கொஞ்சம் எழுத்துப்பிழைகள் இருக்கும்....... மன்னியுங்கள் ....
பகுதி -1
காலேஜ் முடுச்சிட்டு என்ன
பன்றதுன்னு தெரியாம இருந்தப்ப தான் நண்பன் ராஜா( நாங்க கூபுட்றது காலேஜ் டான்....
ஆனா உண்மைலேயே அவன் மட்டும் தான் பில்லா அஜித் ரேஞ்சுக்கு நெனைசுக்குவான் .....
ஆனா உண்மையான அர்த்தம் நம்ம நாய் சேகர் டான் தான் )
சொன்னான் "டேய் வாடா நெட்வொர்க் கோர்ஸ் ஒன்னு
இருக்கு படிக்கலாம்ன்னு(CCNA)
"... நாங்க படிச்சு முடுச்சு வெளிய வரும் போது உலகம் பூராவும் Recession ன்ற பேர்ல
கம்பெனில இருக்குற அப்ப சுப்பைஎல்லாம் வெளிய போங்கடா
அயோக்கிய ராஸ்கல்ஸ் னு தொரதிக்கிட்டு இருந்தாங்க ..... நார்மலா இருந்தாலே நமக்கு
வேலை கிடைக்காது ... இதுல இது வேற ....
சரி வாடா போகலாம்னு வந்தாரை
வாழ வைக்கும் சென்னைக்கு பஸ்ல ஏறினோம் ....சொல்ல மறந்துட்டேன் ...நாங்க மட்டும்
போய் நாசமா போனா அது நல்ல இருக்குமா ... ரெண்டு பேரையாவது நாசமா போக வைக்க வேணாம்
.... யாரு அந்த அடிமைன்னு தேடிக்கிட்டு இருந்தப்ப தான் விஷ்ணு, பன்னீர் னு ரெண்டு பேரு
சிக்கினாங்க ...... நாலு பேரும் (நாங்க நாலு
பேரு எங்களுக்கு பயம்னா என்னனு தெரியாது .. இந்த டைலாக் உங்க மைன்ட் ல வந்துச்சுன்ன
அதுக்கு நான் பொறுப்பு இல்ல ) சென்னைக்கு பஸ்ல ஏறிட்டோம்... நான் , ராஜா, விஷ்ணு மூணு பேர் மட்டும்
தான் திருச்சில இருந்து ஏறினோம் ....
அப்போ பஸ் டிக்கெட் நூத்தி
அஞ்சு ரூபா தான் ... அதுக்கே பேரம் பேச ட்ரை பண்ணினோம் பட் அது கவேர்மென்ட்
பபஸ்ன்றதுனால விட்டுட்டோம்..... ((அவ்ளோ பஞ்சம் )) ......
அடுத்த ஸ்பாட் சென்னை
சென்ட்ரல் லாம் இல்ல
..நாங்க வந்தது பஸ்ல சோ கொயம்பேட்டுல நாலுமணி இருக்கும் .... பழைய
படம் ஹீரோ மாதிரி மூணு பேரும் ஆளுக்கு ஒரு பேக் னு ... லோக்கல் பஸ் நிக்கிற
எடத்துல உக்காந்து இருந்தோம் ...... கடைசில தான் வந்து சேந்தாரு
....... விநாயக் மகாதேவ் லாம் இல்லங்க ... வந்தது ஒரு நாதாரி தான்
...
அட சீ .. இந்த நாதரிக்கு
இவ்ளோ பில்ட் அப்பான்னு உங்க மைன்ட் ல ஓடுறது என்னக்கு கேக்குது ...
வேற யாரு நம்ம
பன்னீர் ... தான்
சோ நாலு பேரும் ஒன்ன
உக்காந்து இருந்தோம் ... இப்போ பிரச்சன எங்க தங்குறது .தான் ???... சென்னைக்கு
கிளம்புறதுக்கு முன்னாடியே ராஜா அவுங்க சொந்த காரங்க யாரோ சென்னைல
இருக்குராங்கன்னு சொன்னான் ..சோ அவுங்க கிட்ட சொல்லி ஒரு ரூம் பாக்க சொன்னோம்
அவரும் ரூம் இருக்குது பா வா தங்கிகள்ளம்னு சொன்னாரு ... நாங்களும் நம்ம்பி சென்னை
வந்துட்டோம் ..... நாலு மணிக்கு அவருக்கு போன் பண்ணா வேண்டாம்ம்னு .... ஆளுக்கு
ஒரு பேக் க தலைக்கு வச்சு படுதுட்டோம் .... பஸ்ல வந்ததுன்னால அர தூக்கத்துல
இருந்தோம் .. நல்ல தூங்கிட்டோம் .... அந்த கொசு கடிளையும் செம தூக்கம் ....ஹ்ம்ம்
...
ஒரு வழிய பொழுது விடுஞ்சு
மணி ஆறு ஆச்சு ...... அவருக்கு போன் பண்ணினா "நீங்கள் தொடர்பு கொள்ளும்
வாடிக்கையாளர் தற்சமையம் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் " அப்டின்னு
வந்துச்சு .... அவ்ளவுதான் ... நாலு பேருக்கும் அல்லு விட்டு போச்சு .....
"டேய் பதட்டுதுல வேற யாருக்காவது போன் பண்ணிடையோ
நம்பர நல்லா செக் பன்னுடானு " விஷ்ணு சொன்னான்
....
அவனும் செக் பண்ணிட்டு
"இல்ல மச்சி நம்பர் கரெட் தாண்டானு " சொன்னான் . மறுபடியும் ட்ரை பன்னி ட்ரை
பன்னி ட்ரை
பன்னி ..... ஒரு வழிய ஆறேமுக்களுக்கு போன எடுத்தாரு .... அப்பதான் எங்களுக்கு
உசுரே வந்துச்சு ..
தம்பிகளா நீங்க கோயம்பேடு
லிருந்து பஸ் புடுச்சு காசி தியேட்டர் வந்துருங்கப்பன்னு சொன்னாரு ..... நாங்களும்
போய்ட்டோம் ..... அப்ப அங்க அயன் படம் ஓடிகிட்டு இருந்தாதா நியாபகம் ..... நாலு
பேரும் அவர் கூட ஜபார்க்கான் பேட் ல இருக்கு அவரோட எம்ப்லோயீஸ் இருக்குற ரூம்க்கு
போய்ட்டோம் ..... அங்க ரெண்டு பேர் தான் இருந்தாங்க ..... நாங்க போனதையும்
ஒருத்தர் ரூம காலி பண்ணிக்கிட்டு போய்ட்டார் (சத்தியமா நாங்க ஒன்னும் பண்ணல )....
நாங்க போன அன்னைக்கே கோர்ஸ் ஜாய்ன் பண்ணனும் ... ஒவ்வொருத்தரா குளிக்க பாத்ரூம்
போனா அங்க தான் வச்சாங்க ட்விஸ்ட் ........ பாத் ரூம் டைலேட் ரெண்டுலயும் தாப்பால்
வொர்க் ஆகல .... பாத் ரூம் கூட ஓகே .... கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னி கிட்டோம் ......
இன்னொன்னு.....ஸ்ஸ்ஸ் பப்ப முடியல ......
அந்த வீட்டு ஒனரம்மா செம
ரௌடி போல பக்கத்து வீட்டு ஆளுக கூட போடுர சண்டைல தான் கத்துக்கிடோம் ரொம்ப கேட்ட
வார்த்தைங்க .....
சரி போங்கடா ஓசில தான்
தங்கி இறுக்கோம் ன்னு ..... ஒரு வழிய குளிச்சு கிளம்பிட்டோம் ...ஆனா அந்த ரூம காலி
பன்னிட்டு வரும்போது நாங்க நாலு பேரும்
வாடகைய கொடுத்த்ட்டோம்.. பின்ன வரலாறு எங்கள தப்பா பேச கூடாதுல்ல.... பாரு ஓசி ல
ஒரு மாசம் தங்கிட்டு போயட்டனுகன்னு....
NIIT, Nungambakkam.
எங்க வாழ்க்கைல (உனக்கு ஏது
வாழ்க்கை னு நீங்க கேக்குறது எனக்கே கேக்குது சரி விடுங்க ).... நல்லது நடந்த நாளா... இல்ல கேட்டது நடந்த நாளானு இன்னும் எங்களுக்கு தெரியல ....
உள்ள போனதியும் தம்பி வாங்க
மொதல்ல காச கட்டுங்க அப்புறம் தான் கிளாஸ் ரூம்க்கு உள்ள போகனும்ம்னு
சொல்லிட்டாங்க(ஜஸ்ட 25K/Per
head தானாம் ) .... நாங்களும் காச கட்டிட்டு உள்ள
போனா .............
நுங்கம்பாக்கம் NIIT ....
எல்லோரும் நீட்டன டிரஸ் ல
ஏதோ ரேமன்ட் மாடல் கணக்கா உக்காந்து இருந்தாங்க .... ((எங்க ராசி யானு தெரியல ஒரு
பொண்ணு கூட இல்ல ..போனா ஜென்மத்துல என்ன பாவம் பண்ணிநோம்ன்னு தெரியல ..:-(..... ))
நாங்க எப்படி போய்
இருப்போம்ம்னு உங்களுக்கே தெரியும் ... அத வேற சொல்ல வேண்டியது இல்ல ..... சரி
விடு மச்சி னு சொல்லிடு நம்ம வழக்கமா உக்கார எடம்மான கடைசில ரோல போய்
உக்கந்துக்கிட்டோம் ..... என்ன ஒவ்வொருதனுக்கும் ஒரு கம்ப்யூட்டர்.... நாங்க
வழக்கம் போல காஞ்ச மாடு கம்புல பூந்த மாதிரி கம்ப்யூட்டர் பாத்ததியும் ஜிமெயில்
யாஹூ னு நொண்ட ஆரம்பிச்சிட்டோம் ..... ஆனா ரொம்ப அறிவாளிக கணக்கா Orkut அ பிளாக்
பண்ணிட்டாங்க ..... நாம யாரு Hacker
ராஜா இருந்ததுனால அத அன்பிளாக் பன்னி Orkut செக் பண்ண ஆரம்பிச்சுட்டோம்
.... நம்ம கையும் காலும் சும்மா இருக்குமா வழக்கம் போல படம் டவுன்லோட் பண்ண
ஆரம்பிச்சுட்டேன் ..... அரை மணி நேரம் கழுச்சு ஒரு பிகர் வந்துச்சு .... பேரு
காயத்ரி .... கிளாஸ் ரூம்க்கு உள்ள வந்து அந்த
ஆத்து ஆத்துது ... ஒரு எழவும் புரியல .... பக்கதுல இருந்த ராஜா வ கேட்ட அவனுக்கும் அரகொற தான் ..
அவனுக்காவது அரகொற .. எங்களுக்கு சுத்தம் ..... சரி அந்த பிகரையாவது சைட்
அடிக்கலாம்னு கொஞ்சம் நெத்திய உத்து பாத்த ....... கல்யாணம் ஆயிருச்சு ....
ஹ்ம்ம்ம் .. நமக்கு மட்டும் ஏன்டா இப்படி
நடக்குதுன்னு நினைச்சுக்கிட்டு அந்த பொண்ணு சொல்ல்றதெல்லாம் புரியரமாதிரியே
உக்காந்து இருந்தேன் ..... இருந்தோம் .....
Raja, Vishnu, Panneer, Me....
கிளாஸ் டைமிங் மதியம் ஒரு
மணிலருந்து அஞ்சுமணி வரைக்கும் (இருபது நாள் மொத்தம் எண்பது
மணி நேரம் )......
இதுலயே ரெண்டு மணி நேரம்
ஆகி இருச்சு .... சரி மொத நாள் தானான்னு விட்டுட்டோம் ....
அது எண்ணனே தெரியல
எவளவுக்கு எவ்வளவு காசு காட்டி படிக்கிறேன்னு சொல்லி அமெரிக்கா வே போனாலும்..... கிளாஸ்
எடுக்க யாரும் வரலைனாலோ இல்ல கிளாஸ் எடுக்க லேட் ஆச்சுனாலோ அவ்வளோ சந்தோசம்
....
NIIT ல கோர்ஸ்
சேர்றதுக்கு விஜய் னு ஒருத்தரு கிட்ட தான்
அட்வான்ஸ்லாம் கொடுத்து சேந்தோம் ... மொத நாள் முடுஞ்சு வெளிய வந்த உடனையே எங்க
நாலு பேரையும் கூப்பிட்டார் .... மேலையும் கீழையும் ரெண்டு தடவ தலைய(அவரோட ) ஆட்டி
ஸ்லோ மோஷன்ல பாத்தார் .....
உங்களுக்கு English நல்ல பேச
வரதுல்ல னு சொன்னார் ...(எப்படிதான் கண்டு பிடிக்கிராங்கலோ ).... நாங்க தலைய நாலு
பேரும் நாலு பக்கம் ஆட்டுனோம் .... இதுலயே மனுஷன் கண்டு புடுசுட்டார் ......
நான் சொல்ற கேள்விகளுக்கு
எல்லாம் நீங்க ஒரு வாரத்துல ஆன்சர் சொல்லணும் சொல்லிட்டு .... ஒரு பத்து கேள்வி
சொன்னார் ...
1. What is your AIM?
2. Tell me about your self?
3. What is your hobbies?
4. Tell me about your college?
5. Tell me about your project?
6. இதெல்லாம் மறந்து போச்சுங்க
7. இதெல்லாம் மறந்து போச்சுங்க
8. இதெல்லாம் மறந்து போச்சுங்க
9. இதெல்லாம் மறந்து போச்சுங்க
10. இதெல்லாம் மறந்து போச்சுங்க
இந்த கேள்விகள சொன்னதியும்
நாங்க ஒருதர ஒருத்தர் மூஞ்சிய பாத்தோம்
...
நாலு பேருக்கும் செம
சிரிப்பு ... அத பாத்து அந்த மனுஷன் செம கடுப்பு ஆகிட்டார் ... ஒரு வாரம் டைம்
கொடுத்தவரு மூணு நாளா குறைச்சிட்டார் ....
அதற்க்கு அப்புறம் அவர்
முன்னாடி கேட்ல தான இருப்பாரு(அவரு செக்யூரிட்டி இல்லேங்க ரிசப்சன் பக்கத்துல
தான் அவரோட டேபிள்) நாம பின்னாடி கேட் வழிய போய் போயிருவோம் ..... ஒரு நாள்
பாத்துட்டு உங்களுக்கு நல்லது பண்ணலாம்ன்னு நெனச்சேன் நீங்க தேற மாடீங்கன்னு
சொல்லிட்டார் ....அப்பவே எங்க
எதிர் காலத்த ரொம்ப கரெக்ட் சொன்னாரு ....
சரி விடுன்னு சொல்லிட்டு
கெளம்பி ரூம்க்கு வந்தா செம பசி .... பக்கத்துக்கு கடைல(ஸ்ரீ
விநாயகா ஹோட்டல் ) போய் ஆளுக்கு நாலு பரட்டோ சாபிட்டோம்.. மொத்த பில்லு 80 ரூபா . நாங்க அப்டியே ஷாக்
ஆகிட்டோம். சரி இங்கயே காலைலயும் வரல்லாம் சொல்லிட்டு ரூம்க்கு போய்ட்டோம்.
மறுநாள் காலைல அந்த கடைக்கு
போய் டிபன் வாங்கிட்டு வரல்லம்னு ரெண்டு பேர் போனோம். ஆளுக்கு நாலு இட்லி ஒரு வடை
மொத்தம் 40 ரூபா .
எங்க கண்ணுல தண்ணி வந்துருச்சு. மகராசா எங்க இருந்தாலும் நல்ல இருப்பான்னு சொல்லி
வாழ்த்திட்டு பொழப்ப பாக்க போய்ட்டோம் . வேறென்ன லேப்டாப் ல படம் பாக்க தான் .
பின்ன ஒரு மணி வரைக்கும் சும்மா தான இருக்கணும்.
ஸ்ரீ விநாயக ஹோட்டல்
ராஜா விஷ்ணு ....
இதே மாதிரி தான் தினமும்.
காலை - நாலு இட்லி ஒரு வடை ,
மதியம்- ஒரு ப்ரூட் மிக்சர், சாயங்காலம்- ரெண்டு வடை, நைட்- நாலு பரோட்டா .
இப்டியேதான் போனது இருபது
நாளும் போனது ... இதற்கு இடையில் தான் கார்த்தி (((China )..சாரி மச்சி உன்ன கார்த்தி
சொன்ன ஒருத்தனுக்கும் தெரியாது .அதான் ..))) சென்னைக்கு வந்தாரு அவரு அவுங்க
அண்ணன் யாரோ சென்னைல இருக்குறத சொல்லி அங்க தங்கிட்டாறு.
மெரினா பீச்ல ...பன்னீர் ராஜா கார்த்தி விஷ்ணு ....
ஜூன் 10, 2009
அந்த இருபது நாளும்
முடியறதுக்கு முன்னாடி ராஜேஷ்(மண்டையன் ---சாரி மச்சி ஒருத்தனுக்கும் உன்னோட பேர்
தெரியாது) (இங்க தான் அவர் என்ட்ரி ஆகுறார் ).
ஸ்பென்சர் பிளாசா ..
ராஜேஷ், விஷ்ணு, ராஜா.
ராஜேஷ்à இவற
பத்தி சொன்னா இன்னும் பத்து பக்கம் எழுதணும். ஷார்டா சொல்னும்னா எங்க “தெய்வ
நண்பன்”
இது நாங்க எல்லோரும்
ஸ்பென்சர் பிளாசா ல ஷாப்பிங் போனப்ப எடுத்தது.
நீங்க நினைக்குற ஷாப்பிங்
இல்லங்க. இதுக்கு பேர் வேற.
Window Shopping.
ராஜேஷ்(), பன்னீர் , கார்த்தி.S, மோகன் ராஜ், கார்த்தி (சைனா..:-))....
எல்லோரும் நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் பக்கதுல ஒரு 1BHK ரூம்
எடுத்து தங்கி இருந்தாங்க. எங்க நாலு பேர்ல பன்னீர் க்கு மட்டும் ரூம் இருந்துச்சு
. நாங்க மூணு பெரும் (Still அன்னக்காவடிகள்
தான் ).....
அப்போ தான் ஒரு நாள் எங்க
வாழ்க்கைல ஒரு ஒளி வந்தது ..... (கரண்ட்டெல்லாம் வரல ) .....
IT சிலம்பரசன் அவனோட நண்பன் ஒருத்தன் ... அப்புறம்
எங்க அஞ்சா நெஞ்சம், வீராத்தி
சாரி வீராதி வீரன், மனித குல
மாணிக்கம் எங்கள் அண்ணன் திரு மனோஜ் அவர்கள்(மச்சி மனோஜ் னு சொன்ன எனக்கே யாருன்னு
தெரிய மாட்டேங்குது ..... திரு கூர்கா அவர்கள் ) எங்களுக்கு வாழ்வு தந்தார் . அது
தான் இந்த சூளைமேடு பேலஸ்(3BHK_ஜூலை 2, 2009) ..... திக்கு
தெரியாம, தெச
தெரியாம போய் கொண்டு இருந்த எங்களுக்கு பாதை காட்டினார் ...... இதுக்கு மேல நீ
கொடுத்த காசுக்கு உன்ன வாழ்த்த முடியாது
மச்சி ...... இவன் காட்டின பாதைன்ன நீங்க நினைக்குற வாழ்க்க பாதை இல்ல
... அண்ணா நெடும் பாதைய..... அப்புறம் இந்த ரூம்க்கு
வந்து அவங்க கிட்ட வாடகை எவ்ளோ அட்வான்ஸ் எவ்ளோ னு கேட்டுட்டு ... ஊர் பக்கம்
போய்ட்டோம் ...... ரெஸ்ட் எடுக்கங்க ....
மீண்டும் செல்வோம்....





sema, ipdi nanum eluthi vachiruken,ana translate pani upload pana kaduppu!
ReplyDeleteSema da nee periya directoraa varuva da
Deleteநன்றி ....
Deletesuper da
ReplyDeleteநன்றி ....
ReplyDeleteWell done Boopa... who is the sword fish ?
ReplyDeleteநன்றி ..... வேற யாரு ராஜா தான் ....
Delete