Wednesday, 4 April 2012

முத்தம்


பிறப்பு: திரு கேபிள் சங்கர் அவர்களின் வலைப்பதிவிலிருந்து ...


“ஹலோ.. ஏ 9840071.... ஹேனா??”

என்கிற பெண்ணின் கரகர குரல், சற்றே பதட்டத்தோடு, என் போனில் ஹிந்தியில் பேசியது. எனக்கு தெரிந்து என்னோடு ஹிந்தி பேச தைரியம் உள்ளவர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. எனென்றால் அவர்களுடன் நான் ஹிந்தியில் பேச ஆரம்பித்தால், அது ஹிந்திதானா என்று புரியாமல் அவர்கள் விழிக்க, நான் அதுக்கு என்ன சொல்லணும், இதுக்கு என்ன சொல்லணும்னு கேட்டே அவர்களின் தாவு தீர்த்துவிடுவதால், என்னை பார்த்தாலே..காத தூரம் ஓடிவிருவார்கள். அப்படியிருக்க, என் போனில் ஓரு ஹிந்திகார பெண்ணின் குரல் கேட்டதும், யாராக இருக்கும் என்று கேட்க ஆவலாய் இருந்தாலும், ஆபீஸ் மீட்டிங்கில் இருந்ததால், காதில் இருந்த ஹெட்போனில் கேட்டு பதில் எதும் பேசாமல் போனை கட் செய்தேன்.

அடுத்த அரைமணி நேரத்தில் மூன்று கால்கள் அதே நம்பரிலிருந்து வந்திருந்தது. மீட்டிங் முடிந்து அன்றைய மண்டகப்படியை வாங்கிக் கட்டிக் கொண்டுவிட்டு வெளியே வந்தவுடன் வந்திருந்த மிஸ் காலில்லிருந்து டயல் செய்து பார்த்தேன்.

“ஹலோ....”

“யாரு சார்...

“ சார்.. இந்த நம்பர்லேர்ந்து மிஸ்ட்கால் வந்திருக்கு..?’

”சார்.. இது பிசிஓ.. உங்களுக்கு மிஸ்ட்கால் கொடுத்தவங்களை பார்கறதா என் வேலை..?’’ என்று போனை வைப்பதற்கு முன் என் பரம்பரை பற்றிய சந்தேகத்துடன் வைத்தான்.

எனக்குள் இது எனக்கு தேவையா? என்று கேட்டுக் கொண்டபடி காலை பார்கக வேண்டிய பேங்க் வேலையையெல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிப்பதற்குள், மறுபடியும் போன் அடித்தது, மீண்டும் அதே ஹிந்தி குரல், அதே கேள்வி???

“யெஸ்.. வாட் கேன் ஐ டு ஃபோர் யூ” என்று கேட்டேன்.. அவள் உடனே படபடவென ஹிந்தியில் சப்டைட்டில் இல்லாமல் பேச, அவள் பேசியதில் அவளூக்கு ஏதோ ப்ராப்ளம், அவசரம் போன்ற மிக முக்கிய வார்த்தைகள் மட்டுமே புரிய.. என்னுடய பேங்க் வேலை என்னை அழைத்தாலும் அந்த குரலுக்கு உரிய பெண்ணை பார்பதற்கு உள்ளூக்குள் ஆர்வம் எழவே...

“ஓரு மணி நேரம் கழித்து போன் செய்” என்று சொல்வதற்கு ஹிந்தியில் என்ன என்று யோசித்து சொல்வதற்குள் என்னையறியாமலே ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு , போனை வைத்துவிட்டேன்.

இம்முறை நான் பேங்கில் மேனேஜருடன் பேசிக் கொண்டிருந்த போது போன் வந்தது. மீண்டும் அதே குரல், பதட்டம், மேலும் அதிகரித்திருந்தது. “ஆதாஹூம்” என்றதும், அவள் அப்பல்லோ ஹாஸ்பிடல் அருகில் ஓரு பொட்டிகடையில் இருப்பதாய், தப்பு தப்பான ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மாற்றி, மாற்றி சொன்னாள்.

எனக்கு ஹிந்தி பேசும் பெண் யாரும் தெரியாது, மேலும் அந்ந ஆண்மையும், பெண்மையும், கலந்த கரகர குரல் என்னை இழுந்தது. ‘யாருன்னுதான் பாத்துடுவோமே’ என்றும், ‘வேணாம்டா தேவையில்லாம பிரச்சனையில மாட்டிக்க போறே’ என்றும் மனதின் ஓரத்தில் எச்சரிக்கை மணியடித்தாலும், என்னுடய் இன்குஸிடிவ்னஸ் அதிகரித்ததால் வண்டியை கிளப்பி, அப்பல்லோ ஹாஸ்பிடல் அருகில் வண்டியை பார்க் செய்துவிட்டு, அந்த பெட்டிகடையை பார்த்தேன்.. இவளா? இவளா? இவளா எனக்கு போன் செய்தவள். டேய் ரமேசு உனக்கு சுக்ரதிசை போலிருக்கு.. உனக்கெல்லாம் வாழ்வுடா, ஓசியில் கட்டிங்குக்காக போனவனுக்கு ஓரு புல் பிளாக் லேபிள் கிடைத்து போல சந்தோசமாயிருந்தது. ஓரு பதினேழு அல்லது பதினெட்டு வயசிருக்கும் அங்கே இருந்த பெண்ணுக்கு, இங்கே, அங்கே என்று எங்கேயும் எக்ஸ்ட்ராவாய் கிள்ள கொஞ்சம் கூட சதையில்லாத மாடல் போன்ற உடல் கச்சிதமாய். ஓரு அழுக்கேறிய ஜீன்ஸும், ஓரு வெள்ளைகலரில் பூப்போட்ட டாப்ஸும் போட்டு ‘ததும்பியபடி’ நின்றிருந்தாள். அவள் வயசுக்கு கொஞ்சம் ஜாஸ்திதான். ஹைஃபை பிகராய் இருந்தாள். அந்த குட்டியூண்டு கடையில் பதற்றத்தோடு அங்கேயும், இங்கேயும், பார்த்தபடி நடந்து கொண்டேயிருந்தாள்.

எனக்கு அவளை சத்தியமாய் தெரியாது. ‘தெரியாதுன்னா போயிடு’ன்னு புத்தி சொன்னாலும், மனசு கேட்கல.. உள்ளுக்குள்ள எதோ ஓரு ஆபத்துன்னு மணியடிச்சதுனாலே.. வண்டிய பார்க பண்ண இடத்திலேயே வண்டி மேலே உட்கார்ந்துகிட்டு அவளையும், அந்த ஏரியாவையும், வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன். அவ இன்னும் டென்ஷனா.. காயின் பாக்ஸ் போனிலிருந்து ரெண்டு போன் பண்ணிட்டா.. அதே நம்பர்.. கண்டிப்பா அவதான்கிற் நினைப்பே உள்ளுக்குள்ள ஜிஞ்சர் அடிச்சாப்புல இருந்துச்சு. சரி போகலாம்னு முடிவு செஞ்சு கடைசியா ஓருவாட்டி சுத்தி பார்த்து நம்மளை யாரும் கவனிக்கலைன்னு முடிவு செஞ்சு வண்டியை கிளப்பி அவள் அருகில் போய் நின்று என்ன பேசுவது என்று யோசிப்பதற்குள், அவள் என்னிடம் வந்து “ 9840071.....?’ என்று கேட்டு நான் ஆம் என்று சொல்வதற்குள் சட்டென வண்டியில் ஏறி, “ஜாவ்..ஜாவ்.. ஜல்தி..” என்று என்னை இறுக கட்டிக் கொண்டு என் முதுகில் சாய, உடலெல்லாம் ஐஸ்.. இதற்கப்புறம் எப்போது வண்டியை ஸ்டார்ட் செய்தேன், எப்போது கியர் போட்டேன் என்றெல்லாம் தெரியாது இங்கிலீஷ் பட சேஸிங் சீனில் ஹீரோயினுடன் வண்டி ஓட்டும் ஹீரோ போல அந்த குறுகிய ரோடில் எதிரே வந்த ஆம்புலன்ஸுக்கும், ஓரு ஆட்டோவுக்கும் மத்தியில் புகுந்து, வெளிவந்தேன். ’இதெல்லாம் நானா பண்ணல சார்.. தானா நடக்குது’. வண்டி ஓட்டறமாதிரியே இல்ல..பறக்குர மாதிரி இருந்தது.. அப்போது தான் பார்த்தேன் என் பின்னால் ஓரு ஆட்டோ தொடர்வதை. அது என்ன என்று புரிவதற்குள், ஆட்டோ என்னை முந்தி எனக்கு முன்னால் என்னை மறித்தபடி நிற்க, அதிலிருந்து இரண்டு பேர் இறங்கி, போதையில் இருந்தார்கள்.

“என்ன பாஸூ.. நாலு பேரு அவரா உஷார் பண்ண ட்ரை பண்றோம்.. சட்டுனு உசார் பண்ணிட்டியே..?”

இந்த சமயத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனக்கு கராத்தேயெல்லாம் தெரியாது.. இது வரைக்கும் யாரையும் அடித்ததில்லை..ஓரே ஓரு முறை வாங்கியிருக்கிறேன்.. ஓரு பெ... ..அது அநாவசியம்.. விடுங்கள்.. இப்போது என்ன செய்வது..? என்று யோசித்து பதில் சொல்வதற்குள், என்னை சுற்றி நின்று வண்டியின் சாவியை எடுக்க முயன்றார்கள்.

“ஹலோ.. இவ என் ரிலேஷன்..தெரியுமா..”

”ஹை..தபார்டா.. ரிலேசனா அப்ப எதுக்கு நைனா.. முக்கா அவரா.. நூல் உட்டுகிணு இருந்த..?”

யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்திருந்தது எவ்வளவு மடத்தனம்.. ’ ரமேஷ் எதாவது செய்..’ பின்னால் இறுக கட்டிய அந்த பெண், மேலும் இறுக்கிக் கொண்டு அட்டைமாதிரி ஓட்டிக் கொள்ள, தமிழ் சினிமாவில் பார்த்த அத்தனை ஹீரோக்களில் வீரமும் எனக்குள் புகுந்து கொள்ள, நான் சட்டென வண்டியை ஸ்டார்ட் செய்து அவர்க்ளின் மீது வண்டியை இடிக்க, அவர்களை கொஞ்சம் தடுமாற, அந்த சைக்கிள் கேப்பில் நான் வண்டியை விட, அவர்க்ள் என்னை ஆட்டோவில் துறத்த, எனக்கு எதிர்வரும் வண்டிகள் தெரியவில்லை.. ஏதாவது செய்தாகவேண்டும், என்று வெறி.. நான் வண்டியையும், ஆட்டோவில் என்னையும் துரத்த, வண்டியை நேராய் கிரீம்ஸ் ரோடில் விட்டு, எதிரே இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு முன் வண்டியை நிறுத்தி, பின்னால் வந்த ஆட்டோவை பார்த்தேன். அவர்களும் வண்டியை சடன்பிரேகிட்டு நிறுத்தி என்ன செய்ய போகிறேன் என்றபடி பார்க்க, இந்த சந்தடி சாக்கில் எதிர்பக்கம் வண்டியை சடாரென திருப்பி விட, இதை எதிர்பார்காத அவர்கள் வண்டியை ஸ்டார்ட் செய்வதற்குள், ட்ராபிக் அதிகமாகி, திரும்ப முடியாமல் திண்டாடுவதை பார்ததுதான் கடைசி. நிமிடங்களிள் வண்டியை ஹடவுஸ்ரோடில் விட்டு திரும்பி, மகாத்மா காந்தி ரோடில் திரும்பிய போது, பின்னாலிருந்து “பூக் லக்தாஹே..” என்றது கிளி. உடனே வண்டியை அருகிலிருந்த ராமாஸ் ஹோட்டலுக்குள் விட்டேன்..

என்ன வேண்டும் என்று கேட்டதற்கு தோசா என்றாள்.. நான் சாப்பிட்டுவிட்டேன் அதனால் அவளுக்கு மட்டும் தோசா என்று சொல்லும் போது அவள் இடைமறித்து ‘’ டூ தோசா” என்றாள். நான் அதையே வழிமொழிந்துவிட்டு.. நீயார். உன் பேர் என்ன..என்று கேட்பதற்கு எனக்கு தெரிந்த இந்தியில் வார்த்தை சேர்த்து கேட்பதற்குள்..

“மேரா நாம்..நிஷா..” என்றாள்..

அதே கரகர குரலில் நான் அவள் பேசுவதை கேட்பதா.. பேசும் அவள் உதடுகளை பார்பதா.. என்ற குழப்பத்திலிருந்தால்.. எதுவும் பேசாமல் அவளையே பார்த்து கொண்டிருக்க, அவளின் குரல் ராணி முகர்ஜியின் குரல் போலிருந்தது.அதற்குள் தோசை வந்துவிட்டது.

இதுவரை நான் ஓரு பெண் இப்படி சாப்பிட்டு பார்த்தேயில்லை. ஐந்து நிமிடங்களில் இரண்டு தோசைகளையும் ஓரே மூச்சில் சாப்பிட்டுவிட்டு, கொஞ்சம் ஆசுவாசமாகி, தண்ணீர் குடித்துவிட்டு.. என்னை நிமிர்ந்து பார்த்து..

“ நீ என்னிடம் வந்திருக்கிறாயா..?”

வந்திருக்கிறாயாவா...? என்றதும் எனக்கு தூக்கி வாரி போட்டது.. யார் இவள்..? எந்த மாதிரியான பெண் இவள்..? தெரியாமல் பிரச்சனையில் மாட்டிவிட்டோமோ..? எப்படி என் நம்பர் இவளூக்கு கிடைத்தது..? என்று பல கேள்விகள் என்னுள் ஓடியது..

“ நீ இவ்வளவு யோசிப்பதை பார்த்தால். என்னிடம் வந்தவனில்லை போலிருக்கிறது.. பிறகு எப்படி உன் நம்பர் என்னிடம்..?” என்றபடி தன் பின் பாக்கெட்டிலிருந்து ஓரு துண்டு பேப்பரை எடுத்து அதிலிருந்த நம்பரை எனக்கு காட்டினாள். அதில் சட்டென்று பார்த்தால் என் நம்பரை போலவே இருந்தது.. ஆனால் அது என் நம்பர் அல்ல.. 9841071.... என் நம்பர் 98400வில் ஆரம்பிக்கும். ஓன்றுடன் சேர்த்த மாதிரி ஜீரோவை போட்டதால் இரண்டு ஜீரோ போல தோன்றியது.

“உன்னை பார்த்தால் என்னிடம் வந்து போனவன் போல் தெரியவில்லை.. எனக்கு வழக்கமாய் முகங்கள் ஞாபகம் இருப்பதில்லை. என்னை முதன்முதலில் மேய்ந்தவனை தவிர.. மாதர்சோத் என் அண்ணன் முறை, சூத்தியா.. அவன் முகத்தை என்னால் மறக்க முடியாது. என்னை மிகப் பெரிய மாடலாக்கி காட்டுகிறேன் என்றவன் பாம்பாயிலிருந்து சென்னை வந்தேன்.. இதிலிருந்தே என்னை பற்றி புரிந்திருக்கும். எவ்வளவு விஷய ஞானம் உள்ளவள் என்று.

அதற்கு அப்புறம் கொஞ்சநாள் தனிமையில் சுறுங்கி போய் அழுதேன்.. சில நாட்களில் விடிய விடிய அழுதேன். நான் இந்த நிலையில் தள்ளப்பட்டதை விட என் அண்ணனின் துரோகம் என்னை துக்கத்தில் அழுத்தியது. ஓரு நிலையில் அழுது பிரயோஜனமில்லை என்று புரிந்தவுடன் எப்படியாவது நாலு காசு சம்பாதித்து அடைய வேண்டியதை அடைய முடிவு செய்தேன்.

கடந்த மூன்று மாதத்தில் பல இடங்கள், பல வீடுகள்.. அங்கே வந்த ஓருவன் தான் இந்த நம்பரை கொடுத்தான். மாடல் கோஆர்டினேடர் என்றான். உன்னை பெரிய ஆளாக்குகிறேன் என்றான். பம்பாய்க்கு வந்து பார்க்க சொல்லி அட்ரஸ் கொடுத்தான். நான் இருந்த வீட்டில் ரெயிட் வந்துவிட்டது. அது ஓரு மார்வாடி வீடு.. இங்கே தான் ரெஸிடென்ஸி ஹோட்டலுக்கு பக்கத்தில்.. அங்கிருந்த தப்பிக்கும் போது என் உடமைகள் எல்லாமே போய்விட்டது.

ஓரு நாள் முழுவதும் எங்கிருக்கிறோம் என்று தெரியாமல் அந்த ஹோட்டலின் சுவரோரமாய் இருந்த ஜெனரேட்டர் ரூமில் ஓளிந்திருந்தேன். அப்படியே தூங்கிவிட்டேன். ராத்திரி அடித்த ஜின்னின் வேலை. விழித்து பார்த்தபோது என் ஆடைகள் கலைந்திருந்த்து.. போதையின் உச்ச தூக்கத்தில் எவனோ ஆடிவிட்டு போயிருக்கிறான். கிழே காண்டம் கவ்ர் ஓன்று இருந்தது. இந்த வரைக்கும் பரவாயில்லை. வெளியே வரும் போதுதான் அந்த ஹோட்டலின் பெயர் தெரிந்தது.

’கடந்த இரண்டு நாளாய் சாப்பிடவில்லை. கையில் சில்லரை காசுகளை தவிர வேறேதுமில்லை.. என்னிடமிருந்த ஒரே ஓரு நம்பர் இது ஓன்றுதான். அதனால்தான் வேறு வழியில்லாமல் தொடர்ந்து அதை முயற்சி செய்து கொண்டிருந்தேன்.’’

இதற்குள் பில் வந்து அதை செட்டில் பண்ணிவிட்டு வெளியே வந்திருந்தோம்.. இப்போது அவள் முகத்தில் பரபரப்பு குறைந்து, அமைதியாகி மேலும் அழகாயிருந்தாள். ரோடில் போகிறவர்களின் பார்வையெல்லாம்.. எங்கள் மீது சூடாய் இருந்தது.

”இப்போது என்ன செய்யலாம்..?”

“ஓரு தம் அடிக்கலாமா..? எனக்கு கிளாசிக் மைல்ட்.. உனக்கு..? நீ அடிப்பாயல்லவா..? நான் வாங்குகிறேன் என்னிடம் சில்லறை மட்டுமே இருக்கிறது.“

இரண்டு சிகரெட்டுகளை வாங்கி பற்ற வைத்து எனக்கும் பற்ற வைத்து.. ஆழமாய் ஓரு இழுப்பு இழுத்தாள். முதன் முதலாய் ஓரு பெண் தம் அடிப்பதை நேரில் பார்கிறேன். நன்றாக ஆழ்ந்து உள்ளே புகையை இழுத்து அனுபவித்து, வெளியே விட்டாள்.

“சொன்னால் நம்ப மாட்டாய்.. இதெல்லாம் இந்த மூன்று மாதங்களில் பழகி கொண்டது. சமயங்களில் இதை உதடுகளில் வைத்து இழுக்கும் போது என்னிடம் வந்து ஊறுஞ்சுபவர்கள் நினைவுக்கு வரும்..”

அவள் அப்படி பேசியது கொஞ்சம் அசூசையாய் இருந்தாலும், இந்த சின்ன வயதில் எவ்வளவு வலி மிகுந்த அனுபவங்கள். அவளை பார்க்கும் போது முதலில் இருந்த பரபரப்பு எல்லாம் இறங்கி போய் பரிதாபமே மிஞ்சியது.. இவ்வளவு பிரச்சனையிலும் அவள் உறுதியாய் பேசுவது ஆச்சர்யமாய் இருந்தது. அவள் மேல் ஓரு மரியாதையும் கொடுத்தது.

“சரி.. இப்போ என்ன செய்யலாம்.. உன்னை எங்கே ட்ராப் செய்யட்டும்..?”

“எனக்காக ஓரு உதவி செய்வாயா.. வாயா.. என்ன கண்டிப்பாய் செய்தாகவேண்டும்.. அதை தவிர வேறு வழியில்லை. என்னை கூட்டிக் கொண்டு மீனம்பாக்கம் ஏர்போர்ட் போ.. எதாவ்து ஓரு ப்ளைடில் எனக்கு பம்பாய்க்கு ஓரு டிக்கெட் எடுத்து கொடு..கொஞ்சம் செலவுக்கு நூறோ.. இரநூறோ.. கொடு போதும். மேலே தேவையென்றால் தேற்றுவது எப்படி என்று எனக்கு தெரியும். என்னை சேர்ந்தவர்கள் கண்டிப்பாய் ரயில் நிலையம் பக்கத்தில் தேடிக் கொண்டிருப்பார்கள் அதனால் தான் ஏர்போர்ட். உன் விலாசம் கொடு.. கண்டிப்பாய் உன்க்கு திருப்பி தருவேன்.”

நான் பதிலேதும் பேசாமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய.. அவளூம் வண்டியில் ஏறிக் கொண்டாள்.. ரொம்ப நேரம் ஏதும் பேசாமல் வண்டியோட்டி கொண்டு வந்தேன். எதற்காக இவளுக்கு உதவி செய்கிறேன்.? இவளுக்கும் எனக்கும் என்ன உறவு..? ஏன் எதையும் மறுக்காமல் இவள் சொல்வது போல்.. செய்கிறேன்.? ஓரு வேளை இவள் அழகில் மயங்கிவிட்டேனோ.? என்னை ஏமாற்றுகிறாளோ..? என்று பல எண்ணங்கள் என்னை சுற்றி வந்ததால் யோசித்து கொண்டே வண்டியோட்ட, வண்டியில் எப்போது உட்கார்ந்தாலும் என்னை அணைத்தபடியே வந்தவளின் இறுக்கம் மேலும் அதிகமாகியது. அவளின் இருக்கத்தை என் முதுகு அழுத்திய பஞ்சாய் உணரும் போதே.. மெல்ல என் காதோரம் வந்து அதன் நுனியை தன் நாக்கால் சீண்ட, எனக்குள் ஜிவ்வென்ற உணர்வு சகல எடத்துக்கு பரவ, கண்ட்ரோல் செய்ய முடியாமல் நான் வண்டியை ஸ்லோ செய்தேன்.

“க்யா.. கடே ஹோகயா..? நீ எனக்கு உதவி செய்திருக்கிறாய், எனக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய், செலவு செய்கிறாய். என்ன தான் நான் திருப்பி கொடுக்கிறேன் என்று நம்பினாலும், என்னால் உனக்கு எதும் பலன் இல்லை.. அதனால் தான் சொல்கிறேன் இங்கேயே ஏதாவது ஓரு ஹோட்டலில் ஓரு அறை எடு..அல்லது உன் நண்பர்கள் இடமிருந்தால் சொல்லு.. உனக்கு நான் எத்தனை நாள் இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ அது வரை இருக்கிறேன். யோசிக்காதே.. என்னை பார்த்து உனக்கு ஏதும் தோன்றவில்லை என்றால் நான் நம்ப மாட்டேன்.. தயக்கமென்றால் உன்னை கிளப்புவது எப்படி என்று எனக்கு தெரியும். வா.. “ என்றாள்.

நான் எதுவும் பேசாமல் வண்டியை ஏர்போர்ட் பார்கிங்கில் நிறுத்திவிட்டு பாம்பேக்கு என் கார்டிலிருந்து தேய்த்து டிக்கெட் எடுத்தேன். இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது. என் கையை இறுக பற்றியபடி கண்களில் ஓரு விதமான ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டேயிருந்தாள்.

லவுஞ்சில் காபிஷாபிலிருந்து இரண்டு காபி வாங்கி, அவளிடம் கொடுத்தேன். காபியை உறிஞ்சியபடி என்னை பார்த்து

“நிஜமாவே என் கூட இருக்க விருப்பமில்லையா..? இப்போது கூட நான் ரெடி.. என்னால் தாங்க முடியவில்லை. ஏதோ கடன் பட்டதை போலிருக்கிறது. ஓரு வேளை நான் விபசாரி என்பதால் என்னை பிடிக்கவில்லையா..?” என்கிற போதே அவள் கண்களில் கண்ணீர் பனிக்க ஆரம்பிக்க,

“ ஹேய் என்ன இது... விருப்பமில்லாமல் இல்லை.. ஆனால் சந்தர்பத்தை பயன் படுத்த விருப்பமில்லை. என்னை பொறுத்தவரை செக்ஸ் இயல்பாய் இருக்க வேண்டும். அதுவும் முன் பின் பழகாமல் எனக்கு கொஞ்சம் கஷ்டம். அதனால்தான்.” என்றபடி அவளின் கண்ணீரை துடைத்து விட்டேன்.

அழுத முகம் இன்னும் சிவந்து அழகாய் இருந்த்து. அப்படியே அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டுமென்று தோன்றியது.. அப்படி செய்தால் இன்னமும் உடைந்துவிடுவாளோ என்று பயந்து செய்யாமல் இருந்தேன். எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது இதுவரை அவளிடம் ஹிந்தியில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது.

பம்பாய்கான ப்ளைட் அறிவிப்பு வர அவள் தன் முகத்தை இறுக்க அழுத்தி, உள்ளுக்குள் பெரிதாக ஓரு பெருமூச்சு விட்டு,
“ ஓகே.. நான் கிளம்புகிறேன்... பட் கண்டிப்பாய் உன் பணம் உனக்கு திரும்ப வரும் . உன் அட்ரஸ் கொடு.. போன் நம்பர் கொடு..” என்றாள்.

நான் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அவள் அட்ரஸையும், போன் நம்பரையும் வாங்கி கொண்டு செக்யூரிட்டி செக் வாசல் வரைக்கும் சென்றவள்.. என்ன நினைதாளோ.. அங்கிருந்து ஓடி வந்து அந்த் கூட்டமிருந்த லவுஞ்சில் என்னை இறுக அணைத்து என் உதட்டோடு அழுத்தமாய் முத்தமிட்டு...” பை.. எந்த விதமான் எதிர்பார்பும் இல்லாம் உதவும் ஓரு ஆணை இன்றுதான் பார்தேன்.. நன்றி.. வந்தனம்.. உன்னை மறக்க மாட்டேன். என்று சொல்லியபடி அழுது கொண்டே உள்ளே போனாள்..

நான் அவள் போவதையே பார்த்து கொண்டிருந்தேன். அவள் முத்தமிட்ட உதடுகளில் லேசான வலி இருந்தது.

No comments:

Post a Comment