Thursday, 18 October 2012

எங்கள் சொர்க்கம்-4


போன பார்ட்ல போட்டோவா போட்டு கவர் பண்ணிட்டேன்னு சொன்னாங்க ..... உண்மையிலையே அததான் நானும் பண்ணினேன் ... அதுனால தான் இந்த பார்ட கொஞ்சம் எழுதலாம்னு ட்ரை பண்ணி இருக்கேன்.......

புது வருசமாவது நல்லா படிய இருக்கும்ன்ற ஆசையில தண்ணி தம்மோட  ஆரம்பிச்சோம். மறுபடியும் வேலை தேடும் படலம். ஸ்ஸ் முடியல .... படுச்சதுக்கு தான் வேலை கெடைக்கல ... சரி கெடைச்ச வேலைக்காவது போகலாம்ன்னு ... ஆட்டோகிராப் சேரன் கணக்கா எந்த வேலையா இருந்தாலும் பரவாஇல்ல, எவ்ளோ தூரமா இருந்தாலும் பரவா இல்லன்னு.... கெடச்ச வேலைக்கு போக ஆரம்பிச்சோம் ..... எங்க எல்லோரையும் வரவேத்த சூளைமேடு ரூம் மாதிரி ... எங்க எல்லோருக்கும் வேலை கொடுத்தது, மேத்தா நகர்ல இருக்குற HOV Services  தான் .... சிவாஜி ரஜினி மாதிரி நீங்க வந்தா மட்டும் போதும்னு போன எல்லோருக்கும் வேலை குடுத்த முதல் கம்பெனி.... சூளைமேடு ரூம்ல இருந்த, இருக்குற, எல்லோரும் அங்க தான் முதல் வேலைய தொடங்குனோம்... அங்க சேரும் போது கேட்ட முதல் கேள்வி "ஏன் தம்பி BE படுச்சிட்டு டேட்டா என்ட்ரி வேலைக்கு சேர்றீங்கன்னு தான்"... நாங்க என்ன சொல்ல முடியும்...... எதுவோ சொல்லி சமாளிச்சு வேலைக்கு சேர்ந்திட்டோம் .....
      முதல்ல சேர்ந்தது செந்தில் குமார், ஸ்ரீபதி.... அதுக்கு அப்புறம் எல்லோரும் பொய் சேர்ந்துட்டோம்... நான், சோமு,விஷ்ணு,இளமாறன், பிரபு, விஜய் சங்கர், சதீஷ்,.... இதுல ஸ்ரீபதி ஒரு வருஷம் பக்கம் அதே கம்பெனி இருந்தான்... பிரபு ஒரு வருசதுக்கு மேல அதே கம்பெனில இருந்தான்.... இன்னும் ஒரு ஜீவன் இருந்துச்சு..... அந்த காலத்துல பட்னதுக்கு போற பெரியவங்க மஞ்ச பைய தூக்கிட்டு வர்ற மாதிரி சூட்கேஸ் தூக்கிட்டு வந்தாரு..... திரு உமாநாத்..... இந்த பேர பாத்ததியும் உங்கள்ள எத்தன பேறு தனிய சிரிசீங்கன்னு தெரியல..... அந்த அளவுக்கு இந்த பேர் பிரபலம்... அவரோட திரு தங்கதுரையும் வந்தார்..... இவரு ஒரு மாசத்துலையே ஊர்பக்கம் போய்ட்டார்(அவரோட புது ஷூ இங்கயே விட்டுட்டு போய்ட்டார்.. J)..... மீதி இருந்த எல்லோரும் ஒரு மாசத்துலயே ஓடி வந்துட்டோம்.... கொடுமைல்லாம் இல்ல ... அதுக்கு அப்புறம் Recession கொஞ்சம் கண்ட்ரோல்லுக்கு வந்து எல்லோருக்கும் அவங்க அவங்க இண்டரஸ்ட் இருந்த fieldல வேலை கெடைக்க ஆரம்பிச்சது.

         ஜனவரி மாசம்னு நினைக்குறேன் சரியா நியாபகம் இல்ல .... நான், வேணு கோபால், ராஜா, அருண் எல்லோரும் ஜெமினி பாலத்துக்கு பக்கதுல இருந்த Drasis ன்ற ஒரு BPO ல இன்டர்வியூ போனோம்... அந்த நேரத்துல காலைல இருந்து கொஞ்சம் அலஞ்சதால சோர்வா இருந்ததால நான் வரல டா .. நீங்க  மட்டும் போங்கடான்னு சொல்லி நான் பஸ் ஸ்டான்ட்லையே வெயிட் பநீட்டு இருந்தேன்..... உண்மையா ரீசன் என்னோட பேன்ட் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பாத்ததுல கொஞ்சம் டேமேஜ் ஆயிருச்சு .... அதனால தான் நான் வரலன்னுடேன் .... அவங்களும் போய் ஒரு மணி நேரம் ஆளையே காணோம் ..... போன் பண்ணின சுவிட்ச் ஆப் ன்னு வந்தது ... ஐயையோ பய புள்ளகளுக்கு ஏதோ ஆகிருச்சு போலன்னு பொங்கி வந்த கோவத்துல..... ஒரு வேகத்துல நானும் போனா, அவங்க எல்லோரும் ரிசெப்சன்ல உக்காந்து இருந்தாங்க ....ஏன்டா இங்க உக்காந்து இருக்கீங்கன்னு கேட்டேன் .... நீயும் வாடான்னு சொல்லி என்னோட ரேசுமே புடுங்கி அவங்க கிட்ட கொடுத்துட்டாங்க ... சரி போனா போவது அட்டேன் பண்ணுவோம் ன்னு உள்ள போனேன் .... கடைசிய ரெசுமே குடுத்தால முதல் பேரா என்னோடது..... கிளுஞ்சுதுன்னு சொல்லி உள்ள போனா ஒரு நாப்பது வயசு உள்ள ஒரு லேடி வந்தது .... எல்லா இன்டர்வியூ மாதிரி உக்கார சொல்லி ..... ரெசுமே வாங்கி பாத்து கிட்டே ....
 
"லேடி: நீங்க என்ன போஸ்ட்க்கு வந்து இருக்கீங்கன்னு தெரியுமா ...
நான்: தெரியல மேடம்
லேடி: செம காண்டாகி ரேசுமே தூக்கி என்னோட மூஞ்சில எருஞ்சு கெட் அவுட் ன்னு சொல்லுச்சு ...
((நானும் ஸ்ட்ரஸ் இன்டர்வியூ போலன்ற நெனைப்புல மெதுவா சிருச்சுகிட்டே எந்துருச்சேன்))
லேடி:  I say Get out ன்னு சொல்லி சீட்ட விட்டு எந்துருச்சு அடிக்க வந்துருச்சு ."


நானும் என்னமோ ஏதோன்னு நெனச்சு பயந்து வெளிய ஓடிவந்து ""மச்சி திட்டுது டா அந்த லேடி ஓடி வந்துருங்கடான்னு"" சொல்லிட்டு தல தெறிக்க பஸ் ஸ்டான்ட்க்கு வந்துட்டேன் ....  பஸ் ஸ்டாண்ட்ல உக்காந்து மேல பாத்துகிட்டு யோசிச்சு பாத்தேன் .... அப்படி என தான் பண்ணினேன்னு ... இவங்கள வேற ஆளக்காணோம் .... சரி இவங்களுக்கும் நல்ல டோஸ் விழுகுது போலன்னு நினைச்சு சிருசுக்கிட்டு இருந்தேன்.... 
(ப்ரண்ட திட்டுனா கோவம் வரும் ... க்ளோஸ் ப்ரண்ட திட்டுனா சிரிப்புதான் வரும்)..
கொஞ்ச நேரம் கழுச்சு அவங்க எல்லோரும் வந்தாங்க.... அதுல ராஜா, வேணுகோபால் ரெண்டு பேரும் செலக்ட் ஆகிட்டேன் சொன்னாங்க ....... நான் அப்டியே ஷாக் ஆகிட்டேன்..... அப்ப ஏன்டா என்ன மட்டும் அந்த லேடி அந்த திட்டு திட்டுச்சுன்னு கேட்டேன் ... என்ன நடந்துன்னு கேட்டாங்க . நானும் மேல நடந்தத மேல பாத்துக்கிட்டே சொன்னேன்(பிளாஷ் பேக்க மேல பாத்து தான சொல்லணும் அது தான வரைமுறை ...)
நான் சொன்னதுக்கு அப்புறம் எல்லோரும் என்ன திட்ட ..ஆரம்பிச்சுட்டாங்க .... Still i dont know why i am getting scold.....
அப்புறம் தான் சொன்னாங்க .... என்ன போஸ்டுக்கு வந்தான்னு கேட்டா .. தெரியலன்னா சொல்றதுன்னு ... I am really Shocked.... Oh My God...
இப்போ நினைச்சாலும் செம காமெடியாதான் இருக்குது .........
மார்ச் 2010... எல்லோருக்கும் இதுல இருந்து கெடச்ச வேலைக்கு போக ஆரம்பிச்சோம் ..... கொஞ்ச பேருக்கு அவங்க நெனச்ச ஏரியால.... கொஞ்ச பேருக்கு அது மிஸ்ஸிங் ... ஆனா சோத்துக்கு வழி பண்ணிகிட்டோம் ..... வீட்ல இருந்து காசு வாங்குறத நிறுத்தி நாங்க வீட்டுக்கு குடுக்க ஆரம்பிச்சோம் .....
கொஞ்ச நாள்ல பசங்க எல்லோரும் வேடந்தாங்கல் போல்லாம்ன்னு பிளான் பன்னி நானும் வயித்த வலின்னு சொல்லி லீவ் வாங்கிட்டு வேடந்தாங்கல் போனோம் ..... இந்த பிளான் போட்டது கார்த்தி .... 

கரெக்டா அவங்க குரூப் டெலிவரி ஆனா எடதுக்கே போய்ட்டாரு 




வரதராஜ்,செந்தில்,ஸ்ரீபதி,விஷ்ணு,நான்,வேணுகோபால் 

வரதராஜ்,வேணுகோபால்,ராஜா,செந்தில்,கார்த்தி,பன்னீர் 





சங்கி அண்ட் மங்கி 

என்ன பன்றார்ருன்னு நீங்களே சொல்லுங்க ...

அப்டியே லைப் போச்சு...... அப்புறமா வந்த நாட்கள்ல சின்ன சின்ன சண்டைகள்ள ரெண்டு மூணு பேர் ரூம காலி பன்னிட்டு போய்ட்டாங்க ... ரெண்டு மூணு பேர் போனா மூணு நாலு பேர் ரூம்க்கு வந்துட்டாங்க ......அந்த வருஷம் கோணம் டல்லாதான் போச்சு ...... எனக்கு வாரத்துல ஒரு நாள் தான் லீவ்..... சோ சண்டே ரூம்ல வருசத்துக்கு ரெண்டு தடவ தான் இருந்தேன்.. :-( ..... அந்த வருஷம் நியூ இயர் எனக்கு ஆபீஸ்ல தான்.... செம கடுப்பா இருந்துச்சு ...... 
நான் கோவப்பட்டதுனாளையான்னு தெரியல அடுத்த வருஷம் நான் வேலை பாத்த client  எங்க எங்களுக்கு உங்க சப்போர்ட் வேனாம்ம்னு சொல்லி அத்துக்கிட்டு போய்ட்டான் ...... சரிதான் போடான்னு சொல்லிட்டு நானும் கெத்தா வேலைய ரிசைன் பன்னிட்டு வந்துட்டேன் ...... அதுக்கு அப்புறம் ஒரு நாலு மாசம் வேலை கிடைக்கல ..... உண்மைய சொல்லும்ன்னா நான் வேலை தேடல .... எல்லாம் கொழுப்பு அதிகமாகிதான்.... கடுப்பா இருந்துச்சு .... அப்போ தான் ... ரூம்ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுது ..... 
இதுல உமாநாத் ராஜேஷ்(மண்டையன்) ரெண்டு பேர் மட்டும் தான் மதியம் வரைக்கும் ரூம்ல இருப்பாங்க .... அப்போ தான் இந்த ராஜேஷ் பய பண்ணிக்கிட்டு இருந்த வேலையெல்லாம் தெருஞ்சுது ...... எங்க குரூப்ல இருந்துக்கிட்டு ஒரு பொண்ண (பொண்ணு யாருன்னு சொன்ன என்ன கொன்னே போடுவான்.. அது யாருன்னு எல்லோருக்கும் தெரியும்.... அப்ப தான் தெரிஞ்சுது இவன் ஏன் அஜித் விசிறியா இருக்கிரான்னு....) டாவடுச்சு இருந்துருகிறான்..... இந்த மேட்டர் அப்பப்போ வந்து போற வேடந்தாங்கல் பறவை மாதிரி வந்துகிட்டு இருந்த ஜாவீத் சொல்லி தான் எனக்கும் தெரியும்...... 
என்னன்னமோ நடந்துருக்கு ரூம்ல ...... நல்லவனாவே வாழ்ந்துட்டேன்.... 

இது தாங்க ரூம்ல நடந்துருக்கு ...

ஆனா வெட்டிய இருந்த எங்களுக்கு (நானும், ஜாவீத்) சோறு போட்டு வளத்தான்... இப்போ புரியுதா நாங்க ஏன் இவன தெய்வ நண்பன்னு சொன்னோம்ன்னு ... அதுவும் சாதாரண சாப்பாடு இல்ல .... Check this out....
ONE MORE THING ... FOR EVERY TWO TO THREE DAYS THIS HAS HAPPENED ...





களத்தில் ராஜேஷ்


இதெல்லாம் சும்மா ட்ரைலர் தான் மெயின் பிச்சர் எங்க நாலு பேருக்கு தான் தெரியும் ..(எனக்கு,ராஜேஷ், ஜாவீத், உமாநாத்)... அப்பபோ ராஜேஷ்(ஸ்மால் பாய்)...
இதுல உமாநாத் ஜாவீத் கூட அப்பபோ மிஸ் ஆகிருவாங்க .... பட் நான் என்னைக்குமே மிஸ் ஆனது இல்ல ...... :-) .... அந்த நாலு மாசத்துல மூணு கிலோ ஏறிட்டேன் ..... பின் குறிப்பு: இந்த டிஷ்க்குகெல்லாம் ஸ்பான்சர் ராஜேஷ் தான் ...

மீண்டும் செல்வோம் ....







5 comments: