Tuesday, 31 July 2012

Jesse Owens

பிறப்பு: முகபுத்தகம்





ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் தான் ஜெசி ஓவன்ஸ். அந்தப் பெயரை ஒலிம்பிக் போட்டிகள் என்ற வானம் இன்றும் பெருமையுடன் சுமந்து நிற்கிறது.

ஜேம்ஸ் கிளீவ்லண்ட் ஓவன்ஸ் 1913 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ந்தேதி அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஓர் எளிமையான கருப்பர் இன குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக பிறந்தார். அவரது தாத்தா கொத்தடிமையாக இருந்தவர். James Cleveland Owens என்பதன் முதல் எழுத்துக்களைக் கொண்டு ஓவன்ஸை எல்லோரும் J C என்று அழைப்பார்கள். அவர் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் அவரது பெயரை ஆசிரியர் கேட்க ஜெ சி என்று சொல்ல அதனை ஜெசி என்று எழுதிக்கொண்டார் அந்த ஆசிரியர். அன்றிலிருந்து அவரது பெயர் ஜெசி ஓவன்ஸ் என்றானது. குடும்பம் ஏழ்மையாக இருந்ததால் வாழ்க்கை சிரமமாக இருந்தது. குடும்பத்திற்கு உதவ மளிகைப்பொருட்களை விநியோகம் செய்வது, காலணிகள் பழுது பார்ப்பது, மின்தூக்கிகள் இயக்குவது போன்ற பல்வேறு வேலைகளைச் செய்தார் ஜெசி. அந்த வேலைகளைச் செய்யும்போதுதான் ஓடுவது என்றால் தனக்கு பிடிக்கும் என்பதை உணர்ந்தார் அவர். அந்தத் தெளிவுதான் அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்தது.

பள்ளியில் ஒருநாள் அறுபது மீட்டர் தூரம் ஓடும் பயிற்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஓடிய ஜெசியைப் பார்த்து அவருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார் பயிற்றுவிப்பாளர் ச்சார்லி ரைலி. ஜெசிக்கு நல்ல பயிற்சி அளிக்க விரும்பினார். ஆனால் பள்ளி முடிந்து பல வேலைகள் பார்க்கும் நிர்பந்தம் இருந்ததால் எப்படி பயிற்சியில் ஈடுபடுவது என்று தயங்கினார் ஜெசி. அவரது நிலையை புரிந்துகொண்ட ரைலி காலை நேரங்களில் தனியாக பயிற்சியளிப்பதாக கூறவே அதனை ஏற்றுக்கொண்டார் ஜெசி. அதிலிருந்து அவர் பட்டைத் தீட்டிய வைரமாக ஜொலிக்கத் தொடங்கினார். அவருக்கு 19 வயதானபோது கல்லூரித் திடல்திடப் போட்டிகளில் நூறு மீட்டர் ஓட்டத்தில் அப்போதிருந்த உலகச் சாதனையை சமன் செய்தார். அவரது அபாரத் திறனைக் கண்ட அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அவரை தங்கள் மாணவராக்கிக் கொள்ள போட்டிப் போட்டனர்.

அப்படி முன்வந்த 28 பல்கலைக்கழகங்களிலிருந்து ஒஹாயோ ஸ்டேட் (Ohio State University) பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தார் ஜெசி ஓவன்ஸ். அப்போது அமெரிக்காவில் இன ஒதுக்கல் நடப்பில் இருந்ததால் பல இன்னல்களைச் சந்தித்தார் ஜெசி. அவர் கருப்பர் என்பதால் பல்கலைக்கழக வளாகத்தில் தங்க அனுமதி மறுக்கப்பட்டது. திடல்திட விளையாட்டுக் குழுக்களோடு பயணம் செய்யும்போது கருப்பர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட உணவகங்களிலும், ஹோட்டல்களில் மட்டும்தான் அவர் உணவு உண்ண முடியும், தங்க முடியும். அல்லது உண்வை பொட்டலமாக வாங்கி வெளியில் சாப்பிட வேண்டும். தவிர்க்க முடியாத சில சமயங்களில் வெள்ளையர்களின் ஹோட்டல்களில் தங்க அனுமதிக்கப்பட்டாலும் அவர் பின் கதவு வழியாகத்தான் நுழைய அனுமதிக்கப்பட்டார். மேலும் ஹோட்டலுக்குள் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது. படிகளில் ஏற வேண்டும்.

இப்படி வெள்ளை இன பெரும்பான்மையினரால் எல்லா விதங்களிலும் ஒதுக்கப்பட்ட ஓவன்ஸ் அவரது ஓட்டத்திறமைக்காக மட்டும் விரும்பபட்டார். தனக்கு இழைக்கப்படும் சமூக அநீகளுக்கு தன் கால்களாலேயே பதிலடி தந்தார் ஓவன்ஸ். 1935 ஆம் ஆண்டு மே 25ந்தேதி ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார். அந்த ஒரே நாளில் அவர் மூன்று உலகச் சாதனையை நிகழ்த்தி நான்காவது சாதனையைச் சமன் செய்தார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வுளவு தெரியுமா? வெறும் 45 நிமிடங்கள்தான். விளையாட்டு உலகில் அதற்கு முன்னும் அப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டதில்லை, அதற்குப் பிறகும் அந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை. அந்த அதிசயத்தை நிகழ்த்திய அடுத்த ஆண்டே உலகை வியப்பிலும், ஹிட்லரை வெறுப்பிலும் ஆழ்த்தினார் ஜெசி ஓவன்ஸ். 1936 ஆம் ஆண்டு பெர்லனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் பிரகாசமாக மின்னினார்.

ஹிட்லர் அப்போது ஆட்சியில் இருந்ததால் பலர் ஹிட்லர் ஒலிம்பிக் போட்டிகள் என்றும் அதனை வருணித்தனர். ஆரியர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற இருமாப்போடு அமர்ந்திருந்த ஹிட்லரின் கண்களுக்கு முன்னே ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று உலகச் சாதனைகளோடு நான்கு தங்கப்பதக்கங்களை வென்று குவித்தார் ஜெசி ஓவன்ஸ். உலகின் கண்களுக்கு முன் தனது சித்தாந்தம் சிதைந்து போன வெறுப்பில் ஒலிம்பிக்ஸ் அரங்கத்தை விட்டு ஆத்திரத்தோடு வெளிநடப்புச் செய்தார் ஹிட்லர். ஆனால் ஜெர்மன் விளையாட்டு ரசிகர்களோ ஓவன்ஸை கைதட்டி ஊக்கமூட்டினர். 100 மீட்டர், 200 மீட்டர், 4x100 மீட்டர், நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் ஓவன்ஸ்க்கு தங்கம் கிடைத்தது. ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமை அவருக்கு கிட்டியது.

அப்படிப்பட்ட சாதனையைச் செய்தும் அவர் கருப்பர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த விளம்பர நிறுவனமும் அவரை ஒப்பந்தம் செய்ய முன் வரவில்லை. இதுபோன்ற அநீதிகளால்தான் மார்ட்டின் லூதர் கிங் போன்ற சுதந்திர வீரர்கள் அமெரிக்காவில் உதித்தனர். தனக்கு நன்றாக பேசும் திறன் உண்டு என்பதை உணர்ந்த ஓவன்ஸ் பொது நிகழ்ச்சிகளில் பேசவும், விரிவுரை வழங்கவும் தொடங்கினார். அவரது சுபாவம் பலருக்கும் பிடித்திருந்ததால் சொந்தமாக பொது உறவு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மதம், நேர்மை, கடும் உழைப்பு ஆகிய மூன்றை பற்றியும் அவர் பேசினார். வசதி குறைந்த பகுதிகளில் வசிக்கும் இளையர்களுக்காக பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், ஆதரவளித்தும் ஊக்கமூட்டினார்.
1976 ஆம் ஆண்டு ஓவன்ஸ்க்கு 'Presidential Medal of Freedom' எனப்படும் தனி நபருக்கான அமெரிக்காவின் ஆக உயரிய விருதை வழங்கி கவுரவித்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட். பின்னாளில் புற்றுநோய் ஏற்பட்டு 1980 ஆம் ஆண்டு மார்ச் 31ந்தேதி தமது 66 ஆவது வயதில் காலமானார் ஜெசி ஓவன்ஸ். தான் காதலித்த ரூத் சாலமன் என்ற பெண்ணை மணந்து கொண்டு Gloria, Beverly, Marlene, என்ற மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையானார் ஓவன்ஸ். அவரது மனைவியும் மகள் மார்லினும் இன்றுவரை “ஜெசி ஓவன்ஸ் பவுண்டேஷன்ஸ்” என்ற அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். தங்கள் இலக்கை அடைய விரும்பும் தகுதி நிறைந்த ஆனால் வசதி குறைந்த இளையர்களுக்கு இன்றும் நிதியுதவி வழங்குகிறது ஜெசி ஓவன்ஸ் அறக்கட்டளை.
 
வறுமை, நிறவெறி, இன ஒதுக்கல், என பல சமூக அநீதிகளைத்தாண்டி ஓவன்ஸால் உலகம் போற்றும் அளவுக்கு உயர்ந்து நிற்க முடிந்ததென்றால், நமக்கு தடையாக இருப்பவை எவை? கொத்தடிமையாக வாழ்ந்த ஒருவரின் பேரன் விளையாட்டு உலகில் உச்சத்தைத் தொட்டது அதிர்ஷ்டத்தாலோ, மாய மந்திரத்தாலோ, ஊக்க மருந்துகளாலோ அல்ல. பயிற்சித் தடங்களில் அவர் சிந்திய வியர்வையும், தன் தோலின் நிறம் ஒரு குறையல்ல என்ற நம்பிக்கையும், கடும் உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும் உலகம் எப்போதுமே தலைவணங்கும் என்ற தைரியமும்தான் ஜெசி ஓவன்ஸ்க்கு 'ஒலிம்பிக்ஸ்' என்ற வானத்தை வசப்படுத்தியது. ஓவன்ஸைப்போல் வியர்வை சிந்தவும், விடாமுயற்சியோடு உழைத்தால் எல்லோரும் ஒரு நாள் முன்னேறலாம் .

Saturday, 21 July 2012

ஒளவியும் ஒளவாமலும்


நண்பர் ஜாவீத் அவர்களின் காதல் காவியம்  ...

யமுனா - எனக்கு  என்னோட   விவரம்  தெரியாத  வயசுல  இருந்து  தெரியும்  நான்  அவ  கூட எல் .கே .ஜி     இருந்து   படிக்குறேன்  இம்  அப்போ   குடும்பி    க்யூட்   இருப்பா... முகம் சரியா ஞாபகம் இல்ல ...பட்  போட்டோ   பாத்தேன்...
அப்புறம் 2nd std இருக்கும் அப்போ ரெண்டு சைடு  குதிர  வால் .. போட்டு  இருப்பா அவ  தான்  எங்க  கிளாஸ்  லீடர் …ஸ்கூல்   1st ரேங்க்  எடுக்குரவங்கல தானே  கிளாஸ் லீடர்    போடுவாங்க …மேடம் எப்பயுமே  1st ரேங்க்.யாரு ஆவது   பேசின போர்டு    நேம்ஸ் னு  போட்டு அதுக்கு  கீழ பேசுறவங்க  பேர  எழுதணும் நான் தான் எப்பயும் 1st அந்த நேம் லிஸ்ட்- என்  பேர   எழுதுவா பேசுறதுக்காக  மிஸ்-உம் ஸ்கேல் ஆல கை-  அடிப்பாங்க  அப்ப எனக்கு  யமுனா- பாத்தாலே கோவமா  வரும் …இப்ப நெனச்சு பாக்குரப்போ அவ  என்  பேர் எழுதுறக்ராதுக்காக  இன்னும்  அடி  வாங்கலாம் -னு  தோணுது  .இம் .. என்ன  தான்  லீடரா  இருந்தாலும் யமுனாக்கு  கொஞ்சம் ஷார்ட் -டெர்ம்  மெம்மரி   லாஸ் ....அப்பலாம்  அட்டிசன் லாம்  எதோ  டூ  இன்  ஹன்ட் ஒன் இன் மைன்ட்-னு  ஆட் பன்னுவோம் சரியாய் ஞாபகம்...அதுல டென்க்கு  மேல  போறப்பா  யமுனா  அவ  பென்சில  காதுல  வெச்சுகிட்டு ஆட் பன்னிட்டு திருப்பி  பென்சில் - காதுல வெச்சத மறந்துட்டு தேடுவா அத  இன்னும் என்னால   மறக்க முடியல …..
அப்புறம்  ஒரே  ஸ்கூல் பட்  வேற வேற  செக்சன்- மாறி  மாறி படிச்சோம்  குடும்பி- பாத்த யமுனா  இப்போ  ரெட்ட  ஜடை  மறுபடியும்  என் கூட   8th   படிச்சா யமுனா இப்போ  ஸ்மால் ரேடியோ  ரவுடினும்  சொல்லாம்  எப்போ பாரு பேச்சு பொண்ணுங்க வளரும் போது வாயும் வளரும் போல இப்போ  போர்டு- நேம்ஸ்-னு  எழுதுனா அவ பேரு  தான் ஜாஸ்தி எழுதி இருப்பாங்க சொல்ல மறந்துட்டேன் இப்போ மேடம் குட்  ஷட்டில் பிளேயர்...  ஒரு  தடவ கேம்ஸ் பிரியட்- பிரியா (யமுனா  பிரெண்ட்அவளோட  க்ளோஸ்  பிரெண்ட்  அதான் பிரியா-ஓட  ஸ்நாக்ஸ்  எடுத்து  தினத்துக்கு சண்ட அனிக்கி இருந்து  நாங்க  ரெண்டு  பெரும் எப்ப  பாத்தாலும்  சண்ட  போட்டுகிட்டு  தான்  இருந்தோம் இப்படி தான் ஒரு  தடவ  கிரிக்கெட்  விளையாடும்  போது நான்  பாட்டிங்  அப்ப  பால் யமுனா  முஞ்சில அடிச்சுருச்சு அவ அழுக ஆரம்பிச்சுட்டா பிரியா கோவமா  அறிவு  இல்ல    வரது தெரியலனு  கேட்டா  அதுக்கு நான் ...அழகான பொண்ணுங்கனா  தெரிஞ்சு இருக்கும்.... ஓகே ஓகே ..நானா  அடிச்சேன்  பேட் தான் அடிச்சுச்சுனு  சொன்னேன் அப்ப  பிரியா  ஒரு  ஷட்டில் பேட்  அலே என்னை   அடிச்சுட்டு  நான்  சொன்னத  திருப்பி  சொல்லிட்டு போயிட்டா ... பிரியாக்கு யமுனா பரவாவில்லை வாய் மட்டும் தான் பேசுவா ...
அப்புறம்  9th -  அவங்க வீட்டுல அவள கேள்ஸ் ஸ்கூல்- செத்துட்டு-டாங்க (வயசுக்கு வந்துட்டா அதான்யமுனா- நான்  அதுக்கு அப்புறம் பாக்கவே இல்ல அப்ப அவள நான் மிஸ் பண்றேன்னுலாம் தொனல 10th -  மார்க் கம்மி-  எடுத்த நால எங்க  வீட்டுல +1- டியூஷன்-  சேத்துடாங்க... அப்ப  யமுனா-வும்  +1 அதே டியூஷன்- சேந்தா  இப்ப யமுனா  ஓட மொகத்துல லைட்டா  பரு  ஒத்த  ஜடை-  அழகா இருந்த  மொத தடவ எனக்குள்ள ஒரு பில்ங்ஸ் அத க்ருஷ்னும் சொல்லலாம் அவள்க்கு என்னை பாத்த உடனே ஞாபகம்  வரல அப்புறம்  என் ஹிஸ்டரி  ஜியோகிராபி  சொல்லி கஷ்டப்பட்டு ஒரு கெமிஸ்ட்ரி  கொண்டு வந்தேன்  சைக்கிள்-   டியூஷன் முடிஞ்சு போகும் போது அவள follow  பன்னுவேன்  படத்துல நம்ம தனுஷ் பண்ணுவரே அது மாறி  படத்துல தனுஷ்க்கு பிரச்சன வராது ஆனா எனக்கு வந்துச்சு பிரச்சன   மேடம் லைட்டா அழகா இருக்காங்ல  அதான்  இப்போ யமுனா- நிறைய பேர்  follow பண்ணுறாங்க  ஹேவி  காம்ப்படிஷன் இதுக்கு தான் சின்ன  வயசுலேயே எண்ணெய் தடவி முஞ்சில வடியுற .. மேக்-அப் இல்லாத வயசுலேயே  லவ்  பன்னி இருக்கணும் ம்ம் இப்படி  ஹேவி காம்ப்படிஷன் நால நான்  அவள  follow பண்ணுறத  அதே டியூஷன் சென்ட்டர்   +2 படிக்குற பையன் அவளுக்காக வருவான் போல  என்னை குபிட்டு மிரட்டினான் .. என்ன அவள பாக்குரேயா  **த்தா  உன்ன அப்புறம் யாரும் பாக்கவே  முடியாது னு சொன்னான் ... நாம்ம மட்டும் பாக்குற பொன்னுக்குகாக எப்பயும் சண்டைக்கு போக கூடாதுநம்மளையும் பாக்குற பொன்னுக்குகாக சண்ட  போடலாம்  சோ நான்  அப்ப  அந்த  பையன்ட்ட  ஐயோ  இல்லை னா எங்க  வீட்டுக்கு  இந்த  வழி    தான்  போனும் அதான் .... அனிக்கி உன் கூட அவ பேசுறத பாத்தேன்  அது என்னடா அந்த சீனியர்  ஓட பிரெண்ட்  கேட்டான் அண்ணா  நோட்ஸ் கேட்டேன்-னு  சொன்னேன் இனிமே நோட் இட்டு-னு  அவ கூட பேசுறத  பாத்தேன் அவ்ளோதான் போடா அனுப்புச்சுட்டான்  அடுத்த நாள் யமுனா  என்ட்ட என்ன நேத்து நடந்தது-னு கேட்டா என்ன நடந்துச்சு-னு ஒன்னும் தெரியாத மாறி கேட்டேன் அதுக்கு அவ நேத்து அவன் உன்கிட்ட என்ன  நான் ஒன்னும் இல்ல-னு சொன்னேன்... இப்போ  நீ  சொல்லுரேயா    இல்ல  நான்  இனிக்கி  அவன்ட்ட நேத்து என்ன கேட்டனு கேக்கட்டா-னு  கேட்டா.ஐயோ  வேணாம் கேட்டுராத  ஒன்னும்  இல்ல  பா உன்ன அவன் follow பண்ணாத-னு சொன்னான்..,,அதுக்கு நீ  என்ன சொன்ன ...ஓகே follow  பண்ண மாட்டேன்-னு சொன்னேன்  ...இனிக்கி போயி அவன்ட்ட நான் அவள தான் follow பண்ணுவேன்-னு சொல்லு-னு சொன்ன...அப்ப  என்  மைன்ட்-  பையா கார்த்தி டயலாக் தான் ஓடுச்சு ...நான் யாரு பேச்சையாவது  கேட்டு இருக்கென்ன டா .. இப்ப  எல்லாமே வேற மாறி இருக்கு சும்மா ரெக்கை கட்டி பறக்குற மாறி இருக்கு...சோ  அதே வேகத்தோட  போயி அவன்ட்ட சொன்னேன் யமுனா சொன்னத.. என் லைப் - யமுனா நால 2nd std  மிஸ் கிட்ட அடி வாங்குனேன்..8th std  பிரியா கிட்ட அடி வாங்குனேன்  இப்போ மறுபடியும்  அடி ஆனா இந்த தடவ நான் அடி வாங்கல ...சண்ட போட்டேன்....அவன அடிச்சேன்... 
அப்புறம்  திடீருன்னு அவங்க வீட்டுல வீடு மாத்திட்டாங்க அவ வேற ஏரியாக்கு போயிட்டா  அதுக்கு அப்புறம் மறுபடியும் நான்  அவள பாக்கவே இல்ல ..நான் +2  லேயும் மார்க் கம்மியா எடுத்தேன் அதுனால  எங்க வீட்டுல பிஎஸ்சி  பிசிக்ஸ் பண்ணேன் …யமுனா இன்ஜினியரிங் படிக்குற-னு மட்டும் தெரிஞ்சது அப்புறம் நான் என்  U.G முடிச்சுட்டு P.G  எம்.பி . பண்ணேன்.. என் 2nd இயர் அப்ப நான் எதிர் பாக்கவே இல்ல யமுனா இன்ஜினியரிங் முடிச்சுட்டு என் காலேஜ்ல  எம்.பி . பண்ணுவானு.. யமுனா இப்போ கொஞ்சம் மாடர்னா இருந்தா ஓபன் ஹேர் ... என் க்ருஷ் இப்போ கவித பேச ஆரம்பிச்சுருச்சு மூணு வார்த்தை- சொல்லணும்னா காதல்-னு சொல்லலாம் .. கேன தனமா இருக்கு- பட் உண்மை அதான் காய் கனி ஆகுற மாறி க்ருஷ் காதல் ஆயிடுச்சு..இப்போ அவ என் ஜூனியர் நான் சீனியர் எந்த ஜூனியரும் அவள பாக்க கூடாதுனு சொன்னேன் என் கிளாஸ் பொண்ணுங்க கிட்ட சொல்லி  அவள ராக்கிங் பண்ண சொன்னேன்...நான் சொன்ன மாறி என் கிளாஸ் பொண்ணுங்களும் ராக்கிங் பண்ணுனாங்கஎன் கிளாஸ் பொண்ணுங்க ராக்கிங்  பண்ணுறாங்க-னு என்ட்ட கம்ப்லைன்ட் பண்ணா..….ஓகே நான் சொல்றேன்னு சொல்லி விட்டு போனா நட்ப .. மறுபடியும் கன்டின்யூ பண்ணேன்....  
அப்புறம் அவ மொபைல் நம்பர் வாங்கி அவளுக்கு  டெய்லி குட் மார்னிங் ,குட் நைட் நாலு மொக்க மெசேஜ்  பண்ணி அவள்ட்ட  நான் க்ளோஸ் ஆகிட்டேன் எனக்கு புடிச்சதும் அவளுக்கு புடிச்சதும் மாத்தி மாத்தி தெரிஞ்சுகிட்டோம்...புரியற மாறி சொல்லணும்னா "சங்கீத ஸ்வரங்கள்  ஏழே  கணக்கா இன்னும் இருக்காபாட்டு பாக்கிரவுன்ட்  பாடுச்சு....அப்படி நல்ல போய்கிட்டு இருந்த ஒரு நாள் யமுனா கிட்ட நான் ஒரு நாள் என் காதல சொன்னேன் யமுனா அதுக்கு எனக்கு காதல் மேல லாம் நம்பிக்க இல்ல னு சொன்ன நான் அதுக்கு உனக்கு காதல் மேல தானே நம்பிக்க இல்ல என் மேல இருக்குல-னு சொன்னேன் அவ ரெண்டு  செகண்ட் கழிச்சு சிரிச்சுகிட்டே இடியட்-னு இத சொல்ல உனக்கு இவளோ நாளா-னு கேட்டா....யமுனாக்கும் என்ன புடிச்சு இருக்கும் னு நான் நெனைக்கல  அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சு ஒரு நாள் எனக்காக நாளைக்கி  ஒய்ட்  சுடி- நெத்தி- சந்தனத்து ஓட தலை- மல்லிக்க பூ ஓட வர முடியுமா  தோடு- கூட தொங்குற மாடல்  போட்டு வா-னு சொன்னேன்  அவ ஏன்-னு  கேட்ட...  ஓகே பாக்கலாம்-னு சொன்னாநான் சொன்ன மாறி வந்தா.... நான் எங்க அம்மா கிட்ட அவள காமிக்கணும் தான் அப்படி வர சொன்னேன் நான் எங்க அம்மா- சப்ரைஸ் அறிமுக படுத்துனேன் எங்க அம்மாக்கு அவள புடிச்சு போச்சு...எங்க அம்மா எங்க ரெண்டு பேரு கிட்டயும் பிரியாம இருக்கணும்-னு சொல்லிட்டு யமுனாட்ட உங்க வீட்டுல தெரியுமானு கேட்டாங்க .. அவ இல்ல ஆன்ட்டி னு பதில் சொன்னா சரி பொண்ணுங்க எப்பயும் கொஞ்ச பயபுடுவாங்க சோ உனக்கு எப்ப தோணுதோ சொல்லு... இல்லனா என்ட்ட சொல்லு நான் வந்து பேசுறேன்.. ஓகே ஆன்ட்டி கண்டிப்பா ... எங்க அம்மா போனதுக்கு அப்புறம் ஏன்டா அம்மா வராங்க னு சொல்ல மாட்ட லூசு-னு திட்டுனா இல்ல யமுனா சொன்ன நீ ஓவர் மேக் -அப்  வருவா அதான்...  உன்ன கொல்லாம விட மாட்டேன் டா .. செல்ல சண்ட...நாங்க  அதுக்கு அப்புறம்  எல்லா  லவ்வர்ஸ்  மாறி  படத்துக்கு போனோம் பைக்  சுத்துனோம்  அவள கோவில்க்கு .. எங்க வீட்டுக்கு லாம் கூப்பிட்டு போன்னேன் எங்க அம்மாவும் அப்பா கிட்ட சொன்ன நாலா எங்க வீட்டுல எந்த பிரச்னையும் இல்ல ... என் பயம் யமுனா வீட்டுல ஒத்துகிவங்லா ...னு தான் இருந்துச்சு   ... நான் அப்ப என் பராஜெக்ட்டு பன்ன சென்னை போயிட்டேன் ... யமுனா  ரொம்ப மிஸ் பண்ணேன்....  

அப்புறம்  ஒரு  நாள்  அவ  எனக்கு இன்டர் காலேஜ் பெஸ்ட் சோ நெக்ஸ்ட்  வீக் சென்னை வரேன் நீ வந்து கூபிட்டு போரேயா-னு  கேட்டா...கண்டிப்பா உன்ன வந்து கூபிட்டு போறேன்னு சொல்லி..அவள சென்னைக்கு கூபிட்டு வந்தேன் ..அவ எங்கேயோ  அவ  ரிலேஷேன் வீட்டுல தங்குனா  3 நாளு  சென்னைய நல்லா சுத்துனோம் பீச்,ஷாப்பிங் மால்...சத்யம்  தியேட்டர்-னு 3 நாளு போனதே  தெரியல.. சென்னை  இருந்த அந்த மூணு நாள் என்னால மறக்க முடியாது என்ன அப்ப தான் அவள நான் மொத தடவ கிஸ் பண்ணேன்...  இதுக்கு முன்னாடி நீ கிஸ்- பன்னால சும்மா நடிக்காத டா-னு நீங்க நெனைக்குறது தெரியுது பட் நான் சென்னை- அவள மொத தடவ லிப் டு லிப் கிஸ் அடிச்சேன் ..எந்த எடத்துல பீச்சா .. தியேட்டரா... னு கேக்காதிங்க சென்னை- எந்த இடம் நல்லா இருக்கும் னு நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல சென்னை- இருந்தாலோ இல்ல போனாலோ நீங்களே தெரிஞ்சுகிவிங்க...
அப்புறம்  நான் என் காலேஜ் முடிச்சுட்டு  அமேசான் கம்பெனி -  வேலை  பாத்தேன்  எனக்கு நைட் ஷிபிட் னு  நால சரியா  அவ  கூட  பேச  முடியல சோ  எங்கக்குள்ள   மிஸ் அன்டர்ஸ்டான்டிங்   ஆகி  இருக்கும்னு அவ  பிரெண்ட்ஸ்  நெனைக்க  ஆரம்பிச்சுட்டாங்க சோ அவங்களும் அவங்க பங்குக்கு ... உன்ன அவன் கழட்டி விட்ருவான்னு சொல்லிட்டாங்க ஆனா யமுனாக்கு என் மேல நம்பிக்க.... அவன் மித்தவங்க மாறி இல்ல .. அவங்க வீட்டுல தெரியும்னு  கோவமா சண்ட போட்டா சோ அவ  பிரெண்ட் அவ வீட்டுல எங்க லவ் மேட்டரா சொல்லிட்டா  அந்த பொண்ணு நல்லா இருக்கணும்..... எஸ் அந்த பொண்ணு நால எனக்கும் யமுனாக்கும் மாங்கல்யம்  தன்ட்டு நானென மமா ஜீவன ஹேதுனா... ஆக்ச்சுவலி அவங்க வீட்டுல ஒதுக்கல  அப்புறம் எங்க அம்மாவும் அப்பவும் கூப்பிட்டு போயி சமதிக்க வெச்சுட்டேன் அவங்க பாட்டிக்கு என்ன புடிச்சு போச்சு சோ அவங்க அப்பா அவங்க அம்மா பேச்ச கேட்டு ஓகே-னு சொல்லிடாரு  யமுனா  பாட்டிக்கு ஏன் என்ன புடிச்சுச்சு னு இன்னும் எனக்கு தெரியல...
 என்  லைப் -  என் காதலும் சரி  கல்யாணமும் சரி எந்த பிரச்னையும் இல்லாம நல்லா  தான் நடந்துச்சு யமுனா என் மேல  உயிரா இருந்தா கல்யாணம்  ஆனதுக்கு... பொண்ணுங்க லவ் வரைக்கும் பசங்கள தண்ணி அடிச்சா ஒன்னும் சொல்லமாட்டாங்க ஆனா கல்யாணத்துக்கு  அப்புறம் தண்ணி அடிக்க கூடாது  அடியேன்னும் அந்த ரூல்ஸ்- மாட்டிகிட்டேன் ... மேடம்  அவங்க  வீட்டுக்கு போறதையும்  கொரைசுட்டாங்க.. சோ அதுக்கு அப்புறம் நான் தண்ணியே அடிக்கல பேசிக்கலா  பொண்ணுங்க ஒருதவங்கள புடிச்சு  போச்சுனா சிக்கரம்  ஒட்டிடுவாங்க ..… யமுனாவும் எங்க வீட்டுல சொந்தகாரங்க.. என்  பிரண்ட்ஸ் ஓட  ஓய்ப் கூட நல்லா பிரண்ட்ஸ் ஆகிட்டா ...சொல்ல மறந்துட்டேன் இப்ப நான்  சென்னை   இல்ல  அவளுக்கு  பெங்களூர்ல  வேலை கிடைச்சு   இருந்துச்சு சோ நான் என் கம்பெனி பெங்களூர் பிரான்ச்க்கு  வந்துட்டேன் பெங்களூர்-  என்  கல்யாண  வாழ்க்கை   சந்தோசமா  போச்சு ஒரு வருசத்துக்கு  குழந்த  வேணாம் னு  முடிவு பன்னி  இருந்தோம் ஏன்னா  1st வேடிங் -  குழந்தை  ஓட செலிபர்ட் பண்றவங்க  பேரு தான் அவசர  குடுக்கை ….நாங்க அப்ப எங்களோட  ரிலேஷேன்  வீட்டுக்கு போனத  விட எங்க பிரண்ட்ஸ் வீட்டுக்கு தான் ஜாஸ்தி  போவோம் … ஏன்னா  சொந்தகாரங்க இன்னும் ஏன் குழந்த பெத்துகல்ல -னு  கேட்டு  கேட்டே உயிரா  எடுத்தாங்க ... வேலை இல்லைனா ஏன் வேலைக்கு போல... கல்யாணம் ஆகலனா ஏன் இன்னும் கல்யாணம் ஆகலனு கேக்குறது மட்டும் தான் இந்த   சொந்தகாரங்க வேலை கேட்டா அக்கறை ...     

அப்புறம்  கல்யாணத்துல ஒரு ஸ்டேப் மேல நாங்க போயிட்டோம் ....ஒரு நாள் என்ன சிக்கரம் ஆபிஸ்  இருந்து வர சொன்ன நானும் போன்னேன் யமுனா அனிக்கி  நான் கர்ப்பமா இருக்கேன் நீ அப்பா ஆக போறடானு  அனிக்கி  என் வாழ்க்கை-  நான்  பட்ட சந்தோசத்துக்கு அளவே இல்ல..எனக்கு வேலை கிடைச்சப்ப கூட  நான் இவ்ளோ  சந்தோஷ  படல … 
அப்புறம் 6 மாசம் கழிச்சு அவ வீட்டுக்கு அனுபுச்சுடேன் போன்- கூட அதிகமா பேசல பட் யமுனாக்கு என்ன விட்டு பிரிஞ்சு  இருக்க முடியல நான் அங்க வரேன் வரேன்-னு டெய்லி பில் பண்ணுவ சோ நான் ஏன் பராஜெக்ட்- இருந்து ரிலீஸ் வாங்கி  பெஞ்ச்க்கு வந்துட்டேன்.. வொர்க்  ப்ரம் ஹோம்லாம் தரல …அவளுக்கு வேண்டியதுலாம்  வாங்கி  தந்துகிட்டு அவள மட்டுமே    பாத்துகிட்டு இருந்தேன்..எங்க வீட்டுல என்ன ஓய்ப்க்காகவே மட்டும் இருகாத்தப்பானு சொல்லாத கொற… 
இப்டி நல்லா போயிகிட்டு இருந்தப்ப நேத்து தான் வயித்துல இருக்குற குழந்தைக்கு ப்ளட் நல்லா சப்ளே ஆணும்னா ஆட்டு ஈரல் வாங்கி தாங்கனு சொன்னாங்க நானும் வாங்கி தந்தேன்  யமுனாக்கு ஈரல் புடிக்காது  பட்  எனக்காக  ஒத்துகிட்டா நான் வாங்கி தந்து இருக்க கூடாது தப்பு பண்ணிட்டேன்..... 
நேத்து  அவளுக்கு  அது  ஒத்து  போகாம  வயிறு  வலி ஹாஸ்பிடல்க்கு கூபிட்டு போனேன் பட் ஹாஸ்பிடல்ல ப்ரெக்னன்ட்  லேடிய மெடிக்கல் ரிப்போர்ட் இல்லாம பாக்க மாட்டோம்னு  சொல்லிட்டாங்க அணிக்கி யமுனா வலில துடிச்சது அப்டியே என் கண்ணுல இருக்குதுங்க ஏன் நேரம் மெடிக்கல்  ரிப்போர்ட்லாம்  பெங்களூர்ல இருந்துச்சு ..என்  பிரண்ட்  கிட்ட என் வீடு சாவி கொடுத்து  இருந்தேன் அவன் கிட்ட சொல்லி ரிப்போர்ட் லாம்  ஸ்கேன் பன்னி  அனுப்ப  சொல்லி டாக்டர் கிட்ட காமிச்சா அவங்க  தண்ணிக்குடம்  ஒடஞ்ச்சுருச்சு வி ஹாவ் டு டேக் பேபி சூன் அவுட் இல்லைனா அவங்கள காப்பாத்த முடியாதுனு   சொல்லிட்டாங்க

 ….. 
அப்புறம்  யமுனா- என்  பிரண்ட் ஓட ஓய்ப் டாக்டரா வேலை செய்யுற ஹாஸ்பிடல்க்கு  துக்கிட்டு போன்னேன்  என்  பிரண்ட் ஓட ஓய்ப்- கூபிட்டு அவங்கள சிக்கரம்  வர சொன்னேன் அவங்க வந்து ஒன்னும் இல்ல ஜஸ்ட் ஸ்டோமாக் பைன் தான்னு சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு உயிர் வந்துச்சு  அந்த  ஹாஸ்பிடல்ல லேடீஸ் வார்டுல யமுனா- போட்டாங்க அவள  பக்கத்துல கூட என்னால பாத்துக்க முடியல நேத்து நைட் நான் புல்லா வெளிய படுத்துகிட்டேன் எங்க அம்மாவும் அவ அம்மாவும் தான் கூட  இருந்தங்க  ஒரு நாள் கழிச்சு இன்னிக்கி  ஜெனரல் வார்டுக்கு மாத்துனாங்க ... யமுனா- அப்டி என்னால பாக்க முடியல ..அவ நார்மலா தான் இருந்தா பட் என்னால அவள பாக்க முடியல எப்பயும் சிரிச்சுகிட்டே இருப்பா கலஞ்ச தலை முடி ஓட என் யமுனா ரொம்ப முடியாம இருந்தா  அவ பக்கத்துல போயி நான் நின்னப்ப அவ என பக்குத்துல கூபிட்டு ஹாப்பி பர்த்டே னு சொன்ன நான் சிரிக்கவும் முடியாம அழுகவும் முடியாம தொண்டைய கணுச்சு கிட்டு .. கஷ்டபட்டு அவள்ட்ட பேசுனேன்  என்னால தானே உனக்கு இப்படி ஆச்சு சாரி-டா ஹே எதுக்கு சாரி சொல்லுற அதுல்லாம் ஒன்னும் இல்ல  ஆம் ஓகே டா .. இல்லை எல்லாம் என்னால தான் நான் தான் உனக்கு புடிக்காத்தா சாப்ட வெச்சுட்டேன்  நீ  ஆவது  வேணாம்-னு  சொல்லி இருக்குலாம்ல அதுக்கு அவ என்கிட்டே நான் உன் லவ் மேல வெச்சத விட உன் மேல அதிகம்  நம்பிக்க வெச்சு தான் வந்தேன்...நீ இருக்கும் போது நான் ஏன்டா கவலை படனும் சின்ன   ஸ்டோமாக் பைன்  அவ்ளோதான் .. யமுனா நீ  என் ஓய்ப்-னு சொல்லுறத  விட நான் உன் ஹஸ்பேண்ட்னு சொல்லுறப்பா தான் எனக்கு பெருமையா  இருக்கு 



எஸ்     லவ்  யமுனா ...
ஒளவியும் ஒளவாமலும் - அப்படினா என்னனு முழிகாதிங்க .. இது தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் காதுலுக்கு என்று கண்டுபிடிக்கபட்ட அழகான வார்த்தை... தொடு வானம் எப்போதும் பூமியே தொட்டு கொண்டு இருப்பது மாதிரி தான் தெரியும் ஆனால் தொடாது அதற்காக வானமும் பூமியும் தொட்டுகொள்வதே இல்லை என்று அர்த்தம் அல்ல மாபெரும் வானத்துக்குள் இருக்கிறது இந்த பூமி அப்படி தான்  நானும் அவளும் .. நான் வானமாய் அவள் பூமியாய்...