மண்ணையும் பொண்னையும் நிதானமா பார்த்து தான் அமைச்சுக்கனும். எங்க வீட்ல திருமண பேச்சு எடுக்கும் போதெல்லாம் இதே புராணம் தான் ஒலிக்கும். இந்த மண்ணும் பொண்ணும் சரியா அமையலனா காலத்துக்கும் மனஉழைச்சல் நேரிடும்.. மண்ணின் தன்மைய கூட மாத்திடலாம். பெண்ணின் தன்மைய? மண்ணையும் பொண்ணையும் பார்த்து அமைச்சுக்கனும்னு சொன்ன பெரியவங்க பெண்ணுக்கு ஆணையும் பார்த்து அமைச்சுக்கனும்னு சொல்லலையே...
கொழுஞ்சித்துவையல் எங்க வீட்ல தோசைக்கு தொட்டுக்க இன்னைக்கு இது தான்.. அதான் இன்று கொழுஞ்சியைப் பற்றி பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். அந்தக்காலங்களில் வயல்களில் தழைச்சத்திற்காக கொழுஞ்சியையும் கொள்ளையும் தான் அதிகம் விதைத்து உழுவார்களாம். கொழுஞ்சி முளைத்தால் போதும் தண்ணீரை எதிர்பார்க்காமலேயே செடி வளர்ந்துவிடும். கொள்ளுக்கு காற்றிலாவது ஈரப்பதம் வேண்டும். சித்திரை வைகாசி மாதங்களில் கொழுஞ்சியை விதைத்து உழுது விடுவார்களாம். ஆடியில் கோடை மழை இறுதியில் செடிகளை மடக்கி உழுவார்களாம். இன்று 3 மாதம் காத்திருக்கவெல்லாம் ஆள் இல்லை. சணப்பு தக்கைப்பூண்டை இறைத்து விட்டோமா 40வது நாள் உழுதோமா. உழுத 3 நாளில் நாற்றை நட்டோமா. அரைகுறையா வெள்ளாமை எடுத்து அரைகுறையா வித்தோமா. இது தான் இன்றைய நிலை. நம் பெரியவர்களின் யுக்தி இன்றைய விவசாயிகளிடம் இல்லை. நான் தோட்டத்தை 2 மாதம் சும்மா போட்டிருந்தா என் வீட்டவர்கள் என்னைச் சோம்பேரி என்று தான் கூறுவார்கள். கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உத்தமம்.
கொழுஞ்சியில் பயன்படாத பாகங்களே இல்லை. தோட்டத்தில் வேலைக்கு வரும் பெண்கள் சிலர் வெற்றிலை போடும் பழக்கமுள்ளவர்கள். வெயில் அதிகமாக இருக்கும் வேலையில் நாக்கு அதிகமாக வரண்டு விடும். சிலர் நாக்கு வரல்வதைத் தடுக்க வெற்றிலையோடு கொஞ்சம் கொழுஞ்சி இலைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். கொழுஞ்சியை மண்ணுக்கு உரமாக்கும் பொழுது மண்ணில் தழைச்சத்தைத் தக்க வைக்கும் தன்மை 15% இருப்பதாக சொல்கிறார்கள். சிலருக்கு எரிச்சலுடனும் அடி வயிறு வலியுடனும் சிறுநீர் வெளி வரும் அப்போது கொழுஞ்சியின் வேரை எடுத்து சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று அதில் வரும் சாரைக் குடிப்பார்கள். 5 நிமிடத்தில் வயிற்றுச் சூடு அடங்கிவிடும். இது என் அனுபவம். வெயில் காலமாதலால் என் பெரியம்மா அடிக்கடி கொழுஞ்சித் தழையில் துவையல் அறைப்பார். கொழுஞ்சியை சிறிது விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் கலந்து வதக்கி அதில் மிளகாய் வற்றல், மல்லி விதை, சீரகம், புளி, உப்பு வைத்து அரைத்து வைத்துக் கொள்வார். 3 நாளைக்கெல்லாம் வைத்து ருசிப்பார்கள். கொழுஞ்சி விதையையும் எடுத்து வருத்து வெள்ளம் தேன் கலந்து பொடித்து உருண்டை பிடித்துக் கொடுப்பார் நம்ம அம்மச்சி.
துளசி, கீழாநெல்லி, ஆவாரை, கொழுஞ்சி, இலவங்கம் இத நிழலில் உலர்த்தி அவ்வப்போது கருப்பட்டி கலந்து டீ போடலாம். தலைவலி, உடல் சூடு, உடல் அழுப்பு இவற்றிற்கு நல்ல நிவாரணியாக அமையும்.. கொழுஞ்சி, மருதாணி, ஆடாதொட, செம்பருத்தி இதழ், சென்பக மொக்கு இதையெல்லாம் தேங்காயெண்ணையில் ஊரவைத்துத் தலைக்குத் தேய்ப்பார்கள்..
அந்த மண்ணும் பொண்ணும் மேட்டர் மறந்துடாதீங்க.. ;)
___
படித்ததில் பிடித்தது

No comments:
Post a Comment