Thursday, 18 October 2012

எங்கள் சொர்க்கம்-4


போன பார்ட்ல போட்டோவா போட்டு கவர் பண்ணிட்டேன்னு சொன்னாங்க ..... உண்மையிலையே அததான் நானும் பண்ணினேன் ... அதுனால தான் இந்த பார்ட கொஞ்சம் எழுதலாம்னு ட்ரை பண்ணி இருக்கேன்.......

புது வருசமாவது நல்லா படிய இருக்கும்ன்ற ஆசையில தண்ணி தம்மோட  ஆரம்பிச்சோம். மறுபடியும் வேலை தேடும் படலம். ஸ்ஸ் முடியல .... படுச்சதுக்கு தான் வேலை கெடைக்கல ... சரி கெடைச்ச வேலைக்காவது போகலாம்ன்னு ... ஆட்டோகிராப் சேரன் கணக்கா எந்த வேலையா இருந்தாலும் பரவாஇல்ல, எவ்ளோ தூரமா இருந்தாலும் பரவா இல்லன்னு.... கெடச்ச வேலைக்கு போக ஆரம்பிச்சோம் ..... எங்க எல்லோரையும் வரவேத்த சூளைமேடு ரூம் மாதிரி ... எங்க எல்லோருக்கும் வேலை கொடுத்தது, மேத்தா நகர்ல இருக்குற HOV Services  தான் .... சிவாஜி ரஜினி மாதிரி நீங்க வந்தா மட்டும் போதும்னு போன எல்லோருக்கும் வேலை குடுத்த முதல் கம்பெனி.... சூளைமேடு ரூம்ல இருந்த, இருக்குற, எல்லோரும் அங்க தான் முதல் வேலைய தொடங்குனோம்... அங்க சேரும் போது கேட்ட முதல் கேள்வி "ஏன் தம்பி BE படுச்சிட்டு டேட்டா என்ட்ரி வேலைக்கு சேர்றீங்கன்னு தான்"... நாங்க என்ன சொல்ல முடியும்...... எதுவோ சொல்லி சமாளிச்சு வேலைக்கு சேர்ந்திட்டோம் .....
      முதல்ல சேர்ந்தது செந்தில் குமார், ஸ்ரீபதி.... அதுக்கு அப்புறம் எல்லோரும் பொய் சேர்ந்துட்டோம்... நான், சோமு,விஷ்ணு,இளமாறன், பிரபு, விஜய் சங்கர், சதீஷ்,.... இதுல ஸ்ரீபதி ஒரு வருஷம் பக்கம் அதே கம்பெனி இருந்தான்... பிரபு ஒரு வருசதுக்கு மேல அதே கம்பெனில இருந்தான்.... இன்னும் ஒரு ஜீவன் இருந்துச்சு..... அந்த காலத்துல பட்னதுக்கு போற பெரியவங்க மஞ்ச பைய தூக்கிட்டு வர்ற மாதிரி சூட்கேஸ் தூக்கிட்டு வந்தாரு..... திரு உமாநாத்..... இந்த பேர பாத்ததியும் உங்கள்ள எத்தன பேறு தனிய சிரிசீங்கன்னு தெரியல..... அந்த அளவுக்கு இந்த பேர் பிரபலம்... அவரோட திரு தங்கதுரையும் வந்தார்..... இவரு ஒரு மாசத்துலையே ஊர்பக்கம் போய்ட்டார்(அவரோட புது ஷூ இங்கயே விட்டுட்டு போய்ட்டார்.. J)..... மீதி இருந்த எல்லோரும் ஒரு மாசத்துலயே ஓடி வந்துட்டோம்.... கொடுமைல்லாம் இல்ல ... அதுக்கு அப்புறம் Recession கொஞ்சம் கண்ட்ரோல்லுக்கு வந்து எல்லோருக்கும் அவங்க அவங்க இண்டரஸ்ட் இருந்த fieldல வேலை கெடைக்க ஆரம்பிச்சது.

         ஜனவரி மாசம்னு நினைக்குறேன் சரியா நியாபகம் இல்ல .... நான், வேணு கோபால், ராஜா, அருண் எல்லோரும் ஜெமினி பாலத்துக்கு பக்கதுல இருந்த Drasis ன்ற ஒரு BPO ல இன்டர்வியூ போனோம்... அந்த நேரத்துல காலைல இருந்து கொஞ்சம் அலஞ்சதால சோர்வா இருந்ததால நான் வரல டா .. நீங்க  மட்டும் போங்கடான்னு சொல்லி நான் பஸ் ஸ்டான்ட்லையே வெயிட் பநீட்டு இருந்தேன்..... உண்மையா ரீசன் என்னோட பேன்ட் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பாத்ததுல கொஞ்சம் டேமேஜ் ஆயிருச்சு .... அதனால தான் நான் வரலன்னுடேன் .... அவங்களும் போய் ஒரு மணி நேரம் ஆளையே காணோம் ..... போன் பண்ணின சுவிட்ச் ஆப் ன்னு வந்தது ... ஐயையோ பய புள்ளகளுக்கு ஏதோ ஆகிருச்சு போலன்னு பொங்கி வந்த கோவத்துல..... ஒரு வேகத்துல நானும் போனா, அவங்க எல்லோரும் ரிசெப்சன்ல உக்காந்து இருந்தாங்க ....ஏன்டா இங்க உக்காந்து இருக்கீங்கன்னு கேட்டேன் .... நீயும் வாடான்னு சொல்லி என்னோட ரேசுமே புடுங்கி அவங்க கிட்ட கொடுத்துட்டாங்க ... சரி போனா போவது அட்டேன் பண்ணுவோம் ன்னு உள்ள போனேன் .... கடைசிய ரெசுமே குடுத்தால முதல் பேரா என்னோடது..... கிளுஞ்சுதுன்னு சொல்லி உள்ள போனா ஒரு நாப்பது வயசு உள்ள ஒரு லேடி வந்தது .... எல்லா இன்டர்வியூ மாதிரி உக்கார சொல்லி ..... ரெசுமே வாங்கி பாத்து கிட்டே ....
 
"லேடி: நீங்க என்ன போஸ்ட்க்கு வந்து இருக்கீங்கன்னு தெரியுமா ...
நான்: தெரியல மேடம்
லேடி: செம காண்டாகி ரேசுமே தூக்கி என்னோட மூஞ்சில எருஞ்சு கெட் அவுட் ன்னு சொல்லுச்சு ...
((நானும் ஸ்ட்ரஸ் இன்டர்வியூ போலன்ற நெனைப்புல மெதுவா சிருச்சுகிட்டே எந்துருச்சேன்))
லேடி:  I say Get out ன்னு சொல்லி சீட்ட விட்டு எந்துருச்சு அடிக்க வந்துருச்சு ."


நானும் என்னமோ ஏதோன்னு நெனச்சு பயந்து வெளிய ஓடிவந்து ""மச்சி திட்டுது டா அந்த லேடி ஓடி வந்துருங்கடான்னு"" சொல்லிட்டு தல தெறிக்க பஸ் ஸ்டான்ட்க்கு வந்துட்டேன் ....  பஸ் ஸ்டாண்ட்ல உக்காந்து மேல பாத்துகிட்டு யோசிச்சு பாத்தேன் .... அப்படி என தான் பண்ணினேன்னு ... இவங்கள வேற ஆளக்காணோம் .... சரி இவங்களுக்கும் நல்ல டோஸ் விழுகுது போலன்னு நினைச்சு சிருசுக்கிட்டு இருந்தேன்.... 
(ப்ரண்ட திட்டுனா கோவம் வரும் ... க்ளோஸ் ப்ரண்ட திட்டுனா சிரிப்புதான் வரும்)..
கொஞ்ச நேரம் கழுச்சு அவங்க எல்லோரும் வந்தாங்க.... அதுல ராஜா, வேணுகோபால் ரெண்டு பேரும் செலக்ட் ஆகிட்டேன் சொன்னாங்க ....... நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்..... அப்ப ஏன்டா என்ன மட்டும் அந்த லேடி அந்த திட்டு திட்டுச்சுன்னு கேட்டேன் ... என்ன நடந்துன்னு கேட்டாங்க . நானும் மேல நடந்தத மேல பாத்துக்கிட்டே சொன்னேன்(பிளாஷ் பேக்க மேல பாத்து தான சொல்லணும் அது தான வரைமுறை ...)
நான் சொன்னதுக்கு அப்புறம் எல்லோரும் என்ன திட்ட ..ஆரம்பிச்சுட்டாங்க .... Still i dont know why i am getting scold.....
அப்புறம் தான் சொன்னாங்க .... என்ன போஸ்டுக்கு வந்தான்னு கேட்டா .. தெரியலன்னா சொல்றதுன்னு ... I am really Shocked.... Oh My God...
இப்போ நினைச்சாலும் செம காமெடியாதான் இருக்குது .........
மார்ச் 2010... எல்லோருக்கும் இதுல இருந்து கெடச்ச வேலைக்கு போக ஆரம்பிச்சோம் ..... கொஞ்ச பேருக்கு அவங்க நெனச்ச ஏரியால.... கொஞ்ச பேருக்கு அது மிஸ்ஸிங் ... ஆனா சோத்துக்கு வழி பண்ணிகிட்டோம் ..... வீட்ல இருந்து காசு வாங்குறத நிறுத்தி நாங்க வீட்டுக்கு குடுக்க ஆரம்பிச்சோம் .....
கொஞ்ச நாள்ல பசங்க எல்லோரும் வேடந்தாங்கல் போல்லாம்ன்னு பிளான் பன்னி நானும் வயித்த வலின்னு சொல்லி லீவ் வாங்கிட்டு வேடந்தாங்கல் போனோம் ..... இந்த பிளான் போட்டது கார்த்தி .... 

கரெக்டா அவங்க குரூப் டெலிவரி ஆனா எடதுக்கே போய்ட்டாரு 




வரதராஜ்,செந்தில்,ஸ்ரீபதி,விஷ்ணு,நான்,வேணுகோபால் 

வரதராஜ்,வேணுகோபால்,ராஜா,செந்தில்,கார்த்தி,பன்னீர் 





சங்கி அண்ட் மங்கி 

என்ன பன்றார்ருன்னு நீங்களே சொல்லுங்க ...

அப்டியே லைப் போச்சு...... அப்புறமா வந்த நாட்கள்ல சின்ன சின்ன சண்டைகள்ள ரெண்டு மூணு பேர் ரூம காலி பன்னிட்டு போய்ட்டாங்க ... ரெண்டு மூணு பேர் போனா மூணு நாலு பேர் ரூம்க்கு வந்துட்டாங்க ......அந்த வருஷம் கோணம் டல்லாதான் போச்சு ...... எனக்கு வாரத்துல ஒரு நாள் தான் லீவ்..... சோ சண்டே ரூம்ல வருசத்துக்கு ரெண்டு தடவ தான் இருந்தேன்.. :-( ..... அந்த வருஷம் நியூ இயர் எனக்கு ஆபீஸ்ல தான்.... செம கடுப்பா இருந்துச்சு ...... 
நான் கோவப்பட்டதுனாளையான்னு தெரியல அடுத்த வருஷம் நான் வேலை பாத்த client  எங்க எங்களுக்கு உங்க சப்போர்ட் வேனாம்ம்னு சொல்லி அத்துக்கிட்டு போய்ட்டான் ...... சரிதான் போடான்னு சொல்லிட்டு நானும் கெத்தா வேலைய ரிசைன் பன்னிட்டு வந்துட்டேன் ...... அதுக்கு அப்புறம் ஒரு நாலு மாசம் வேலை கிடைக்கல ..... உண்மைய சொல்லும்ன்னா நான் வேலை தேடல .... எல்லாம் கொழுப்பு அதிகமாகிதான்.... கடுப்பா இருந்துச்சு .... அப்போ தான் ... ரூம்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுது ..... 
இதுல உமாநாத் ராஜேஷ்(மண்டையன்) ரெண்டு பேர் மட்டும் தான் மதியம் வரைக்கும் ரூம்ல இருப்பாங்க .... அப்போ தான் இந்த ராஜேஷ் பய பண்ணிக்கிட்டு இருந்த வேலையெல்லாம் தெருஞ்சுது ...... எங்க குரூப்ல இருந்துக்கிட்டு ஒரு பொண்ண (பொண்ணு யாருன்னு சொன்ன என்ன கொன்னே போடுவான்.. அது யாருன்னு எல்லோருக்கும் தெரியும்.... அப்ப தான் தெரிஞ்சுது இவன் ஏன் அஜித் விசிறியா இருக்கிரான்னு....) டாவடுச்சு இருந்துருகிறான்..... இந்த மேட்டர் அப்பப்போ வந்து போற வேடந்தாங்கல் பறவை மாதிரி வந்துகிட்டு இருந்த ஜாவீத் சொல்லி தான் எனக்கும் தெரியும்...... 
என்னன்னமோ நடந்துருக்கு ரூம்ல ...... நல்லவனாவே வாழ்ந்துட்டேன்.... 

இது தாங்க ரூம்ல நடந்துருக்கு ...

ஆனா வெட்டிய இருந்த எங்களுக்கு (நானும், ஜாவீத்) சோறு போட்டு வளத்தான்... இப்போ புரியுதா நாங்க ஏன் இவன தெய்வ நண்பன்னு சொன்னோம்ன்னு ... அதுவும் சாதாரண சாப்பாடு இல்ல .... Check this out....
ONE MORE THING ... FOR EVERY TWO TO THREE DAYS THIS HAS HAPPENED ...





களத்தில் ராஜேஷ்


இதெல்லாம் சும்மா ட்ரைலர் தான் மெயின் பிச்சர் எங்க நாலு பேருக்கு தான் தெரியும் ..(எனக்கு,ராஜேஷ், ஜாவீத், உமாநாத்)... அப்பபோ ராஜேஷ்(ஸ்மால் பாய்)...
இதுல உமாநாத் ஜாவீத் கூட அப்பபோ மிஸ் ஆகிருவாங்க .... பட் நான் என்னைக்குமே மிஸ் ஆனது இல்ல ...... :-) .... அந்த நாலு மாசத்துல மூணு கிலோ ஏறிட்டேன் ..... பின் குறிப்பு: இந்த டிஷ்க்குகெல்லாம் ஸ்பான்சர் ராஜேஷ் தான் ...

மீண்டும் செல்வோம் ....







Thursday, 11 October 2012

எங்கள் சொர்க்கம்-3



சூளைமேடு ரூம்க்கு வர்றதுக்கு முன்னாடி நாங்க பாத்த முதல் படம் நாடோடிகள்உதயம் தியேட்டர்ல. (As per the Review by Mr Javeed)...
என்ன தான் பெரிய தியேட்டர்ஆ இருந்தாலும், ரெண்டு மணி நேரதிர்ருக்கு முன்னாடியே வந்து பத்து ரூபா டிக்கெட் எடுத்து படம் பாக்குற சுகமே தனி. எப்ப படத்துக்கு போவம்ன்னா இண்டர்விஎவ் அட்டென்ட் பன்னிட்டு மதியம் படத்துக்கு. இது தான் எங்க தாரக மந்திரம்.
மதியதுக்குள்ள இண்டர்விஎவ் முடுஞ்சுருமானு கேக்க கூடாது. நம்ம அறிவுக்கு அவ்ளோ நேரம் உக்காந்து இருக்குறதே பெரிய விஷயம். ஓகே......



விஷ்ணு, பன்னீர்

உதயம் தியேட்டர்..

நாங்க பாத்த ரெண்டாவது படம் முத்திரை”....அதே நாலு பேர் தான்...

என்ன தான் உதயம் தியேட்டர் ல படம் பாத்தாலும் சென்னைக்கு வந்து சத்யம் தியேட்டர் ல படம் பாக்கலன்ணா நல்ல இருக்குமா .... எங்க அடுத்த குறிக்கோள் சத்யம் தியேட்டர்.
சத்யம் தியேட்டர்ல ஒரு பிரச்சனை என்னன்னா அவுனக வேற்று மொழி படங்கள் தான் அதிகமா எடுப்பாங்க.
நமக்கு தியேட்டர் போகணும் கழுத எந்த படமா இருந்த என்ன.
நாங்களும் தியேட்டர் போய் அடுச்சு புடுச்சு டிக்கெட் வாங்கலாம்னு போனா ஹிந்தி படம் “Newyork” மட்டும் தான் இருந்தது. நாம படமா பாக்க வந்தோம்... தியேட்டர் தான பாக்க வந்தோம்.. சரின்னு சொல்லி டிக்கெட் வாங்கிட்டு வெளிய வந்திட்டோம்.

 


ராஜேஷ், ராஜா ..
சத்யம் தியேட்டர்



நான்,ராஜா,ராஜேஷ் 

ராஜா, விஷ்ணு 


படமும் ரொம்ப மோசம்ல இல்ல. நல்லாத்தான் இருந்துச்சு.
கத்ரீனா கைப், ஜான் ஆப்ரகாம். ரெண்டு பேர் தான் நமக்க 
தெரிஞ்சது. 
................
அதுக்கு அப்புறம் சபா ரத்தினம் வந்தான்..... லேப்டோபோட....
இங்கிலீஷ் படம் ஒரு நூறு படம் வச்சுருந்தான். இது போதுமே...
தினமும் ரெண்டு படமாவது பாத்து தனியா  சிரிக்கிறது, மல்லாக்க
படுத்துகிட்டு சிரிக்கிறதுன்னு ரூம்ல இருக்குறவங்கள கடுப்பு
ஏத்துறது ஒரு தனி சுகம்.



அப்போ என்னோட பழைய லேப்டாப் இருந்துச்சு. யாரு கண்ணு
பட்டுதோ பாட்டரி வெடுச்சு எருஞ்சு போச்சு. அத கொண்டு போய்
HP சர்வீஸ் சென்டர்ல குடுத்து எனக்கு புது லேப்டாப் வாங்கி
குடுத்தது சாட்சாத் திரு சோமு அண்ட் திரு வேணுகோபால்...
அவங்களுக்கு மெயில் அனுப்பி கேட்டது திரு ராஜா. இவர்களுக்க 
இந்த பொன்னான தருணத்தில் நன்றி கூற கடமை பட்டு
உள்ளேன். நன்றி டா நாதாரிகளா.....



லேப்டாப் வெடுச்ச தழும்பு..... Still its there....After Three years...
அந்த நேரம் பக்கத்துல படுத்து இருந்த மாதவனும், பிரபாகரனும். 
தெறிச்சு அடிச்சு ஓடிட்டாங்க ..... இல்லாட்டி அன்னைக்கே
அவங்களுக்கு சங்கு ஊதி இருக்கணும்.. 
அந்த லேப்டாப் பதிலா புதுசா இன்னொரு லேப்டாப்
கொடுத்தாங்க.. அது இது தான்...
 


ஏர்போர்ட்ல்லாம் சினிமால பாத்ததோட சரி ..... வானத்துல ஏரோப்ளான்  போச்சுனா வாய  பொளந்துக்கிட்டு வேடிக்க பாக்குறது மட்டும் தான் ... அப்ப தான் துரைமுருகனோட (இவரும் கோர்ஸ் படிக்கரன்னு சூளைமேடு ரூம்ல இரு ரெண்டு மாசம் குப்ப கொட்டுனார்)...
அவரோட அத்தையும், மாமாவும் சென்னை ல இருந்து சிங்கப்பூர் போறன்னு சொல்லி இவன சென்ட் ஆப் பண்ண கூப்டாங்க .... அவன் கூடவே நாங்களும் போனோம். அப்ப தான் ஏர்போர்ட்க்குள்ள போனோம்(டிசம்பர் 8 & 27, 2009).... நான், கார்த்தி, பிரபு, விஷ்ணு ... ஸ்பான்சர் துரை முருகன் .... அப்போ டிக்கெட் அறுபது ரூபாய்.. இன்னமும் அந்த டிக்கெட் வச்சுருக்கேன்....


பிரபு, கார்த்தி, துரைமுருகன்



துரை முருகன், பிரபு,விஷ்ணு

ஏர்கோஷ்டஸ் லாம் படத்துல பாத்தது... இப்போ தான் நேர்ல பாத்தோம் ..... எவ்ளோ அழகு ....மேக்கப் தான் நல்லா தெரியும்..... இருந்தாலும் ........ இத சொல்லி ஏன் மொக்க போடுறேன்னு நீங்க நினைக்கலாம் .... காஞ்சு போனா கருர்ல, மொக்க பிகுர்கள் இருந்த காலேஜ் ல படுச்ச ஒவ்வொறு இளைஞர்களின் குமுறல்கள் .....

முருகேசன் 

சபா ரத்தினம் 

ராஜீவ் 

அப்புறம் இன்னும் அஞ்சு  பேர் வந்தாங்க முருகேசன்,ராஜீவ், கோபி (ராஜா பிரான்ட்), சுரேஷ், ராஜேஷ்(குட்ட ராஜேஷ்__  இவரோட ரிலைன்ஸ் அதாங்க சொந்த காரங்க சென்னைல இருக்குறதுனால திங்க தங்க இவருக்கு ப்ரீ....)

இவங்கள பத்தி சொல்லும்ன்னா இவங்க எல்லாம் அப்பப்போ வந்து போற வேடந்தாங்கல் பறவைக மாதிரி வர்றவங்க..... Still they come occasionally...

அடுத்து நியூ இயர்... இப்போ தான் நம்ம ஆனந்த்க்கு வேலை கெடச்சுது... சோ அதுக்கும் அவோன முடுஞ்சு போனா பர்த்டே க்கும் சேத்து ட்ரீட் வச்சான்.... ஆனா பாருங்க கிராதகன் பீர் மட்டும் தாணு சொல்லிட்டான். சரி நமக்கு வாச்சது அவ்வளவுதான்...

ட்ரீட் வச்ச மகராசன் .... எங்கிருந்தாலும் வாழ்க......வாழ்க ......




குவாட்டர்ல வாட்டர மிக்ஸ் பண்ணுங்க..... கொண்டாடுங்க ...


மீண்டும் செல்வோம் ...


Wednesday, 10 October 2012

எங்கள் சொர்க்கம்-2



மீண்டும் ஒரு வாரம் கழித்து சூளைமேடு ரூம்க்கு வந்தோம்.அட்வான்ஸ் லாம் கொடுத்து ஒருவழிய ரூம்க்கு போய் செட்டில்(ரூம்ல மட்டும் தான் ) ஆயிட்டோம்.  நான், ராஜா, விஷ்ணு, சிலம்பரசன், அவரோட நண்பன், மனோஜ், ராஜா சேகர். இவங்க மட்டும் தான் அந்த ரூம்ல இருந்தோம்.  முதல் மாசம் வாடக கொடுகரதுக்குள்ள உசுரு போய் உசுரு வந்தது... பின்ன பத்தாயிரம்ல. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு சிலம்பரசனும் அவனோட நண்பனும் வேலை கெடச்சு ரூம காலி பண்ணிட்டு போய்ட்டாங்க... நானும் என்னோட காலேஜ் ல படுச்ச எல்லோரையும் கூப்பிட்டேன், ஒரு நாதரியும் நான் சென்னை பக்கம் வர மாட்டேன்னு சொன்னாங்க ... கடைசியா மாதவனும்(மேடி), பாலசுந்தரம் (பெருசு ... சத்தியமா உன்னோட பேர் ரூம்ல யாருக்கும் தெரியாது பெருசு சொன்ன தான் தெரியும்யா ...பேருக்கு ஏத்த மாதிரி ஆளும் நல்ல பல்க் தான் இருப்பப்ப்ல).... இளமாறன்(வே, வி இளமாறன் இல்லேங்க எங்க கூட படுச்ச(ஊர் சுத்துன)  ஒரு மொள்ளமாரிங்க .... விஷ்ணுவும்((ஐயர்-- காலேஜ் ல கூட படுச்ச  ஐயர்  பொண்ணு  பேக்க எடுத்து கொடுத்ததோட  விளைவு )) இவனும் ஒரே ஊர்க்காரனுக ....... இதுல மாதவன், பெருசு ரெண்டு பெரும் கோர்ஸ் (Same blood) படுச்சாங்க. இளமாறன் எங்களோட வெட்டியாத்  தான் இருந்தான். இந்த குரூப்லையே ஏன் எங்க காலேஜ் லையே மொதல்ல வேலைக்கு போனது கூர்கா தான்... கூர்கா வேலை இல்லங்க. சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்றன்னு சொன்னான். அது என்ன வேலையோ ஆண்டவனுக்கு தான் தெரியும்.

ஒரு மாசம் கழுச்சு எங்கள் கல்லூரி ஆணழகன் செந்தில் ராஜா வந்தான். ஒரு மாசம் வேலை தேடுரேன்னு. கொஞ்ச நாள் கழுச்சு எங்க ஏரியா ஆளுங்க ஒரு மூணு பேர் வந்தாங்க
பிரபு, சோமு, ஆனந்த். கரெக்டா அவங்க வந்த நேரம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம். நாங்க எல்லோரும் காலைல பல்லு கூட வெளக்கமா... தேசப்பற்று கொஞ்சம் ஓவர் ஆகி தலைமை செயலகம் போனோம். நாங்க போய் சேரதுக்குள்ள கொடி ஏத்திட்டாங்க. சரி பீச் போய் காத்து வாங்கலாம்ன்னு போனோம். காத்து மட்டும் தான் வேற எதுவும் வாங்குற அளவுக்கு யாரும் வொர்த் இல்ல. ஆனா என்ன எங்கள மாதிரி தேசப்பற்று உள்ள ஸ்கூல் பொண்ணுங்களா இல்ல காலேஜ் போன்னுங்களான்னு தெரியல பக்கத்துல வந்து உக்காந்துதுக.

ஆனந்த், செந்தில் ராஜா, விஷ்ணு, மனோஜ், நான், பாலசுந்தரம், சோமு, மாதவன், பிரபு.


மனோஜ், விஷ்ணு, சோமு, இளமாறன், ஆனந்த், பிரபு, பாலா சுந்தரம் , மாதவன், செந்தில் ராஜா.

வேலை:-

இந்த பேர கேட்டலே ஆடோமடிக்கா உடம்பு அலர்ஜி ஆகுது.

நாங்க படுச்சு முடுச்சு வெளிய வந்தப்ப Recession ஆ, சோ எங்க போனாலும் வேலை இல்ல வெளிய போ. அப்டின்னு தொரத்தி விட்டாங்க. நாங்களும் தினமும் கரிக்குலம் விட்டே வ செராக்ஸ் எடுத்துக்கிட்டு தெருத்தெருவா சுத்தினோம். அதுல ஒரு எடம் தான் மஹிந்திர வேர்ல்ட் சிட்டி. இந்த கோஷ்டில இனொரு முக்கியமான ஆள் வந்து சேர்த்தார்.
ஸ்ரீபதி.

இந்த பேர் யார் யாருக்கு தெரியுதோ இல்லையோ எங்க சூளைமேடு ரூம பசங்களுக்கு நல்லாத் தெரியும். இவற பத்தி நாம பின்னாடி பாக்கலாம்.

நாங்க எல்லோரும் இங்க ஏதோ பிக்னிக் போற கணக்கா கெளம்பிட்டோம். இன்னொரு முக்கியமான ஆளும் அவோரோட பிரென்ட் ம் வந்தாங்க. செந்தில்(பின்னுà எங்க கிளாஸ் ரூம்லயே இவனுட பேர் பாதி பேருக்கு தெரியாது அவ்ளோ பேமஸ் இந்த பேர்) அவரோட பிரென்ட் அருண் செல்வம்.


மஹிந்திர வோர்ல்ட் சிட்டி, மறைமலைநகர்.
அருண் செல்வம், செந்தில்(ஏதோ அவனோட பொண்டாட்டி வேற யாரோடவோ ஓடிப்போன மாதிரி உக்காந்து இருக்காரே அவர் தான்), ராஜேஷ்(தெய்வ நண்பன்), ஸ்ரீபதி(தெய்வம்), இளமாறன்(மொள்ளமாரி), அர்ஜுன்(இவரும் எங்க கூட தான் கொஞ்ச நாள் இருந்தார்). செந்தில் ராஜா, விஷ்ணு, ஆனந்த்(புல்லெட்à பயபுள்ள எவ்ளோ ஒல்லிய இருக்கான்)..


தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு........

இன்னொரு முக்கியமான ஆளும் இருக்கிறார். வரதராஜ்à பில்லி சூனியத்திர்ருக்கு பேர் போனவர். ஆனந்த் பக்கத்துல இருக்குறாரே அவர் தான்.


இந்த கம்பனியா யாரு மறந்தாலும் ஸ்ரீபதி மறக்க மாட்டான்.
அங்க இருக்குற வாட்ச்மேன் எங்கள கேட்டார் “தம்பிகளா எவ்ளோ சம்பளம் எதிர் பாக்குறீங்க னு”.. நாங்க ஒரு அஞ்சாயிரம் சொன்னோம். அவரு ஒரு கேவலமான ஒரு லுக் விட்டுட்டு தம்பி நானே பத்தாயிரம் வாங்குறேன் அப்படின்னார்.
நாங்களும் வெக்கமே இல்லாமா சிருச்சுகிட்டே வந்துட்டோம்.


அடுத்து எந்த ஏவுகணைய விண்ணுக்கு அனுப்பலாம்னு யோசிதிக்கொண்டி இருப்பவர் தான் எங்கள் தன்மானசிங்கம் வேணுகோபால்.


மீண்டும் செல்வோம் ..

எங்கள் சொர்க்கம்-1



கொஞ்சம் எழுத்துப்பிழைகள் இருக்கும்....... மன்னியுங்கள் ....

பகுதி -1 

காலேஜ் முடுச்சிட்டு என்ன பன்றதுன்னு தெரியாம இருந்தப்ப தான் நண்பன் ராஜா( நாங்க கூபுட்றது காலேஜ் டான்.... ஆனா உண்மைலேயே அவன் மட்டும் தான் பில்லா அஜித் ரேஞ்சுக்கு நெனைசுக்குவான் ..... ஆனா உண்மையான அர்த்தம்  நம்ம நாய் சேகர் டான் தான்  ) சொன்னான் "டேய் வாடா நெட்வொர்க் கோர்ஸ் ஒன்னு இருக்கு படிக்கலாம்ன்னு(CCNA) "... நாங்க படிச்சு முடுச்சு வெளிய வரும் போது உலகம் பூராவும் Recession ன்ற  பேர்ல கம்பெனில  இருக்குற அப்ப சுப்பைஎல்லாம் வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்ஸ் னு தொரதிக்கிட்டு இருந்தாங்க ..... நார்மலா இருந்தாலே நமக்கு வேலை கிடைக்காது ... இதுல இது வேற ....
சரி வாடா போகலாம்னு வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு பஸ்ல ஏறினோம் ....சொல்ல மறந்துட்டேன் ...நாங்க மட்டும் போய் நாசமா போனா அது நல்ல இருக்குமா ... ரெண்டு பேரையாவது நாசமா போக வைக்க வேணாம் .... யாரு அந்த அடிமைன்னு தேடிக்கிட்டு இருந்தப்ப தான் விஷ்ணு, பன்னீர் னு ரெண்டு பேரு சிக்கினாங்க ......  நாலு பேரும் (நாங்க நாலு பேரு எங்களுக்கு பயம்னா என்னனு தெரியாது .. இந்த டைலாக் உங்க மைன்ட் ல  வந்துச்சுன்ன அதுக்கு நான் பொறுப்பு இல்ல ) சென்னைக்கு பஸ்ல ஏறிட்டோம்... நான் , ராஜா, விஷ்ணு மூணு பேர் மட்டும் தான் திருச்சில இருந்து ஏறினோம் .... 
அப்போ பஸ் டிக்கெட் நூத்தி அஞ்சு ரூபா தான் ... அதுக்கே பேரம் பேச ட்ரை பண்ணினோம் பட் அது கவேர்மென்ட் பபஸ்ன்றதுனால விட்டுட்டோம்..... ((அவ்ளோ பஞ்சம் )) ...... 

அடுத்த ஸ்பாட் சென்னை 

சென்ட்ரல் லாம் இல்ல ..நாங்க வந்தது பஸ்ல சோ கொயம்பேட்டுல நாலுமணி இருக்கும் .... பழைய படம் ஹீரோ மாதிரி மூணு பேரும் ஆளுக்கு ஒரு பேக் னு ... லோக்கல் பஸ் நிக்கிற எடத்துல உக்காந்து இருந்தோம் ...... கடைசில தான் வந்து  சேந்தாரு ....... விநாயக் மகாதேவ் லாம் இல்லங்க ... வந்தது ஒரு நாதாரி  தான் ...

அட சீ .. இந்த நாதரிக்கு இவ்ளோ பில்ட் அப்பான்னு உங்க மைன்ட் ல ஓடுறது என்னக்கு கேக்குது ...
வேற யாரு நம்ம 

பன்னீர் ... தான் 

சோ நாலு பேரும் ஒன்ன உக்காந்து இருந்தோம் ... இப்போ பிரச்சன எங்க தங்குறது .தான் ???... சென்னைக்கு கிளம்புறதுக்கு முன்னாடியே ராஜா அவுங்க சொந்த காரங்க யாரோ சென்னைல இருக்குராங்கன்னு சொன்னான் ..சோ அவுங்க கிட்ட சொல்லி ஒரு ரூம் பாக்க சொன்னோம் அவரும் ரூம் இருக்குது பா வா தங்கிகள்ளம்னு சொன்னாரு ... நாங்களும் நம்ம்பி சென்னை வந்துட்டோம் ..... நாலு மணிக்கு அவருக்கு போன் பண்ணா வேண்டாம்ம்னு .... ஆளுக்கு ஒரு பேக் க தலைக்கு வச்சு படுதுட்டோம் .... பஸ்ல வந்ததுன்னால அர தூக்கத்துல இருந்தோம் .. நல்ல தூங்கிட்டோம் .... அந்த கொசு கடிளையும் செம தூக்கம் ....ஹ்ம்ம் ...

ஒரு வழிய பொழுது விடுஞ்சு மணி ஆறு ஆச்சு ...... அவருக்கு போன் பண்ணினா "நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமையம் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் " அப்டின்னு வந்துச்சு .... அவ்ளவுதான் ... நாலு பேருக்கும் அல்லு விட்டு போச்சு ..... 

"டேய் பதட்டுதுல வேற யாருக்காவது போன் பண்ணிடையோ நம்பர நல்லா  செக் பன்னுடானு " விஷ்ணு சொன்னான் ....
அவனும் செக் பண்ணிட்டு "இல்ல மச்சி நம்பர் கரெட் தாண்டானு " சொன்னான் . மறுபடியும் ட்ரை பன்னி ட்ரை பன்னி ட்ரை பன்னி ..... ஒரு வழிய ஆறேமுக்களுக்கு போன எடுத்தாரு .... அப்பதான் எங்களுக்கு உசுரே வந்துச்சு ..

தம்பிகளா நீங்க கோயம்பேடு லிருந்து பஸ் புடுச்சு காசி தியேட்டர் வந்துருங்கப்பன்னு சொன்னாரு ..... நாங்களும் போய்ட்டோம் ..... அப்ப அங்க அயன் படம் ஓடிகிட்டு இருந்தாதா நியாபகம் ..... நாலு பேரும் அவர் கூட ஜபார்க்கான் பேட் ல இருக்கு அவரோட எம்ப்லோயீஸ் இருக்குற ரூம்க்கு போய்ட்டோம் ..... அங்க ரெண்டு பேர் தான் இருந்தாங்க ..... நாங்க போனதையும் ஒருத்தர் ரூம காலி பண்ணிக்கிட்டு போய்ட்டார் (சத்தியமா நாங்க ஒன்னும் பண்ணல ).... நாங்க போன அன்னைக்கே கோர்ஸ் ஜாய்ன் பண்ணனும் ... ஒவ்வொருத்தரா குளிக்க பாத்ரூம் போனா அங்க தான் வச்சாங்க ட்விஸ்ட் ........ பாத் ரூம் டைலேட் ரெண்டுலயும் தாப்பால் வொர்க் ஆகல .... பாத் ரூம் கூட ஓகே .... கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னி கிட்டோம் ...... இன்னொன்னு.....ஸ்ஸ்ஸ் பப்ப முடியல ......

அந்த வீட்டு ஒனரம்மா செம ரௌடி போல பக்கத்து வீட்டு ஆளுக கூட போடுர சண்டைல தான் கத்துக்கிடோம் ரொம்ப கேட்ட வார்த்தைங்க .....

சரி போங்கடா ஓசில தான் தங்கி இறுக்கோம் ன்னு ..... ஒரு வழிய குளிச்சு கிளம்பிட்டோம் ...ஆனா அந்த ரூம காலி பன்னிட்டு வரும்போது நாங்க நாலு  பேரும் வாடகைய கொடுத்த்ட்டோம்.. பின்ன வரலாறு எங்கள தப்பா பேச கூடாதுல்ல.... பாரு ஓசி ல ஒரு மாசம் தங்கிட்டு போயட்டனுகன்னு.... 

NIIT, Nungambakkam.

எங்க வாழ்க்கைல (உனக்கு ஏது வாழ்க்கை னு நீங்க கேக்குறது எனக்கே கேக்குது சரி விடுங்க ).... நல்லது நடந்த நாளா... இல்ல கேட்டது நடந்த நாளானு இன்னும் எங்களுக்கு தெரியல ....

உள்ள போனதியும் தம்பி வாங்க மொதல்ல காச கட்டுங்க அப்புறம் தான் கிளாஸ் ரூம்க்கு உள்ள போகனும்ம்னு சொல்லிட்டாங்க(ஜஸ்ட 25K/Per head தானாம் ) .... நாங்களும் காச கட்டிட்டு  உள்ள போனா .............
 
நுங்கம்பாக்கம் NIIT ....

எல்லோரும் நீட்டன டிரஸ் ல ஏதோ ரேமன்ட் மாடல் கணக்கா உக்காந்து இருந்தாங்க .... ((எங்க ராசி யானு தெரியல ஒரு பொண்ணு கூட இல்ல ..போனா ஜென்மத்துல என்ன பாவம் பண்ணிநோம்ன்னு தெரியல ..:-(..... ))
நாங்க எப்படி போய் இருப்போம்ம்னு உங்களுக்கே தெரியும் ... அத வேற சொல்ல வேண்டியது இல்ல ..... சரி விடு மச்சி னு சொல்லிடு நம்ம வழக்கமா உக்கார எடம்மான கடைசில ரோல போய் உக்கந்துக்கிட்டோம் ..... என்ன ஒவ்வொருதனுக்கும் ஒரு கம்ப்யூட்டர்.... நாங்க வழக்கம் போல காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி கம்ப்யூட்டர் பாத்ததியும் ஜிமெயில் யாஹூ னு நொண்ட ஆரம்பிச்சிட்டோம் ..... ஆனா ரொம்ப அறிவாளிக கணக்கா Orkut அ பிளாக் பண்ணிட்டாங்க ..... நாம யாரு Hacker ராஜா இருந்ததுனால அத அன்பிளாக் பன்னி Orkut செக் பண்ண ஆரம்பிச்சுட்டோம் .... நம்ம கையும் காலும் சும்மா இருக்குமா வழக்கம் போல படம் டவுன்லோட் பண்ண ஆரம்பிச்சுட்டேன் ..... அரை மணி நேரம் கழுச்சு ஒரு பிகர் வந்துச்சு .... பேரு காயத்ரி .... கிளாஸ் ரூம்க்கு உள்ள வந்து  அந்த ஆத்து ஆத்துது ... ஒரு எழவும் புரியல .... பக்கதுல இருந்த ராஜா வ கேட்ட அவனுக்கும் அரகொற தான் .. அவனுக்காவது அரகொற .. எங்களுக்கு சுத்தம் ..... சரி அந்த பிகரையாவது சைட் அடிக்கலாம்னு கொஞ்சம் நெத்திய உத்து பாத்த ....... கல்யாணம் ஆயிருச்சு .... ஹ்ம்ம்ம் .. நமக்கு  மட்டும் ஏன்டா இப்படி நடக்குதுன்னு நினைச்சுக்கிட்டு அந்த பொண்ணு சொல்ல்றதெல்லாம் புரியரமாதிரியே உக்காந்து இருந்தேன் ..... இருந்தோம் ..... 



Raja, Vishnu, Panneer, Me....

கிளாஸ் டைமிங் மதியம் ஒரு மணிலருந்து  அஞ்சுமணி வரைக்கும் (இருபது நாள் மொத்தம் எண்பது மணி நேரம் )......
இதுலயே ரெண்டு மணி நேரம் ஆகி இருச்சு .... சரி மொத நாள் தானான்னு விட்டுட்டோம் ....

அது எண்ணனே தெரியல எவளவுக்கு எவ்வளவு காசு காட்டி படிக்கிறேன்னு சொல்லி அமெரிக்கா வே போனாலும்..... கிளாஸ் எடுக்க யாரும் வரலைனாலோ  இல்ல கிளாஸ் எடுக்க லேட் ஆச்சுனாலோ  அவ்வளோ சந்தோசம் ....

NIIT  கோர்ஸ் சேர்றதுக்கு விஜய் னு  ஒருத்தரு கிட்ட தான் அட்வான்ஸ்லாம் கொடுத்து சேந்தோம் ... மொத நாள் முடுஞ்சு வெளிய வந்த உடனையே எங்க நாலு பேரையும் கூப்பிட்டார் .... மேலையும் கீழையும் ரெண்டு தடவ தலைய(அவரோட ) ஆட்டி ஸ்லோ மோஷன்ல பாத்தார் .....

உங்களுக்கு English  நல்ல பேச வரதுல்ல னு சொன்னார் ...(எப்படிதான் கண்டு பிடிக்கிராங்கலோ ).... நாங்க தலைய நாலு பேரும் நாலு பக்கம் ஆட்டுனோம் .... இதுலயே மனுஷன் கண்டு புடுசுட்டார் ...... 

நான் சொல்ற கேள்விகளுக்கு எல்லாம் நீங்க ஒரு வாரத்துல ஆன்சர் சொல்லணும் சொல்லிட்டு .... ஒரு பத்து கேள்வி சொன்னார் ...
1. What is your AIM?
2. Tell me about your self?
3. What is your hobbies?
4. Tell me about your college?
5. Tell me about your project?
6. இதெல்லாம் மறந்து போச்சுங்க 
7. இதெல்லாம் மறந்து போச்சுங்க 
8. இதெல்லாம் மறந்து போச்சுங்க  
9. இதெல்லாம் மறந்து போச்சுங்க 
10. இதெல்லாம் மறந்து போச்சுங்க 

இந்த கேள்விகள சொன்னதியும் நாங்க ஒருதர ஒருத்தர் மூஞ்சிய  பாத்தோம் ...

நாலு பேருக்கும் செம சிரிப்பு ... அத பாத்து அந்த மனுஷன் செம கடுப்பு ஆகிட்டார் ... ஒரு வாரம் டைம் கொடுத்தவரு மூணு நாளா குறைச்சிட்டார் ....
அதற்க்கு அப்புறம் அவர் முன்னாடி கேட்ல தான இருப்பாரு(அவரு செக்யூரிட்டி இல்லேங்க ரிசப்சன் பக்கத்துல தான் அவரோட டேபிள்) நாம பின்னாடி கேட் வழிய போய் போயிருவோம் ..... ஒரு நாள் பாத்துட்டு உங்களுக்கு நல்லது பண்ணலாம்ன்னு நெனச்சேன் நீங்க தேற மாடீங்கன்னு சொல்லிட்டார் ....அப்பவே  எங்க எதிர் காலத்த ரொம்ப கரெக்ட் சொன்னாரு ....

சரி விடுன்னு  சொல்லிட்டு கெளம்பி ரூம்க்கு வந்தா செம பசி .... பக்கத்துக்கு கடைல(ஸ்ரீ விநாயகா ஹோட்டல் ) போய் ஆளுக்கு நாலு பரட்டோ சாபிட்டோம்.. மொத்த பில்லு 80 ரூபா . நாங்க அப்டியே ஷாக் ஆகிட்டோம். சரி இங்கயே காலைலயும் வரல்லாம் சொல்லிட்டு ரூம்க்கு போய்ட்டோம். 


மறுநாள் காலைல அந்த கடைக்கு போய் டிபன் வாங்கிட்டு வரல்லம்னு ரெண்டு பேர் போனோம். ஆளுக்கு நாலு இட்லி ஒரு வடை மொத்தம் 40 ரூபா . எங்க கண்ணுல தண்ணி வந்துருச்சு. மகராசா எங்க இருந்தாலும் நல்ல இருப்பான்னு சொல்லி வாழ்த்திட்டு பொழப்ப பாக்க போய்ட்டோம் . வேறென்ன லேப்டாப் ல படம் பாக்க தான் . பின்ன ஒரு மணி வரைக்கும் சும்மா தான இருக்கணும். 


 ஸ்ரீ விநாயக ஹோட்டல் 
ராஜா விஷ்ணு ....

இதே மாதிரி தான் தினமும். காலை - நாலு இட்லி ஒரு வடை ,  மதியம்- ஒரு ப்ரூட் மிக்சர், சாயங்காலம்- ரெண்டு வடை, நைட்- நாலு பரோட்டா .

இப்டியேதான் போனது இருபது நாளும் போனது ... இதற்கு இடையில் தான் கார்த்தி (((China )..சாரி மச்சி உன்ன கார்த்தி சொன்ன ஒருத்தனுக்கும் தெரியாது .அதான் ..))) சென்னைக்கு வந்தாரு அவரு அவுங்க அண்ணன் யாரோ சென்னைல இருக்குறத சொல்லி அங்க தங்கிட்டாறு.



மெரினா பீச்ல ...பன்னீர் ராஜா கார்த்தி விஷ்ணு ....
ஜூன் 10, 2009



அந்த இருபது நாளும் முடியறதுக்கு முன்னாடி ராஜேஷ்(மண்டையன் ---சாரி மச்சி ஒருத்தனுக்கும் உன்னோட பேர் தெரியாது) (இங்க தான் அவர் என்ட்ரி ஆகுறார் ).






ஸ்பென்சர் பிளாசா ..

ராஜேஷ், விஷ்ணு, ராஜா.

ராஜேஷ்à இவற பத்தி சொன்னா இன்னும் பத்து பக்கம் எழுதணும். ஷார்டா சொல்னும்னா எங்க “தெய்வ நண்பன்”

இது நாங்க எல்லோரும் ஸ்பென்சர் பிளாசா ல ஷாப்பிங் போனப்ப எடுத்தது.
நீங்க நினைக்குற ஷாப்பிங் இல்லங்க. இதுக்கு பேர் வேற.
Window Shopping.



ராஜேஷ்(), பன்னீர் , கார்த்தி.S, மோகன் ராஜ், கார்த்தி (சைனா..:-)).... எல்லோரும் நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பக்கதுல ஒரு 1BHK ரூம் எடுத்து தங்கி இருந்தாங்க. எங்க நாலு பேர்ல பன்னீர் க்கு மட்டும் ரூம் இருந்துச்சு . நாங்க மூணு பெரும் (Still அன்னக்காவடிகள் தான் )..... 
அப்போ தான் ஒரு நாள் எங்க வாழ்க்கைல ஒரு ஒளி வந்தது ..... (கரண்ட்டெல்லாம் வரல ) .....
 IT சிலம்பரசன் அவனோட நண்பன் ஒருத்தன் ... அப்புறம் எங்க அஞ்சா நெஞ்சம், வீராத்தி சாரி வீராதி வீரன், மனித குல மாணிக்கம் எங்கள் அண்ணன் திரு மனோஜ் அவர்கள்(மச்சி மனோஜ் னு சொன்ன எனக்கே யாருன்னு தெரிய மாட்டேங்குது ..... திரு கூர்கா அவர்கள் ) எங்களுக்கு வாழ்வு தந்தார் . அது தான் இந்த சூளைமேடு பேலஸ்(3BHK_ஜூலை 2,  2009) ..... திக்கு தெரியாம, தெச தெரியாம போய் கொண்டு இருந்த எங்களுக்கு பாதை காட்டினார் ...... இதுக்கு மேல நீ கொடுத்த காசுக்கு உன்ன வாழ்த்த  முடியாது மச்சி ...... இவன் காட்டின பாதைன்ன நீங்க நினைக்குற வாழ்க்க பாதை இல்ல ... அண்ணா  நெடும் பாதைய..... அப்புறம் இந்த ரூம்க்கு வந்து அவங்க கிட்ட வாடகை எவ்ளோ அட்வான்ஸ் எவ்ளோ னு கேட்டுட்டு ... ஊர் பக்கம் போய்ட்டோம் ...... ரெஸ்ட் எடுக்கங்க .... 

மீண்டும் செல்வோம்....