Friday, 5 April 2013

நான் புனே போன கதை

ஒரு ரெண்டு வருசத்துக்கு சென்னை சூளைமேடுல நானும் என்னுடைய நண்பர்களும் ஒரு வாடகை வீட்ல தங்கி இருந்தோம். இப்போ அது மேட்டர் இல்ல. மேட்டர் என்னன்னா ..... சொல்றேன்...

அப்போ எல்லோருக்கும் (ரூம்ல இருந்த என்னுடைய நண்பர்கள் ) பேருக்கு வேலைன்னு ஒன்னு இருந்துச்சு. ஒரு நாள் நைட் நான் என்னுடைய நண்பர்கள் முருகேஷ் மற்றும் கார்த்தி (இவர் தான் இந்த கதையோட ஹீரோ ) மூணு பேரும் சாப்பிட போனோம். ஏதோ பேசிக்கொண்டு இருக்கையல திடிர்ருன்னு பேச்சு புனே பக்கம் போச்சு. நானும் புனே போய் இருக்கேன்னு சொன்னேன்.(கனவுல ... இது நம்ம ஹீரோவுக்கு தெரியாது )

நான் சொன்னதும் அவன் அப்படியே ஷாக் ஆகிட்டான்

"எப்படா  போனா"

"டென்த் படிக்கும் போதுடா "

"எதுல போனா "

"எங்க ஊர்ல இருந்து  மாமா கூட கார்ல போனேன் (இதெல்லாம் எப்படின்னு கூட இன்னும் தெரியல.. அதுவா வருது..... இன்னும் கூட கார்ல நாலு கிலோ மீட்டருக்கு மேல போனது இல்ல ...  )".

"கார்லையா ஹ்ம்ம்"  கொஞ்சம் பீல்  பன்னுனான்.

"எதுக்கு"  ன்னு கேட்டான்.

"எங்க மாமா அங்க வண்டி ஒட்டுறார் அவர் கூட சும்மா போனேன்". (ஆனா உண்மைல அவரு வண்டி ஒட்டுனது கள்ளகுருச்சில )

"என்ன வண்டி"

"புல் டோசர்"  (அப்போ இந்த வண்டி நார்த்ல கொஞ்சம் அதிகமா ஓடி கொண்டு இருந்துச்சு).

"ஓ"
 --

Oh my God
இதுக்கும் மேலையும் நம்ம ஹீரோ கண்டு பிடிக்கல (பின்ன நான் கார்ல... அதுவும் புனே வரைக்கும் போனேன்னு சொன்னா யாரவது நம்புவாங்கள )
சரி  சாப்பிட்டு ரூம் போற வரைக்கும்கொஞ்சம் என்டேர்டைன்மென்ட் வேணும்ல ... நானும் என்னுடைய கற்பனை  கதைய கண்டின்யூ பண்ணேன்.
--
எவ்ளோ  நாள் ஆச்சுன்னு கேட்டான்.

ஆமாடா, ரெண்டு நாள் ஆச்சு ஜாலியா வெடிக்க பார்த்துக்கொண்டே போனேன். எங்க மாமா அப்போ மாருதி 800 வச்சுருந்தார் அதுல தான் போனேன்.(சத்தியமா அப்போ அந்த கார் இருந்துச்சா என்னனு கூட எனக்கு  தெரியாது).

கூட வந்த முருகேஷ் எதுவுமே பேசல. இவனும் நம்புறான்  போலன்னு நெனைச்சேன். ஆனா பய கொஞ்சம் உசாரு . கேள்வி கேக்கல.

வரும் போது வாழைப்பழம் கூட  வாங்கி  கொடுத்தான்.(மனசு கேக்கல இருந்தாலும் ஒரு பழம் போயிருமே உண்மைய சொன்னா ... கொஞ்சம் நேரம் கழித்து சொல்லுவோம்ன்னு விட்டுடேன் )...

இப்படியாக சாப்பிட்டு முடுச்சிட்டு ரூம்க்கு ஸ்டெப் ல வரும் போது சொன்னேன்.

"ஏண்டா இதெல்லாம் நம்புறையான்னு "

ஒரு ரியாக்சன் குடுத்தான் பாருன்ங்க தனுஷ் படிக்காதவன் படத்துல ஆர்த்தி I LOVE YOU MAMA ன்னு சொன்னதுக்கு ஒரு ரியாக்சன் குடுப்பரே அதே மாதிரி.

முருகேஷ் கேக்கபிக்கே சிரிகுறான்.

 அப்புறம் கொஞ்ச நேரம் ஏதுவுமே பேசல.

இந்த மாதிரி அப்பாவி இருந்தவரு இப்போ .....

.
.
.
.
.
.
.
"  கொஞ்சம்" உசார்ராகிட்டான்.


சாரி  மிஸ்டர் கார்த்தி ... :)

4 comments:

  1. //இன்னும் கூட கார்ல நாலு கிலோ மீட்டருக்கு மேல போனது இல்ல// awesome


    //மனசு கேக்கல இருந்தாலும் ஒரு பழம் போயிருமே உண்மைய சொன்னா ... கொஞ்சம் நேரம் கழித்து சொல்லுவோம்ன்னு விட்டுடேன்//factu...factu factu...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிட்டது தான் ... :)

      Delete
  2. So Kena payan a iruntha Kathi ushar aagitaru nu sola varinga

    ReplyDelete
    Replies
    1. @கார்த்தி ... இதுக்கு நிவாகம் பொறுப்பு ஏற்காது .... :)

      Delete