Thursday, 3 November 2016

வாழ்க்கையில் ரசிக்க ஆயிரம் இருக்கு.!

கிச்சுகிச்சு மூட்டும்  போது வரும் அடக்கமுடியாத சிரிப்பு...

கடைசி தீக்குச்சிக்கு காட்டும் பொறுப்பு

மொட்டமாடி தூக்கம் ..

திருப்தியான ஏப்பம்...

கூட்டமான பஸ்ல ,  நா அடுத்த stoppingல எறங்கிருவேன்,   நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை... 

நாம் செய்யும் மொக்க மேஜிக்கை வியந்து ரசிக்கும்  குழந்தை..

7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் பாட்டி..

பாட்டியிடம் பம்மும் தாத்தா ...

தலைவர் படம்  First day first show ticket கிடைத்தவுடன் விடும் பெருமூச்சு ...

தாகம் தணித்த bore well  pipe தண்ணி ..

பத்து ரூவா change  குடுங்கனு,  கடைக்காரன்  மூஞ்சிய காட்டும்போது , எப்பவோ purse ல வெச்ச இத்து போன பத்து ரூவா...

Notebookன்  கடைசிப்பக்கம்...

கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத makeup  இல்லா
அழகி ...

பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ...

தூங்க தோள் கொடுத்த சக பயணி ....

எரிந்து முடிந்த computer சாம்பிராணி ..

பாய் வீட்டு பிரியாணி ..

பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்..

இப்பவும் டேய் என அழைக்கும் தோழி ..

இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா ...

கோபம் மறந்த அப்பா..

சட்டையை ஆட்டய போடும் தம்பி..

அக்கறை காட்டும் அண்ணன்..

அதட்டும் அக்கா ...

மாட்டி விடாத தங்கை ..

சமையல் பழகும் மனைவி ...

Sareekku fleets எடுத்துவிடும் கணவன்..

இதுவரை பார்த்திராத  பேப்பர் போடும் சிறுவன்..

Horn அடித்து எழுப்பிவிடும் பால்காரர்...

வழிவிடும் ஆட்டோ காரர்...

High beam போடாத lorry driver...

ஊசி போடாத doctor..

சில்லறை கேட்காத conductor..

சிரிக்கும்  police...

முறைக்கும் காதலி..

உப்பு தொட்ட மாங்கா..

அரை மூடி தேங்கா..

12மணி குல்பி..

Atm a / c ..

sunday சாலை ...

மரத்தடி அரட்டை...

தூங்க விடாத குறட்டை...

புது நோட் வாசம்..

மார்கழி மாசம்..

ஜன்னல் இருக்கை..

தும்மும் குழந்தை..

கோவில் தெப்பகுளம்..

Exhibition அப்பளம்..

முறைப்பெண்ணின் சீராட்டு ...

எதிரியின் பாராட்டு..

தோசைக்கல் சத்தம் ..

எதிர்பாராத முத்தம் ...

பிஞ்சு பாதம்..

இதை எழுதும் நான்..

படிக்கும் நீங்கள்..

இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க ..

வாழ்க்கைய வெறுக்க  high heels அளவுக்கு பெருசா 10 காரணம் இருந்தாலும்

அதை ரசிக்க , mini meals மாதிரி வெரைட்டியான விஷ்யங்கள் நிறைய இருக்கு ..

அதையெல்லாம் water tank அளவுக்கு வாய திறந்து ரசிக்கனும்னு இல்ல ...

water  packet  அளவுக்கு மனச திறந்து ரசிச்சாலே போதும்....

கவலை காலி ஆயிரும்
வாழ்க்கை ஜாலி ஆயிரும்
Face fresh ஆயிரும்

...SO...

வாங்க ... வாங்க..
வாழ்க்கைய ரசிங்க .. !    



படித்ததில் பிடித்தது

வெற்றிலை

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு போடுவது மட்டுமே! அதிர வைக்கும் உண்மைகள்!

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும்

சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது

பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள்

இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும்

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே

ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது

இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

--

படித்ததில் பிடித்தது 

Thursday, 26 May 2016

இன்றைய வாழ்க்கை

*Beautiful lines... worth in reading...*

எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி *ஊர்வலமாய்* எடுத்து செல்கிறது..!

*எழுத்திடம்* பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்.

*ஜெயிக்கிறதுங்கிறது*
வாழ்க்கையில்
ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,
பணக்காரனுக்கு பல கோடி
சொத்தாகவும் உள்ளது.

பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா *குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது* :-))

குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் *மீசை* வளர்ந்து விடுகிறது

கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும்...!
உண்மைதான்...!
ஆனால் 2G யில் தேடாதீர்கள்...!
*கூகுளே கிடைக்காது.!*


தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை *என் நாடு சுத்தம் ஆகாது!!!*

சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை *புடவைகளுக்கு உண்டு!*


விலைவாசி - பெயர் சரியாத்தான் வச்சிருக்காங்க , சில இடங்களில் *விலை வாசிக்க* மட்டுமே முடியும். !

'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும்  குறைவில்லாதது ஒரு *தீகுச்சியின் மரணம்* !

உன் இறுதிவரை நீ *இழப்பதற்கு ஏதாவது ஒன்று மிச்சமிருக்கும்* கவலைகொள்ளாதே!!

இந்த *படிப்ப* கண்டுபுடிச்சது எவன்டா" என ஆரம்பித்து...
"இந்த *பணத்த* கண்டுபுடிச்சது எவன்டா" என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை.. !

வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட *வேலை கிடைக்காதவர்களின்* திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !

ஒரு முதலாளியை *''வேலையை விட்டுட்டு போயிடுவேன்''*னு மிரட்டுர அளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை! !

அடுத்த வாக்கியம் பொய்.
முந்தய வாக்கியம் *உண்மை.*
இதுல எது உண்மை?எது பொய்?...அதுதான் கடவுள்.

இன்றைய தலைமுறை இளைஞர்கள் அப்பாவிடம் அதிகம் பேசலனாலும் அவரின் *ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்துள்ளனர்.!*

500 ரூபாயை எண்ணினாலும் ,50000 ரூபாயை எண்ணினாலும் *ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெசின்* .,..ஏன்னா அது மெசின்,மனிதன் இல்லை.

அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு *இஞ்சினியர்* மட்டும் இருக்கானுங்க !!


இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில *ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!*....நிதர்சனம்

சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும், ஆனால் *வாய்ப்பு நிச்சயம் இருக்காது !*

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, *இப்படியே இருந்துவிடுமோ* என்ற கவலை சிலருக்கு!!

250 ரூபாய்க்கு பளிச்சென்றும், 100 ரூபாய்க்கு சுமாராகவும், இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் *கடவுள்*...!!

மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். இப்போது *வைத்திருக்காதவர்கள்* ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

தூக்கம் வராமல்
முதலாளி...
*தூங்கி வழியும்
வாட்ச்மேன்*.........முரண்

கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள்,டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் சேர்த்து டீ சொல்லும் தினக்கூலியின் *வள்ளல்தனத்துக்கு கீழேதான்*.!


கொட்டும் "மழையில்" இரண்டு விதமான பிள்ளைகள்
1.மாம்.!
இட்ஸ் ரைனிங்..ஏசியை கம்மி பண்ணுங்க😅
2.அம்மா.!
இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா🚶🚶


படித்ததில் பிடித்தது 

பழமொழி

எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா ?

1. "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"

சரியான பழமொழி :

"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,

நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

விளக்கம் :

இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது.

கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள்.

இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.

கடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.

2. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு.

சரியான பழமொழி :

ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - .

3. படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.

சரியான பழமொழி :

படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான்

4. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.

சரியான பழமொழி :

ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் -

5. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - .தவறு.

சரியான பழமொழி :

நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு -

( சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். )

6. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் -தவறு.

சரியான பழமொழி :

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். -

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்.



1.தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.

2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.'

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'

கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

5. 'இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.'

வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.

6. வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.'

புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.
7.  'இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்... எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!'

கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

8.  'புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.'

புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.
9.  முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.'

மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்

10.  தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...'

சமைக்கும்போதும்... பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!

11. . 'வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.'

பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

12. . 'வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.'இந்த இலையில் 'பினாலிக்ஸ்' எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.



___
படித்ததில் பிடித்தது

மண்ணும் பொண்ணும்

மண்ணையும் பொண்னையும் நிதானமா பார்த்து தான் அமைச்சுக்கனும். எங்க வீட்ல திருமண பேச்சு எடுக்கும் போதெல்லாம் இதே புராணம் தான் ஒலிக்கும். இந்த மண்ணும் பொண்ணும் சரியா அமையலனா காலத்துக்கும் மனஉழைச்சல் நேரிடும்.. மண்ணின் தன்மைய கூட மாத்திடலாம். பெண்ணின் தன்மைய? மண்ணையும் பொண்ணையும் பார்த்து அமைச்சுக்கனும்னு சொன்ன பெரியவங்க பெண்ணுக்கு ஆணையும் பார்த்து அமைச்சுக்கனும்னு சொல்லலையே...

கொழுஞ்சித்துவையல்  எங்க வீட்ல தோசைக்கு தொட்டுக்க இன்னைக்கு  இது தான்.. அதான் இன்று கொழுஞ்சியைப் பற்றி பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். அந்தக்காலங்களில் வயல்களில் தழைச்சத்திற்காக கொழுஞ்சியையும் கொள்ளையும் தான் அதிகம் விதைத்து உழுவார்களாம். கொழுஞ்சி முளைத்தால் போதும் தண்ணீரை எதிர்பார்க்காமலேயே செடி வளர்ந்துவிடும். கொள்ளுக்கு காற்றிலாவது ஈரப்பதம் வேண்டும். சித்திரை வைகாசி மாதங்களில் கொழுஞ்சியை விதைத்து உழுது விடுவார்களாம். ஆடியில் கோடை மழை இறுதியில் செடிகளை மடக்கி உழுவார்களாம். இன்று 3 மாதம் காத்திருக்கவெல்லாம் ஆள் இல்லை. சணப்பு தக்கைப்பூண்டை இறைத்து விட்டோமா 40வது நாள் உழுதோமா. உழுத 3 நாளில் நாற்றை நட்டோமா. அரைகுறையா வெள்ளாமை எடுத்து அரைகுறையா வித்தோமா. இது தான் இன்றைய நிலை. நம் பெரியவர்களின் யுக்தி இன்றைய விவசாயிகளிடம் இல்லை. நான் தோட்டத்தை 2 மாதம் சும்மா போட்டிருந்தா என் வீட்டவர்கள் என்னைச் சோம்பேரி என்று தான் கூறுவார்கள். கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உத்தமம்.

கொழுஞ்சியில் பயன்படாத பாகங்களே இல்லை. தோட்டத்தில் வேலைக்கு வரும் பெண்கள் சிலர் வெற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள். வெயில் அதிகமாக இருக்கும் வேலையில் நாக்கு அதிகமாக வரண்டு விடும். சிலர் நாக்கு வரல்வதைத் தடுக்க வெற்றிலையோடு கொஞ்சம் கொழுஞ்சி இலைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். கொழுஞ்சியை மண்ணுக்கு உரமாக்கும் பொழுது மண்ணில் தழைச்சத்தைத் தக்க வைக்கும் தன்மை 15% இருப்பதாக சொல்கிறார்கள். சிலருக்கு எரிச்சலுடனும் அடி வயிறு வலியுடனும் சிறுநீர் வெளி வரும் அப்போது கொழுஞ்சியின் வேரை எடுத்து சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று அதில் வரும் சாரைக் குடிப்பார்கள். 5 நிமிடத்தில் வயிற்றுச் சூடு அடங்கிவிடும். இது என் அனுபவம். வெயில் காலமாதலால் என் பெரியம்மா அடிக்கடி கொழுஞ்சித் தழையில் துவையல் அறைப்பார். கொழுஞ்சியை சிறிது விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் கலந்து வதக்கி அதில் மிளகாய் வற்றல், மல்லி விதை, சீரகம், புளி, உப்பு வைத்து அரைத்து வைத்துக் கொள்வார். 3 நாளைக்கெல்லாம் வைத்து ருசிப்பார்கள். கொழுஞ்சி விதையையும் எடுத்து வருத்து வெள்ளம் தேன் கலந்து பொடித்து உருண்டை பிடித்துக் கொடுப்பார் நம்ம அம்மச்சி.

துளசி, கீழாநெல்லி, ஆவாரை, கொழுஞ்சி, இலவங்கம் இத நிழலில் உலர்த்தி அவ்வப்போது கருப்பட்டி கலந்து டீ போடலாம். தலைவலி, உடல் சூடு, உடல் அழுப்பு இவற்றிற்கு நல்ல நிவாரணியாக அமையும்.. கொழுஞ்சி, மருதாணி, ஆடாதொட, செம்பருத்தி இதழ், சென்பக மொக்கு இதையெல்லாம் தேங்காயெண்ணையில் ஊரவைத்துத் தலைக்குத் தேய்ப்பார்கள்..

அந்த மண்ணும் பொண்ணும் மேட்டர் மறந்துடாதீங்க.. ;)

___
படித்ததில் பிடித்தது 

பயிர்களும் பட்டங்களும்

பயிர்களும் பட்டங்களும்

பட்டம் என்றால் என்ன?
பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும்.

பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள்.

 வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள்.

ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், தவிரக் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலான வைற்றைச் சாகுபடி செய்வார்கள்.

 மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள்.

ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம்.

மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம்.

 மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும், சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர்.

நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும் அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும், அடுத்து அதே பயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது.

மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.

நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாக கிருமிகளை அழிகின்றன.

குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறெரு பயிர் செய்தபின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன.

பயிர்களுக்கு ஏற்ற பட்டங்கள்

வெங்காயம் - வைகாசி, புரட்டாசி, மார்கழி
பீர்க்கங்காய், புடலை,பாவை - சித்திரை, ஆடி, ஆவணி
அவரை – சித்திரை, ஆடி, ஆவணி,  தை, மாசி
கத்தரி – ஆடி, மாசி
வெண்டை – மாசி, பங்குனி
மிளகாய்,கொத்தவரை – வைகாசி, ஆனி, ஆவணி புரட்டாசி,கார்த்திகை. தை, மாசி
முருங்கை – புரட்டாசி, ஐப்பசி
எள் - ஆடி, சித்திரை
சூரியகாந்தி, ஆடி, கார்த்திகை, மாசி
சுண்டல் - ஐப்பசி, கார்த்திகை
நெல், - புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
ஊளுந்து – ஆடி, மாசி
கம்பு – மாசி, பங்குனி
நாட்டுச்சோளம்- சித்திரை, மாசி, கார்த்திகை
தென்னை- ஆடி, ஆனி, கார்த்திகை, மார்கழி
கரும்பு- கார்த்திகை, தை
வாழை - கார்த்திகை, மார்கழி.
மரவள்ளி – கார்த்திகை
பருத்தி, ஆவணி, புரட்டாசி, மாசி
தட்டப்பயறு, பாசிப்பயறு, துவரை, மொச்சை – ஆடி
ஆண்டுமுழுவதும் பயிரிடலாம் - ஆமணக்கு, தக்காளி, பொரியல் தட்டப்பயறு, மக்காச்சோளம்,பட்டுவளர்ப்பு,           கார்/குருவை/சொர்னவரி/ஆடி பட்டம் (வைகாசி – ஆனி முதல் ஆவணி – புரட்டாசி வரை)
சம்பா/தாளாடி/பிஷானம் (ஆவணி – புரட்டாசி முதல் தை – மாசி வரை)

குறிப்பு :-
மிளகாய், தக்காளி, வெங்காயம், நெல். கொத்தவரை, வாழை, தென்னை, போன்ற பயிர்கள் கார்த்திகை மார்கழி பட்டத்தில் நடவு செய்யலாம்


--
படித்ததில் பிடித்தது