சிலுவை வீரர்களின் படைகளிடம் வீழ்ந்த்தது.சிலுவை வீரர்களிடம் வீழந்த புனித ஜெருசல நகரம் சின்னாபின்னமாகிப் போனது.அங்கு வாழ்ந்த முஸ்லிம்களும் யூதர்களும் கிறிஸ்தவத்துக்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லாத முர்க்கக் குணமும் பொருளாசையும் நிறைந்த சிலுவை வீரர்களின் வாள்களுக்கு இரையானார்கள்.இவர்கள் புனித நகரை ஆக்கிரமித்து வெறும் இரண்டு நாட்களுக்குள் 40000 மேற்பட்ட முஸ்லிம்களை படுகொலை செய்தனர்.இதன் பின்பு இந்த சிலுவை வீரர்கள் ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனத்திலிருந்து Antioch வரை எல்லைகளைக் கொண்ட ஒரு லத்தீன் ராஜ்ஜியம் ஒன்றை அங்கு நிறுவினார்கள்.
   
The Templars அல்லது Soldiers Of Chirst அல்லது Soldiers Of Temple Of Solomonஇப்படி பல பெயர்கள் இவர்களுக்கு உள்ளன.ஆனால் பொதுவாக பாவிக்கப்படும் பெயர்தான் Knight Templars.இந்த இயக்கம் 1119 இல் அதாவது ஜெருசலம் சிலுவை வீரர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளின் பின்பே நிறுவப்பட்டது.இந்த இயக்கம் இரு பிரஞ்சு Knights களால் ஆரம்பிக்கப்பட்டது.Hugues De Payens மற்றும் Godfrey De Saint Omer என்ற இரு பிரெஞ்சு Knights களால் ஒன்பது அங்கத்தவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் முதலில் சிறிய அளவிலேயே இயங்கியது,ஆனால் குறுகிய காலத்தில் அதன் வளர்ச்சி நினைத்ததை விட அதிகமாகவே இருந்தது.இவர்கள் தங்களை "ஏழை வீரர்கள்" என்று தன்னைத் தானே அழைத்துக் கொண்டனர்.ஆனால் நிலைமையோ வேறுவிதமாக இருந்தது.இவர்கள் குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தர்களாக மாறினார்கள்,அதற்கு காரணமும் இருந்தது.ஜெருசல நகரம் சிலுவை வீரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததன் பின் ஐரோப்பாவிலிருந்து ஆயிரக்கணக்கில் யாத்திரிகர்கள் புனித நகரை தரிசிக்க வந்தனர்.இந்த யாத்திரை முழுவதும் இந்த Knight Templars ஸின் கையிலேயே இருந்தது.இதனை கொண்டு அவர்கள் பெரும் செல்வந்தர்களாக மாறினார்கள்.
 

கி.பி. 1162 இல் மன்னர் இரண்டாம் ஹென்றி ஜெருசலத்தில் உள்ள சிலுவை வீரர்களுக்கு உதவும் பொருட்டு மக்களிடம் வரி வசூலித்து வந்தார்.இப்படி வசூலிக்கப்பட்ட பெரும் தொகையானா பணம் Knight Templars ஊடாகவே வீரர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது.Knight Templars இதன்போது நவீன வங்கி முறைக்கு அடித்தாளம் இட்டனர்.காசோலை மற்றும் கடன் முறைமைகள் இக்காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.Micheil Bigent மற்றும் Richard Liegh என்ற இரு பிரித்தானிய வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய மத்தியகாலத்தில் முதலாளித்துவத்தை நிறுவியவர்கள் இந்த Knight Templars.கிருஸ்தவ மதத்தில் வட்டி தடை செய்யப்பட்டு இருந்தாலும் இவர்கள் தாங்களின் வங்கி முறைமைக்கு வட்டியை அடிப்படையக்கிக் கொண்டனர். 

இஸ்லாமிய உலகின் தலைசிறந்த தளபதி சலாஹுத்தீன் அய்யூபி அவர்களால் கி.பி.1187 இல் ஜெருசலம் சிலுவை வீரகளிடமிருந்து மீட்டப்பட்டது.Battle Of Hattin என்று அழைக்கப்படும் 1187 இல் நடந்த அந்தப் போரில் 17000 க்கும் மேற்பட்ட சிலுவை வீரர்கள் இறந்தனர்.இதில் Knight Templars க்கும் பாரிய அளவில் சேதம் ஏற்பட்டது.

இந்த போரில் Knight Templars க்கு கிடைத்த தோல்வி அவர்களுக்கு ஐரோப்பாவில் தமது ஆதிக்கத்தை பரப்ப ஒரு வாய்ப்பாக அமைந்தது.முதன் முதலாக இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்த நாடு பிரான்ஸ் ஆகும்,அதன் பின்பு ஒன்றன் பின்பு ஒன்றாக பல ஐரோப்பிய நாடுகள் இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

Knight Templar ஸின் அரசியல்ரீதியாக எழுச்சி ஐரோப்பிய மன்னர்களின் உள்ளத்தில் ஒருவித அச்சத்தைக் கொடுத்தது.எழுச்சி பெற்றுவரும் இந்த இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க சில ஐரோப்பிய மன்னர்கள் ஒரு தருணம் வரும்வரை பார்த்திருந்ததனர்.ஜெருசலத்தில் Knight Templar ஸின் அதிகாரம் ஓங்கியிருந்த காலத்தில் அவர்கள் அங்கு இஸ்லாத்துக்கு முன் நிலவி வந்த விசித்திரமான போதனை முறைகளை கற்றுக்கொண்டுஅதனை வர்களின் நாளாந்த செயற்பாட்டில் இணைத்துக் கொண்டனர்.இது கிருஸ்தவ மதத்துக்கு முற்றாக மாறு செய்வதாகவே இருந்தது.மேலும் இவர்கள் அந்த விசித்திரமான போதனை முறைகளுக்கு சடங்குகளும் ஏற்பாடு செய்துவந்ததாகவும் வதந்திகள் பரவின.

கடைசியாக, இப்படிப்பட்ட ஒரு தருணம் வரும்வரை காத்திருந்த ஐரோப்பிய மன்னர்கள் செயலில் இறங்கி அவர்களை அதிர்க்க ஆரம்பித்தனர்.1307 இல் பிரெஞ்சு மன்னர் பிலிப்பே லே பெல் Knight Templar சின் அங்கத்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.சிலர் இந்த கைதுகளிலிருந்து தப்பித்து கொண்டாலும் பலர் கைது செய்யப்பட்டனர்.மிக நீண்ட நாட்களாக தொடர்ந்த விசாரணை மற்றும் சோதனைகளுக்குப் பிறகு Knight Templar இயக்க அங்கத்தவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு அதன் பல அங்கத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அதன் தலைவன் Jaques De Moley இற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு அடுத்த நிமிடமே பிரெஞ்சு அரச சபையாலும் தேவாலயத்தாலும் Knights Templar இயக்கம் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டது.அதோடு அவ்வியக்கம் இல்லாமல் போனது.

Knight Templar மீதான விசாரணையின் முடிவு அவ்வியக்கத்தின் முடிவாகவே அமைந்தது.அவ்வியக்கம் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டாலும் அது உண்மையில் மறைந்து அழிந்து விடவில்லை.1307 இல் இடம்பெற்ற திடீர் கைதுகளிலிருந்து தப்பிய சில Knight Templar இயக்க அங்கத்தினர்கள் தன இயக்கத்தின் செயற்பாடுகளை மிக ரகசியமாக செய்து வந்தனர்.பல்வேறு வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இந்த இயக்கத்தின் அங்கத்தவர்களுக்கு தஞ்சம் கொடுத்த ஐரோப்பிய நாடு ஸ்காட்லான்ட் ஆகும்.
பதினான்காம் நூற்றாண்டில் கத்தோலிக்க ஆலயங்களின் அதிகாரத்தை மதிக்காத ஒரே ஒரு நாடு ஸ்காட்லான்ட் ஆகும்.இவ்வியக்கத்தினர் ஸ்கொட்டிஷ் மன்னன் ராபர்ட் தி ப்ரூஸ் (Robert The Bruce) இன் பாதுகாப்பின் கீழ் தம் கொள்கைகளை மீள்நிர்மானம் செய்து வந்தனர். 

Knights Templar இயக்கம் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டாலும் அது மரணிக்கவில்லை,அவர்களின் மாறுபட்ட தத்துவங்கள் கொள்கைகள் மற்றும் சடங்குகள் ப்ரீமேசநரி என்ற புனைப் பெயரில் தொடர்ந்தது நடந்துவந்தது.இன்றும் அது நடக்கிறது.இது மேற்கத்தைய பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மையாகும்.