பிறப்பு: தமிழ் உதயம்
தற்செயலாய் விஜயனை பார்க்க நேர்ந்தது. விஜயன் என்னை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இருவருக்குமே சங்கடம் தான். முதலில் சிரிப்பதா, வேண்டாமா என்ற சிந்தனை வரும். பிறகு பேசுவதா, வேண்டாமா என்ற கேள்வி எழும். எது எப்படியானாலும் நேருக்கு நேராய் பார்ப்பது தர்மசங்கட நிலையை தான் தோற்றுவிக்கும். விஜயன் தன்னை ஒரு விரோதியை போல பார்க்கக்கூடும்.
இதற்கு முன் நேர்ந்த எதிர்பாராத சந்திப்புகளில் அவ்விதம் தான் நிகழ்ந்திருக்கிறது. எனக்கு சிரித்த முகம். எப்போதும், நான் சிரித்து கொண்டே இருப்பதாய் சொல்வார்கள். "உங்களை திட்டணும்னு நினைச்சு வந்தா கூட திட்டத் தோணாது" என்பார்கள். ஆனால் விஜயனை பார்த்து விட்டால் என் முகம் செத்து போகும். சிரிக்க மறந்து போகும்.
நிர்மலாவை பார்க்க வேண்டி வரும்போது, இந்த மாதிரியான நிலை ஏதும் ஏற்படாது. இருவருமே என்னால் ஒரே பலன் அடைய பெற்றவர்கள் தான். நான் பார்த்து, அவள் பார்க்காமல் போனால் கூட, நான் அழைப்பேன். அவள் பார்த்து நான் பார்க்காமல் போனால் கூட அழைத்து விடுவாள். அவளுக்கான வாழ்க்கை, கவலை சாலையில் போய் கொண்டிருக்க நானும் கூட ஒரு காரணமாய் இருந்திருக்கிறேன்.
"அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க. விஜயன் என்னை விட்டு போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க. நாங்க லவ் பண்ணினோம். கல்யாணம் பண்ணி வைக்க சொன்னோம். நாலு பேருல ஒருத்தரா நீங்களும் இருந்து பண்ணி வச்சீங்க. இப்போ எங்க மண வாழ்க்கை முறிஞ்சு போச்சு. அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும். நீங்களா என் மண வாழ்க்கை முறிய காரணம். இல்லையே" என்றாள் ஒரு முறை.
"இல்ல. ஒரு கார்டியன் மாதிரி இருந்து விஜயனை பற்றி நல்லா விசாரிச்சு கல்யாண ஏற்பாடு பண்ணி இருக்கணும். என்னவோ பெரிய வீர,தீர சாகசம் செய்வதா நினைச்சு அவசரப்பட்டுட்டோமோ. உங்களுக்கு கூட எங்க பேரில் வருத்தம் அல்லது கோபம் இருக்கலாம். இவங்க தைரியம் கொடுக்கலேன்னா நாம கல்யாணம் பண்ணிக்காம்ம இருந்திருக்க கூடிய வாய்ப்பு இருந்திருக்கும்னு நினைக்கலாம் நீங்க"
"பேரண்டஸ் பார்த்து பண்ணி வைக்கிற எத்தனையோ திருமணம் கூட தோல்வில முடியுது. அதுக்காக பேரண்ட்ஸை பிள்ளைங்க நோகடிக்கவா போறாங்க. தலையெழுத்து. மாற்றவா முடியும். எல்லாத்துலையும் எல்லோரும் சக்ஸஸ்புல்லா இருந்தா லைப்ல த்ரில் இருக்காதுன்னு தான் கடவுள் சில பேரை சிரிக்கவும், பல பேரை அழவும் வைக்கிறான் போலும். நான் பக்குவப்பட்டுட்டேன். நான் குழந்தை இல்லை. என்னை எதுவும் பாதிக்கவும் செய்யாது. சந்தோஷப்படுத்தவும் செய்யாது"
என்னை எதுவும் பாதிப்பது கிடையாது என்று சொன்னது சரி... சந்தோஷப்படுத்தவும் செய்யாது என்று சொன்னது மனதை வருத்தமடைய செய்தது. இது என்ன மாதிரி மனநிலை? மனசு மரத்துவிட்டது. இந்த வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்கிற முடிவுக்கு வந்தவர்களால் தான் இந்த மாதிரியான மனநிலையை பெற முடியும். நிர்மலாவை இரண்டு விதமாய் பார்க்கிறேன்.
கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின் என்று. கல்யாணத்துக்கு முன் இருந்த துள்ளல், அழகு, மலர்ச்சி என்று எதுவுமே இப்போது இல்லை. சின்னதாய் மேக்கப் கூட போடுவதில்லை. அது பற்றி கூட கேட்டேன். "அப்போ மேக்கப் பிடிச்சது. இப்போ பிடிக்கலை" என்றாள். "அதான் ஏன்" என்று கேட்டேன். "தெரியலை" என்றாள்.
இந்த தெரியலை என்கிற பதில் தான் மனசை காயப்படுத்தியது. நிர்மலா போல விஜயன் இல்லை. இப்போது ஆள் தளதளவென்று இருந்தான். அவன் சந்தோஷமாய் இருப்பதாய் தோன்றியது. மகிழ்ச்சி தான். ஆனால் தன்னை சுற்றி உள்ளவர்களின் சந்தோஷத்தை கொன்று வாழுதல் என்ன நியாயம். மறு கல்யாணம் பண்ணி கொண்டான். எப்படி முடிந்தது. அப்போ முதல் மனைவி... அந்த முதல் சந்தோஷங்கள்... இதுக்கெல்லாம் அர்த்தமே இல்லையா? எல்லாம் அவ்வளவு தானா? முடிஞ்சு போச்சா? மறந்து விட வேண்டியது தானா? " என்று கேட்டேன் நிர்மலாவிடம்.
விஜயனின் செய்கையால் அவள் வலியின் வலியை உணர்ந்தாளோ என்னவோ... எனக்கு வலித்தது. "உங்களை மாதிரி என்னை மாதிரி இருப்பவர்களால் தான் இதை யோசிக்க முடியும். அவர் வேற டைப். யாரும் எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன. எனக்கான தேவைகள் முக்கியம்" என்கிற மனநிலையில் வாழுபவர்களால் தான் எப்படியும் வாழ முடியும்" என்றாள்.
விஜயன், நிர்மலா திருமணம் நான்கே பேரின் முன்னிலையில் தான் நடந்தது. விஜயனின் இரண்டாம் திருமணம் பெரிய மண்டபத்தில் நடந்தது. முதல் திருமணம் என்றே பேசப்பட்டது. "வயசுக்கோளாறு. நல்ல பையன். அந்த சண்டாளி தான் என் புள்ளைய கெடுத்துட்டாள்" என்று பெண் வீட்டாரிடம் வெட்கமின்றி பொய் உரைத்தார்கள். விஜயனின் முதல் திருமணத்துக்கு வந்தவர்களில், எவரையும் இரண்டாவது திருமணத்துக்கு அடைக்கவில்லை. விஜயனின் இரண்டாவது திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவனை சந்திக்க நேர்ந்தது. அவன் மனைவியுடன் கடைத் தெருவில். "மேரேஜுக்கு யாரையும் கூப்பிடல. சும்மா சிம்பிளா நடத்தினோம்" என்று நழுவினான். அவன் மனைவியை ஒரு மரியாதைக்கு கூட அறிமுகம் செய்து வைக்கவில்லை.

"சுரேஷ்... தயவு செய்து இனி இங்க வராதீங்க. விஜயனுக்கு நம்ம ப்ரண்ட்ஸ் யாரும் வீட்டுக்கு வர்றது பிடிக்கல. இந்த காரணத்துக்காகவும் எங்களுக்குள் சண்டை வரணுமா " என்றவள் தொடர்ந்தாள் " அவருக்கு சந்தேகப் புத்தி. காதலித்து மணந்தவள் மேல சந்தேகம் வருமா? ஆச்சரியமா இருக்கு. தயவு செய்து புரிஞ்சுக்கங்க. இனி நீங்க இங்க வர வேணாம். வேற ஏதாவது ஒரு காரணம் சொல்ல சொன்னார். எனக்கு பொய் சொல்ல வரல. உண்மையை சொல்லிட்டேன்"
"இனி வரமாட்டோம் நிர்மலா. எங்களால் யாரும் துயரப்பட வேண்டாம்" என்று வந்தேன். நண்பர்களாய் பழகியவர்களை தன் மனைவியுடன் சேர்த்து சந்தேகப்படுகிறான். அது தான் தனது இரண்டாவது அறிமுகப்படுத்தவில்லை போலும்.
"மனசுக்கு ஒருத்தர் பிடித்திருந்தா எந்த தவறுகளுமே தவறா தெரியாது. பிடிக்கலன்னா எந்த நல்லதுமே நல்லதா தெரியாது" என்றாள் அவனை விட்டு விலகி வந்த பிற்பாடு.
"எது என்னை கவர்ந்தது அவர்கிட்ட தெரியல. இன்னிக்கு எது வெறுக்க செய்யுது. அதுவும் தெரியல. எப்படி வாழ்ந்தோம். அதுவும் தெரியலை" என்றாள்.
"வாழுவதாக சொன்னோம். ஆனா வாழ்ந்தோமான்னு தெரியலை" என்றாள்.
உண்மை தான். படிப்பதாக பசங்கள் சொல்வார்கள். படிப்பார்களா என்று தெரியாது. அழுவதாய் குழந்தை சொல்லும். அழுமா என்று தெரியாது. சிரிப்பதாய் சொல்வோம். சிரிக்கும் படியான சூழல் இருக்கிறதா என்றால் கிடையாது.
நிர்மலாவுக்கு இன்னுமொரு திருமணம் அமைத்து கொடுக்கும் பொறுப்பு இருப்பதாய் நான் நினைத்தேன். நிர்மலாவிடம் இது பற்றி பேசிய போது என் கருத்தை தவிர்க்கவும் இல்லை. ஆமோதிக்கவும் இல்லை. இது எந்த மாதிரியான மனநிலை.
நிர்மலாவின் பெற்றோர், நிர்மலாவை நிராகரித்திருந்தனர். ஹாஸ்டலில் தங்கி இருக்கிறாள். பல மாதங்களாய், நிர்மலாவுக்கு திருமணம் செய்து வைப்பதிலேயே என் சிந்தனை இருந்தது. அதற்கான முயற்சியில் முழு மூச்சாய் இறங்கினேன். பத்திரிகை விளம்பரங்களை பார்த்தேன். என் சகோதரிகளின் திருமணத்துக்கூட இத்தனை பிரயத்தனப்பட வில்லை என்று தோன்றியது.
எந்த ஜாதியில் வரன் தேடுவது. ஜாதி மத பேதமில்லை என்று வரும் விளம்பரத்தை முக்கியமாக பார்த்தேன். எனது ஒவ்வொரு முயற்சியையும் நிர்மலாவிடம் சொல்லியே செய்தேன்.
சிலர்"நீங்க அந்த பொண்ணுக்கு என்ன உறவு" என்று கேட்டபோது "ப்ரண்ட்" என்றேன். என்னவோ போல பார்த்தார்கள். நம்பாமல் பார்த்தார்கள். நாம் இன்னும் எவ்வளவோ கடக்க வேண்டி இருப்பதாக தோன்றியது. எங்கே நிர்மலாவுக்கு திருமணம் செய்து வைக்காமலே போய்விடுவோமோ என்று அச்சமாய் இருந்தது. என் மன உளைச்சலை நிர்மலாவிடம் சொன்னேன். சிரித்தாள்.
"இல்லீங்க. நீங்க எனக்காக கஷ்டப்பட வேண்டாம். மனிதர்களோட சராசரி வயசு அறுபதுன்னா நான் அதில் பாதியை கடந்துட்டேன். பாதி கிணறு தாண்டிய மாதிரி தான். இனி பாதி தான். கண்ணை முடி திறக்கறத்துக்குள்ள காலம் ஓடிடும். குழந்தை ஆசை வரும். தெரிஞ்சவங்க குழந்தை, ரோட்டுல போற குழந்தையை கொஞ்சிப்பேன். எல்லொருக்கும் எல்லா சந்தோஷமும் கிடைக்கிறதில்லை" என்றாள்.
திருமண பந்தம் இல்லாமல் வாழ முடியாதா? முடியும். அது சம்பந்தப்பட்டவர்களின் மனவோட்டத்தை பொறுத்தது. நிர்மலா நிராகரிக்கவில்லை. நல்ல மனிதனுக்காக காத்திருக்கிறாள். அவளது சுபாவம் உறவுகளுடனும் உற்றாருகளுடனும் சேர்ந்து இருப்பது. ஆனால் உறவுகளை இழந்து தனிமரமாய் நிற்பது தான் மனசுக்கு கஷ்டமாய் இருந்தது. இது பற்றி நிர்மலாவிடம் பேசிய போது நிர்மலா சொன்னாள்.
"எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தார் இருக்கார். அவருக்கு ஏஜ் ஆயிடுச்சு. முப்பத்தி ஐந்துக்கு மேல. குடும்ப பாரத்தை சுமந்தப்படியால் திருமணம் செய்யல. திருமணம் செய்யணுங்கிற எண்ணம் இல்லாம இருந்துட்டார். ரெம்ப நல்ல மனிதர். அவருக்கு என்னை பிடிக்கும். எனக்கும் அவரை பிடிக்கும். ஆனா காதல் கிடையாது. நீங்க எனக்கு ப்ரயத்தனப்படுவதால் நீங்களா அவர்கிட்ட பேசி பாருங்க. நான் சொன்னதா வேண்டாம்"

"சொல்லுங்க. யாரு? எனக்கு தெரியுமா அவரை" என்று கேட்டேன். "தெரியும். அவர் பெயர், முகவரி தரேன். பாருங்க. அவர் பெயர், முகவரி வரேன். பாருங்க. அவருக்கு ப்ரியம் இல்லேன்னா வற்புறுத்த வேண்டாம். அதே சமயம் அவரை விட வேறு நல்ல மனிதர் எனக்கு கிடைக்க மாட்டார்னு நினைக்கிறேன். ஒரு வேளை அவருக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு தெரிஞ்சதுன்னா இனி நீங்க எனக்கு கல்யாணம் பண்ணும் முயற்சியை கைவிடுங்க" என்று சொன்னாள். ஒரு காகிதத்தை எடுத்து பெயர், முகவரி எழுதி மடித்து என்னிடம் கொடுத்தாள்.
பிரித்தேன். அதில் என் பெயர்... முகவரி இருந்தது.
தற்செயலாய் விஜயனை பார்க்க நேர்ந்தது. விஜயன் என்னை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இருவருக்குமே சங்கடம் தான். முதலில் சிரிப்பதா, வேண்டாமா என்ற சிந்தனை வரும். பிறகு பேசுவதா, வேண்டாமா என்ற கேள்வி எழும். எது எப்படியானாலும் நேருக்கு நேராய் பார்ப்பது தர்மசங்கட நிலையை தான் தோற்றுவிக்கும். விஜயன் தன்னை ஒரு விரோதியை போல பார்க்கக்கூடும்.
இதற்கு முன் நேர்ந்த எதிர்பாராத சந்திப்புகளில் அவ்விதம் தான் நிகழ்ந்திருக்கிறது. எனக்கு சிரித்த முகம். எப்போதும், நான் சிரித்து கொண்டே இருப்பதாய் சொல்வார்கள். "உங்களை திட்டணும்னு நினைச்சு வந்தா கூட திட்டத் தோணாது" என்பார்கள். ஆனால் விஜயனை பார்த்து விட்டால் என் முகம் செத்து போகும். சிரிக்க மறந்து போகும்.
நிர்மலாவை பார்க்க வேண்டி வரும்போது, இந்த மாதிரியான நிலை ஏதும் ஏற்படாது. இருவருமே என்னால் ஒரே பலன் அடைய பெற்றவர்கள் தான். நான் பார்த்து, அவள் பார்க்காமல் போனால் கூட, நான் அழைப்பேன். அவள் பார்த்து நான் பார்க்காமல் போனால் கூட அழைத்து விடுவாள். அவளுக்கான வாழ்க்கை, கவலை சாலையில் போய் கொண்டிருக்க நானும் கூட ஒரு காரணமாய் இருந்திருக்கிறேன்.
"அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க. விஜயன் என்னை விட்டு போனதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க. நாங்க லவ் பண்ணினோம். கல்யாணம் பண்ணி வைக்க சொன்னோம். நாலு பேருல ஒருத்தரா நீங்களும் இருந்து பண்ணி வச்சீங்க. இப்போ எங்க மண வாழ்க்கை முறிஞ்சு போச்சு. அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும். நீங்களா என் மண வாழ்க்கை முறிய காரணம். இல்லையே" என்றாள் ஒரு முறை.
"இல்ல. ஒரு கார்டியன் மாதிரி இருந்து விஜயனை பற்றி நல்லா விசாரிச்சு கல்யாண ஏற்பாடு பண்ணி இருக்கணும். என்னவோ பெரிய வீர,தீர சாகசம் செய்வதா நினைச்சு அவசரப்பட்டுட்டோமோ. உங்களுக்கு கூட எங்க பேரில் வருத்தம் அல்லது கோபம் இருக்கலாம். இவங்க தைரியம் கொடுக்கலேன்னா நாம கல்யாணம் பண்ணிக்காம்ம இருந்திருக்க கூடிய வாய்ப்பு இருந்திருக்கும்னு நினைக்கலாம் நீங்க"
"பேரண்டஸ் பார்த்து பண்ணி வைக்கிற எத்தனையோ திருமணம் கூட தோல்வில முடியுது. அதுக்காக பேரண்ட்ஸை பிள்ளைங்க நோகடிக்கவா போறாங்க. தலையெழுத்து. மாற்றவா முடியும். எல்லாத்துலையும் எல்லோரும் சக்ஸஸ்புல்லா இருந்தா லைப்ல த்ரில் இருக்காதுன்னு தான் கடவுள் சில பேரை சிரிக்கவும், பல பேரை அழவும் வைக்கிறான் போலும். நான் பக்குவப்பட்டுட்டேன். நான் குழந்தை இல்லை. என்னை எதுவும் பாதிக்கவும் செய்யாது. சந்தோஷப்படுத்தவும் செய்யாது"
என்னை எதுவும் பாதிப்பது கிடையாது என்று சொன்னது சரி... சந்தோஷப்படுத்தவும் செய்யாது என்று சொன்னது மனதை வருத்தமடைய செய்தது. இது என்ன மாதிரி மனநிலை? மனசு மரத்துவிட்டது. இந்த வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்கிற முடிவுக்கு வந்தவர்களால் தான் இந்த மாதிரியான மனநிலையை பெற முடியும். நிர்மலாவை இரண்டு விதமாய் பார்க்கிறேன்.
கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்கு பின் என்று. கல்யாணத்துக்கு முன் இருந்த துள்ளல், அழகு, மலர்ச்சி என்று எதுவுமே இப்போது இல்லை. சின்னதாய் மேக்கப் கூட போடுவதில்லை. அது பற்றி கூட கேட்டேன். "அப்போ மேக்கப் பிடிச்சது. இப்போ பிடிக்கலை" என்றாள். "அதான் ஏன்" என்று கேட்டேன். "தெரியலை" என்றாள்.இந்த தெரியலை என்கிற பதில் தான் மனசை காயப்படுத்தியது. நிர்மலா போல விஜயன் இல்லை. இப்போது ஆள் தளதளவென்று இருந்தான். அவன் சந்தோஷமாய் இருப்பதாய் தோன்றியது. மகிழ்ச்சி தான். ஆனால் தன்னை சுற்றி உள்ளவர்களின் சந்தோஷத்தை கொன்று வாழுதல் என்ன நியாயம். மறு கல்யாணம் பண்ணி கொண்டான். எப்படி முடிந்தது. அப்போ முதல் மனைவி... அந்த முதல் சந்தோஷங்கள்... இதுக்கெல்லாம் அர்த்தமே இல்லையா? எல்லாம் அவ்வளவு தானா? முடிஞ்சு போச்சா? மறந்து விட வேண்டியது தானா? " என்று கேட்டேன் நிர்மலாவிடம்.
விஜயனின் செய்கையால் அவள் வலியின் வலியை உணர்ந்தாளோ என்னவோ... எனக்கு வலித்தது. "உங்களை மாதிரி என்னை மாதிரி இருப்பவர்களால் தான் இதை யோசிக்க முடியும். அவர் வேற டைப். யாரும் எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன. எனக்கான தேவைகள் முக்கியம்" என்கிற மனநிலையில் வாழுபவர்களால் தான் எப்படியும் வாழ முடியும்" என்றாள்.
விஜயன், நிர்மலா திருமணம் நான்கே பேரின் முன்னிலையில் தான் நடந்தது. விஜயனின் இரண்டாம் திருமணம் பெரிய மண்டபத்தில் நடந்தது. முதல் திருமணம் என்றே பேசப்பட்டது. "வயசுக்கோளாறு. நல்ல பையன். அந்த சண்டாளி தான் என் புள்ளைய கெடுத்துட்டாள்" என்று பெண் வீட்டாரிடம் வெட்கமின்றி பொய் உரைத்தார்கள். விஜயனின் முதல் திருமணத்துக்கு வந்தவர்களில், எவரையும் இரண்டாவது திருமணத்துக்கு அடைக்கவில்லை. விஜயனின் இரண்டாவது திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் அவனை சந்திக்க நேர்ந்தது. அவன் மனைவியுடன் கடைத் தெருவில். "மேரேஜுக்கு யாரையும் கூப்பிடல. சும்மா சிம்பிளா நடத்தினோம்" என்று நழுவினான். அவன் மனைவியை ஒரு மரியாதைக்கு கூட அறிமுகம் செய்து வைக்கவில்லை.

"சுரேஷ்... தயவு செய்து இனி இங்க வராதீங்க. விஜயனுக்கு நம்ம ப்ரண்ட்ஸ் யாரும் வீட்டுக்கு வர்றது பிடிக்கல. இந்த காரணத்துக்காகவும் எங்களுக்குள் சண்டை வரணுமா " என்றவள் தொடர்ந்தாள் " அவருக்கு சந்தேகப் புத்தி. காதலித்து மணந்தவள் மேல சந்தேகம் வருமா? ஆச்சரியமா இருக்கு. தயவு செய்து புரிஞ்சுக்கங்க. இனி நீங்க இங்க வர வேணாம். வேற ஏதாவது ஒரு காரணம் சொல்ல சொன்னார். எனக்கு பொய் சொல்ல வரல. உண்மையை சொல்லிட்டேன்"
"இனி வரமாட்டோம் நிர்மலா. எங்களால் யாரும் துயரப்பட வேண்டாம்" என்று வந்தேன். நண்பர்களாய் பழகியவர்களை தன் மனைவியுடன் சேர்த்து சந்தேகப்படுகிறான். அது தான் தனது இரண்டாவது அறிமுகப்படுத்தவில்லை போலும்.
"மனசுக்கு ஒருத்தர் பிடித்திருந்தா எந்த தவறுகளுமே தவறா தெரியாது. பிடிக்கலன்னா எந்த நல்லதுமே நல்லதா தெரியாது" என்றாள் அவனை விட்டு விலகி வந்த பிற்பாடு.
"எது என்னை கவர்ந்தது அவர்கிட்ட தெரியல. இன்னிக்கு எது வெறுக்க செய்யுது. அதுவும் தெரியல. எப்படி வாழ்ந்தோம். அதுவும் தெரியலை" என்றாள்.
"வாழுவதாக சொன்னோம். ஆனா வாழ்ந்தோமான்னு தெரியலை" என்றாள்.
உண்மை தான். படிப்பதாக பசங்கள் சொல்வார்கள். படிப்பார்களா என்று தெரியாது. அழுவதாய் குழந்தை சொல்லும். அழுமா என்று தெரியாது. சிரிப்பதாய் சொல்வோம். சிரிக்கும் படியான சூழல் இருக்கிறதா என்றால் கிடையாது.
நிர்மலாவுக்கு இன்னுமொரு திருமணம் அமைத்து கொடுக்கும் பொறுப்பு இருப்பதாய் நான் நினைத்தேன். நிர்மலாவிடம் இது பற்றி பேசிய போது என் கருத்தை தவிர்க்கவும் இல்லை. ஆமோதிக்கவும் இல்லை. இது எந்த மாதிரியான மனநிலை.
நிர்மலாவின் பெற்றோர், நிர்மலாவை நிராகரித்திருந்தனர். ஹாஸ்டலில் தங்கி இருக்கிறாள். பல மாதங்களாய், நிர்மலாவுக்கு திருமணம் செய்து வைப்பதிலேயே என் சிந்தனை இருந்தது. அதற்கான முயற்சியில் முழு மூச்சாய் இறங்கினேன். பத்திரிகை விளம்பரங்களை பார்த்தேன். என் சகோதரிகளின் திருமணத்துக்கூட இத்தனை பிரயத்தனப்பட வில்லை என்று தோன்றியது.
எந்த ஜாதியில் வரன் தேடுவது. ஜாதி மத பேதமில்லை என்று வரும் விளம்பரத்தை முக்கியமாக பார்த்தேன். எனது ஒவ்வொரு முயற்சியையும் நிர்மலாவிடம் சொல்லியே செய்தேன்.
சிலர்"நீங்க அந்த பொண்ணுக்கு என்ன உறவு" என்று கேட்டபோது "ப்ரண்ட்" என்றேன். என்னவோ போல பார்த்தார்கள். நம்பாமல் பார்த்தார்கள். நாம் இன்னும் எவ்வளவோ கடக்க வேண்டி இருப்பதாக தோன்றியது. எங்கே நிர்மலாவுக்கு திருமணம் செய்து வைக்காமலே போய்விடுவோமோ என்று அச்சமாய் இருந்தது. என் மன உளைச்சலை நிர்மலாவிடம் சொன்னேன். சிரித்தாள்.
"இல்லீங்க. நீங்க எனக்காக கஷ்டப்பட வேண்டாம். மனிதர்களோட சராசரி வயசு அறுபதுன்னா நான் அதில் பாதியை கடந்துட்டேன். பாதி கிணறு தாண்டிய மாதிரி தான். இனி பாதி தான். கண்ணை முடி திறக்கறத்துக்குள்ள காலம் ஓடிடும். குழந்தை ஆசை வரும். தெரிஞ்சவங்க குழந்தை, ரோட்டுல போற குழந்தையை கொஞ்சிப்பேன். எல்லொருக்கும் எல்லா சந்தோஷமும் கிடைக்கிறதில்லை" என்றாள்.
திருமண பந்தம் இல்லாமல் வாழ முடியாதா? முடியும். அது சம்பந்தப்பட்டவர்களின் மனவோட்டத்தை பொறுத்தது. நிர்மலா நிராகரிக்கவில்லை. நல்ல மனிதனுக்காக காத்திருக்கிறாள். அவளது சுபாவம் உறவுகளுடனும் உற்றாருகளுடனும் சேர்ந்து இருப்பது. ஆனால் உறவுகளை இழந்து தனிமரமாய் நிற்பது தான் மனசுக்கு கஷ்டமாய் இருந்தது. இது பற்றி நிர்மலாவிடம் பேசிய போது நிர்மலா சொன்னாள்.
"எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தார் இருக்கார். அவருக்கு ஏஜ் ஆயிடுச்சு. முப்பத்தி ஐந்துக்கு மேல. குடும்ப பாரத்தை சுமந்தப்படியால் திருமணம் செய்யல. திருமணம் செய்யணுங்கிற எண்ணம் இல்லாம இருந்துட்டார். ரெம்ப நல்ல மனிதர். அவருக்கு என்னை பிடிக்கும். எனக்கும் அவரை பிடிக்கும். ஆனா காதல் கிடையாது. நீங்க எனக்கு ப்ரயத்தனப்படுவதால் நீங்களா அவர்கிட்ட பேசி பாருங்க. நான் சொன்னதா வேண்டாம்"

"சொல்லுங்க. யாரு? எனக்கு தெரியுமா அவரை" என்று கேட்டேன். "தெரியும். அவர் பெயர், முகவரி தரேன். பாருங்க. அவர் பெயர், முகவரி வரேன். பாருங்க. அவருக்கு ப்ரியம் இல்லேன்னா வற்புறுத்த வேண்டாம். அதே சமயம் அவரை விட வேறு நல்ல மனிதர் எனக்கு கிடைக்க மாட்டார்னு நினைக்கிறேன். ஒரு வேளை அவருக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைன்னு தெரிஞ்சதுன்னா இனி நீங்க எனக்கு கல்யாணம் பண்ணும் முயற்சியை கைவிடுங்க" என்று சொன்னாள். ஒரு காகிதத்தை எடுத்து பெயர், முகவரி எழுதி மடித்து என்னிடம் கொடுத்தாள்.
பிரித்தேன். அதில் என் பெயர்... முகவரி இருந்தது.
No comments:
Post a Comment